Budget 2024: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு... 8வது ஊதியக் கழு, சம்பள உயர்வு!!
Budget 2024: நீங்கள் மத்திய அரசு ஊழியராக இருந்தாலோ அல்லது உங்கள் குடும்பத்தில் யாரேனும் மத்திய பணிகளில் இருந்தாலோ, இந்த பட்ஜெட்டில் உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.
Budget 2024: 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2024 அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) தாக்கல் செய்யவுள்ளார். இந்த ஆண்டு பொதுத்தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், இந்த பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாக (Interim Budget) இருக்கும். தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு அமைந்த பிறகு ஜூலை மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இடைக்கால பட்ஜெட்டாக இருப்பதால் முக்கிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகாது என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பட்ஜெட் 2024 எதிர்பார்ப்புகள் (Budget 2024 Expectations)
நீங்கள் மத்திய அரசு ஊழியராக (Central Government Employees) இருந்தாலோ அல்லது உங்கள் குடும்பத்தில் யாரேனும் மத்திய பணிகளில் இருந்தாலோ, இந்த பட்ஜெட்டில் உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கக்கூடும். 8வது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என மத்திய ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும் அரசு தரப்பில் சாதகமான அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை. தற்போது 8வது ஊதியக்குழுவை கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கவில்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இம்முறை மக்களவை தேர்தலுக்கு (Lok Sabha Election) முன் வரவிருக்கும் பட்ஜெட்டில் 8வது சம்பள கமிஷன் தொடர்பான குறிப்பை அரசு தரலாம் என கூறப்படுகின்றது.
தேர்தலுக்கு முன், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது
பட்ஜெட்டுக்கு பின்னர் மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ளதால், மோடி அரசின் இரண்டாவது ஆட்சியின் கடைசி பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். தேர்தலுக்கு பின் தேர்ந்தெடுக்கப்படும் அரசு, நாட்டின் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். அத்தகைய சூழ்நிலையில், இடைக்கால பட்ஜெட் தேர்தலில் வெளிவரும் அறிவிப்புகள் தேர்தல் கண்ணோட்டத்தில் பார்த்தால் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இருக்காது என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
Union Budget 2024: குறைந்தபட்ச சம்பளத்தில் பெரிய அதிகரிப்பு இருக்கலாம்
மத்திய அரசு ஊழியர்களுக்கு இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகளை வெளிவரக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எட்டாவது ஊதியக் குழு (8th Pay Commission) பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகின்றது. அடுத்த ஊதியக்குழு அமலுக்கு வந்தால், ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தில் பெரும் உயர்வு ஏற்படும். இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடக்கவுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், தேர்தல் ஆண்டைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஊழியர்களை மகிழ்விக்க அரசு இந்த அறிவிப்பை வெளியிடக்கூடும்.
தேர்தலுக்கு முன் அறிவிப்பு வெளியாகலாம்
அடுத்த சம்பள கமிஷன் குறித்த அறிவிப்பு 2024 பொதுத் தேர்தலுக்கு முன் அதாவது பட்ஜெட்டில் வெளியிடப்படும் என கூறப்படுகின்றது. புதிய ஊதியக் குழுவில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்பதற்கான மொத்த பொறுப்பு புதிய ஊதியக் குழுவின் தலைவரிடம் இருக்கும். அவரது மேற்பார்வையில் குழு அமைக்கப்படும். எட்டாவது ஊதியக் குழுவை அமல்படுத்தினால், ஊழியர்களின் சம்பளத்தில் (Salary) பெரும் ஏற்றம் ஏற்படும். ஃபிட்மெண்ட் ஃபாக்டரிலும் (Fitment Factor) சில மாற்றங்கள் இருக்கலாம். இதன் பிறகு ஊதியத்தில் சுமார் 44% உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. அரசு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக் குழுவை அமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ