கல்லூரி கட்டணத்தை Paytm மூலம் செலுத்துவது எப்படி?

Paytm செயலி மூலம் கல்லூரிக்கான கட்டணங்களை மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே எளிதாக செலுத்த முடியும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 6, 2022, 12:04 PM IST
  • Paytm செயலி கல்விக் கட்டணம் செலுத்துவதற்கான ஆப்ஷனை வழங்குகிறது.
  • Google pay, Phonepe போன்ற பல செயலிகள் மக்கள் பலரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கல்லூரி கட்டணத்தை Paytm மூலம் செலுத்துவது எப்படி? title=

இன்றைய நவீன காலத்தில் உலகம் முழுவதும் கணினிமயமாகிவிட்டது.  அதிலும் இந்த கொரோனா நோய்த்தொற்று பரவலின் பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீட்டிற்குள்ளேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுவிட்டது. இதனால் படிப்பு முதல் வேலை வரை அனைத்தும் ஆன்லைனிலேயே நடைபெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.  மேலும் இந்த தொற்று காலத்தில் பாதுகாப்பான முறையில் வீட்டிலிருந்து கொண்டே எளிமையாக ஆன்லைனில் தேவையான பொருட்களை ஒரே கிளிக்கில் வீட்டிற்கு கொண்டு வர செய்யலாம்.

ALSO READ | அமேசான் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி !

இவ்வாறு அனைத்தையும் எளிதாக இருந்த இடத்திலேயே செய்யும்பொழுது கல்லூரி கட்டடத்தையும் வீட்டில் இருந்து கொண்டு ஆன்லைனில் செலுத்தலாம். ஆனால் அதற்கு நீங்கள் Paytm பயனராக இருக்க வேண்டும்.  Paytm செயலி கல்விக் கட்டணம் செலுத்துவதற்கான ஆப்ஷனை வழங்குகிறது.  Google pay, Phonepe போன்ற பல செயலிகள் மக்கள் பலரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் Paytm நிறைய சலுகைகளை வழங்குவதோடு ஆன்லைனில் கல்வி சம்பந்தப்பட்ட அனைத்து வகை கட்டணங்களை செலுத்தும் வசதியை வழங்குகிறது.

இப்போது இந்த Paytm செயலியை பயன்படுத்தி கல்லூரிக் கட்டணத்தை எவ்வாறு செலுத்தலாம் என்பது பற்றி பார்ப்போம்.  இதற்கென முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில் பேடிஎம் செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.  இன்ஸ்டால் செய்த பின்னர் அதனுள் நுழைந்து "Recharge & Bill payments" பகுதிக்கு சென்ற பின்னர் 'other services' பகுதியிலுள்ள 'eduction fees' என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

அதன்பின்னர் கல்லூரியின் அமைவிடம், கல்லூரியின் பெயர், கல்லூரியில் வழங்கப்பட்ட அடையாள அட்டை விவரங்கள், தேர்வுக்கான பதிவு எண் போன்ற விவரங்களை பதிவிட வேண்டும். செவிலியில் கேட்ட அனைத்து விவரங்களையும் பதிவிட்ட பின் கட்டணத்தை செலுத்த 'proceed' ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.  இந்த செயல்முறை மூலம் இனிமேல் நீங்கள் வெளியில் அலைந்து திரிந்து பணம் செலுத்த தேவையில்லை, மேலும் browsing centre சென்று கல்வி கட்டணத்துடன் சேர்த்து கூடுதலாக,  அவர்களுக்கான சேவை கட்டணத்தையும் செலுத்த வேண்டிய தேவை இருக்காது.

ALSO READ | இன்ஸ்டாகிராமில் நேரத்தை வீணடிக்காமல் இருப்பது எப்படி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News