Budget 2024, மோடி 3.0: தயாராகிறார் நிதி அமைச்சர்... பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்குகிறது?
Budget 2024: மோடி அரசின் மூன்றாவது ஆட்சியின் முதல் பட்ஜெட்டை ஜூலை மூன்றாவது வாரத்தில் நிதியமைச்சர் தாக்கல் செய்யக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Budget 2024: பாஜக தலைமையிலான எண்டிஏ அரசாங்கம் மூன்றாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக பதவியேற்ற அமைச்சர் கிரண் ரிஜிஜு, 18வது மக்களவையின் முதல் அமர்வு ஜூன் 24ஆம் தேதி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிப்பிரமாணத்துடன் தொடங்கி ஜூலை 3ஆம் தேதி முடிவடையும் என்று கூறினார். அமர்வின் முதல் மூன்று நாட்களில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் சத்தியப்பிரமாணம் செய்து, அவைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள். இதனுடன், மக்களவை சபாநாயகர் தேர்தலும் ஜூன் 26ம் தேதி நடக்கிறது.
Modi Government 3.0: முதல் பட்ஜெட் தாக்கல்
மோடி அரசின் 2024-ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டும் (Union Budget 2024) இந்தக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும். 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன், பிப்ரவரி 1ஆம் தேதி, இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) தாக்கல் செய்தார். இதில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான சில சாதகமான அறிவிப்புகள் வெளிவந்தன. இப்போது புதிய மக்களவையின் முதல் அமர்வில் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிர்மலா சீதாராமன் மீண்டும் தயாராகிவிட்டார். மோடி அரசின் மூன்றாவது ஆட்சியின் முதல் பட்ஜெட்டை ஜூலை மூன்றாவது வாரத்தில் நிதியமைச்சர் தாக்கல் செய்யக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிர்மலா சீதாராமன் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வார்
ஜூன் 24, 2024 முதல் தொடங்கும் முதல் அமர்வில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு மற்றும் சபாநாயகர் தேர்வுக்குப் பிறகு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூன் 27 அன்று மக்களவை மற்றும் மாநிலங்களவையின கூட்டத்தில் உரையாற்றுவார். புதிய அரசாங்கத்தின் அடுத்த ஐந்தாண்டுக்கான திட்டங்களை பற்றி அவர் இதில் பேசக்கூடும். கூட்டத்தொடர் ஜூலை 3ம் தேதி நிறைவடையும். கூட்டத்தொடரின் முதல் மூன்று நாட்களில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்து, மக்களவை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
ஜூலை மூன்றாவது வாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மீண்டும் கூடும். இந்த அமர்வில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. ஜூலை மாதம் மத்திய பட்ஜெட்டை (Union Budget 2024) தாக்கல் செய்வதன் மூலம், தொடர்ந்து ஏழு மத்திய பட்ஜெட்டுகளை தாக்கல் செய்யும் முதல் நிதி அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுவார். வரவிருக்கும் பட்ஜெட்டில், மொரார்ஜி தேசாய் சாதனையை அவர் முறியடிப்பார். தேசாய் தொடர்ந்து ஆறு பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தார்.
மாநிலங்களவையின் 264வது கூட்டத்தொடர் எப்போது தொடங்கும்?
மாநிலங்களவையின் 264வது கூட்டத்தொடர் ஜூன் 27ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி முடிவடையும் என சமூக வலைதளத்தில் ரிஜிஜு பதிவிட்டுள்ளார். ஜூன் 27ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரைக்குப் பிறகு பிரதமர் மோடி தனது அமைச்சர்கள் குழு உறுப்பினர்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவார் என்று தெரிகிறது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) அரசுக்கு முட்டுக்கட்டை போட முயற்சி செய்யலாம். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் பதில் அளிப்பார்.
நாடாளுமன்ற விவகார அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு (Kiren Rijiju) புதன்கிழமை அனைத்து அரசியல் கட்சிகளும் நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதத்தில் ஈடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். சபையில் நல்ல விவாதத்தை நாடு காண விரும்புகிறது என்று அவர் கூறினார். நாடாளுமன்ற விவகார அமைச்சராக புதிய பொறுப்பை ஏற்று ஒரு நாள் கழித்து செவ்வாய்கிழமையன்று ரிஜிஜு, மக்கள் தங்கள் ஆணையை வழங்கியிருப்பதால் ஒருமித்த கருத்துடன் நாடாளுமன்றத்தை நடத்த அரசாங்கம் விரும்புகிறது என்றும், நாட்டிற்கு சேவை செய்ய அனைவரும் 'டீம் இந்தியா' என்ற உணர்வில் பணியாற்ற வேண்டும் என்றும் கூறினார்.
நாடாளுமன்றத்தில் தரமான விவாதம் நடத்த வேண்டும்: கிரண் ரிஜிஜு
நாடாளுமன்றத்தில் தரமான விவாதம் நடத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 'நாடாளுமன்றத்தில் அர்த்தமுள்ள விவாதத்தைக் காண நாடு விரும்புகிறது. சபையை சுமூகமாக நடத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.' என்று அவர் மேலும் கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ