‘இந்த’ தொழில்களை செய்தால்..கல்லூரி மாணவர்களும் கை நிறைய சம்பாதிக்கலாம்!
பலருக்கும் கல்லூரிக்கு செல்லும் போதே பணத்தேவைகள் நிறைய இருக்கும், அதனால் சிறு தாெழில்கள் செய்ய வேண்டும் என்று யோசிப்பர். அவர்களுக்கான வணிக டிப்ஸ், இதோ.
கல்லூரிக்கு சென்று, ஒரு பட்டப்படிப்பை முடித்தால்தான் நல்ல வேலை கிடைக்கும், பணம் சம்பாதிக்க முடியும் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். இது ஒருவகையில் உண்மை என்றாலும் கூட, கல்லூரியில் படிக்கும் பல மாணவர்களுக்கு பணத்தேவைகள் இருக்கலாம், அல்லது அவர்கள் ஒரு ஹாபியாக கூட சிறு தொழில்களை செய்யலாம். அப்படி படித்துக்கொண்டிருக்கும் போதே பணம் சம்பாதிக்க, எளிய வழிமுறைகள் இதோ.
பயிற்சி ஆசிரியர்:
பயிற்சி ஆசிரியராக இருப்பது அல்லது இல்லத்தில் இருந்தவாறே டியூஷன் எடுப்பது ஆகியவை, சிறந்த வருமானம் ஈட்டும் தொழில்களாகும். கல்லூரி மாணவர்கள், அவர்களின் திறனுக்கு ஏற்றவாறு பயிற்சி வகுப்புகளை எடுக்கலாம். உதாரணத்திற்கு மொழி கற்றுத்தருவது, டெக் சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஆகியவற்றை கற்றுக்கொடுக்கலாம்.
வடிவமைப்பாளர்:
வடிவமைப்பு தொழில் ஆடை முதல், போஸ்டர் டிசைனிங் வரை அனைத்திற்கும் வடிவமைப்பாளருக்கான பணிகள் நிறையவே உள்ளன. வெப் டிசைனிங், மென்பொருள் வடிவமைப்பாளர், லோகோ டிசைனிங், ஆடை வடிவமைப்பு ஆகியவற்றிற்கு பணிகள் இருக்கின்றன. இதன் மூலம் பலமடங்கு வருமானத்தையும் பார்க்கலாம்.
சோஷியல் மீடியா மேனேஜர்:
தொழில் நிறுவனங்கள் பல, சமூக வலைதளங்கள் மூலம் தங்களது வாடிக்கையாளர்களை கவர முயல்கின்றன. அதற்காக, சமூக ஊடகங்களை பார்த்துக்கொள்வதற்கென்று ஒரு மேனேஜரையும் நியமிக்கின்றன. அதிலும், விளம்பர துறை நிறுவனங்கள், இதில் முன்னோடிகளாக இருக்கின்றன. இதில் சேர விரும்பினால் பகுதி நேரமாகவோ, இண்டெர்ன்ஷிப்போ சேர்ந்து கொண்டு, இது குறித்த திறன்களை கற்றுக்கொள்ளலாம். பின்பு, வீட்டில் மடிக்கணினி அல்லது கணினி இருப்பின், அதன் மூலமாகவே ஃப்ரீலேன்சிங் வகையில் பணம் சம்பாதிக்கலாம்.
ஆவணங்களை திருத்துதல் மற்றும் சரிபார்த்தல்:
நன்றாக எழுதும் திறன் உள்ளவர்கள், ஆவணங்களை திருத்துதல் மற்றும் சரிபார்த்தல் பணியில் சேரலாம். எந்த மொழியை தேர்ந்தெடுக்கிறீர்களோ அதில் ஆதி முதல் அந்தம் வரை தெரிந்திருந்தால் போதும். உதாரணத்திற்கு, தமிழ் மொழியில் திருத்தும் பணி மேற்கொள்கிறீர்கள் என்றால், தமிழ் இலக்கணம் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலம் தேர்ந்தெடுத்தால், அதில் அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும். கல்லூரி ஆவணங்களை சரிபார்த்தல், ஆன்லைன் ப்ளாக் சரிபார்த்தல், புத்தகம் சரிபார்த்தல் ஆகிய பணிகள் இதில் அடங்கும். இந்த பணியை ஏதேனும் புத்தக நிறுவனத்துடன் சேர்ந்து செய்யலாம். அல்லது, சுயமாகவே உங்களுக்கான சுய விவரத்தை ஒரு இணையதள பக்கமாக உருவாக்கி செய்யலாம்.
வலைப்பதிவு எழுத்தாளர்:
இந்த டிஜிட்டல் யுகத்தில் செய்திகள் அனைத்தும் கூட டிஜிட்டலாக மாறி விட்டன. டிவியில் செய்திகள் ஒளிபரப்பாவதற்கு முன்பு, செல்பேசியில் வந்துவிடுகின்றன. எனவே, நன்றாக எழுத தெரிந்தவர்களாக இருந்தால் கண்டிப்பாக வலைபதிவு எழுத்தாளராக மாறலாம். உங்களுக்கு பிடித்த விஷயங்களை எழுதுவதற்கே பணமும் சம்பாதிக்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ