Budget 2024: NPS சந்தாதாரர்களுக்கு குட் நியூஸ்? கூடுதல் வரி விலக்கு கோரும் PFRDA

Budget 2024: இந்த முறை பட்ஜெட்டில், தேர்தலுக்கு முன், வருமான வரியில் அரசு சில சலுகைகளை வழங்குமா, இல்லையா என்ற எதிர்பார்ப்பு இன்னும் உள்ளது

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 10, 2024, 05:50 PM IST
  • பட்ஜெட் 2024 எதிர்பார்ப்புகள்.
  • NPS இல் வரி விலக்கு.
  • இப்போது உள்ள விதிகள் என்ன?.
Budget 2024: NPS சந்தாதாரர்களுக்கு குட் நியூஸ்? கூடுதல் வரி விலக்கு கோரும் PFRDA title=

Budget 2024: பிப்ரவரி 1 ஆம் தேதி நாட்டின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இந்த முறை மக்களவைத் தேர்தல் (Lok Sabha Election) நடைபெற உள்ளதால் இடைக்கால பட்ஜெட் (Interim Budget) தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆனால், இந்த முறை பட்ஜெட்டில், தேர்தலுக்கு முன், வருமான வரியில் அரசு சில சலுகைகளை வழங்குமா, இல்லையா என்ற எதிர்பார்ப்பு இன்னும் உள்ளது. இது தொடர்பாக, தனிநபர் மற்றும் நிறுவன வருமான வரியில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதேபோல், அரசு ஓய்வூதிய திட்டமான தேசிய ஓய்வூதிய முறைக்கு (National Saving System) வரி விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. 

NPS-ன் செயல்பாட்டை மேற்பார்வையிடும் PFRDA (Pension Fund Regulatory and Development Authority) தரப்பில் கடந்த ஆண்டு முதல் என்பிஎஸ் -க்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.

பட்ஜெட் 2024 எதிர்பார்ப்புகள் (Budget 2024 Expectation):

NPS இல் வரி விலக்கு (NPS Tax Exemption)

சமீபத்தில், PFRDA தலைவர் தீபக் மொகந்தி NPS இல் வரி விலக்கு தொடர்பான தனது கருத்தை மீண்டும் வலியுறுத்தினார். கடந்த ஆண்டு நவம்பர் மாதமும் இதற்கான தேவையை அவர் முன்வைத்திருந்தார். ஊழியர் பங்களிப்பின் மூலம் NPS இல் முதலீடு செய்யப்படும் தொகைக்கு EPFO ​​இன் திட்டமான PF (Provident Fund) முறையில் வரி விலக்கு (Tax Exemption) அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார். PF இல் உள்ளதைப் போல PFRDA இப்போது வரி தள்ளுபடியை 12 சதவிகிதம் அதிகரிக்க கோரியுள்ளது என்று மொஹந்தி கூறியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால், அதை 14 சதவீதமாக கொண்டு செல்வதே அவர்களின் இலக்கு. 

மேலும் படிக்க | பணமில்லா சிகிச்சை அளிக்கும் காப்பீடு... நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

இப்போது உள்ள விதிகள் என்ன?

பிஎஃப்-ல் முதலாளி செலுத்தும் பங்களிப்பில் சம்பளத்தில் (அடிப்படை + அகவிலைப்படி) 12 சதவிகிதம் கழிக்கப்படும். இதில் அதிகபட்ச வரம்பு ரூ.7.5 லட்சம். இந்த பங்களிப்பில் பெறப்படும் வட்டிக்கு வரி இல்லை. மாறாக, NPS இல் முதலாளியின் / நிறுவனங்களின் பங்களிப்பில் சம்பளத்தில் (அடிப்படை + அகவிலைப்படி) 10 சதவீதத்திற்கு மட்டுமே வரி விலக்கு கிடைக்கிறது

வருமான வரிச் சட்டத்தின் (Income Tax Act) பிரிவு 80CCD(2)ன் கீழ் NPSக்கான தங்கள் பங்களிப்புகளின் மீது முதலாளிகள் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் வரிச் சலுகைகளைப் (Tax Benefit) பெறலாம். அவர்கள் தங்கள் பணியாளரின் சம்பளத்தில் 10 சதவீத பிடித்தத்திற்கு க்ளெய்ம் செய்து, அதை வணிகச் செலவாகக் காட்டலாம். இங்கு அதிகபட்ச விலக்கு ரூ.7.5 லட்சம் வரை மட்டுமே பெற முடியும்.

முன்னதாக, PFRDA தலைவர் கடந்த ஆண்டு நவம்பரில் இதே கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியிருந்தார். மேலும் இந்த திட்டத்தில் முறையான மொத்த தொகை திரும்பப் பெறுவது (Systematic Lumpsum Withdrawal) 100 சதவீதம் செய்யப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார். SWL தொடர்பாக PFRDA புதிய விதியையும் வெளியிட்டுள்ளது. இப்போது சந்தாதாரர் படிப்படியாக தொகையை திரும்பப் பெறும் வசதியைப் பெறுவார். இப்போது சந்தாதாரர்கள் 75 வயது வரை மாதந்தோறும், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் தங்களின் ஓய்வூதியத் தொகையில் 60 சதவீதத்தை திரும்பப் பெறலாம்.

மேலும் படிக்க | Budget 2024: வரி செலுத்துவோருக்கு மிகப்பெரிய நிவாரணம்... வரி விலக்கு வரம்பில் மாற்றமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News