ஓய்வு பெறும் வயதான 60 வயதுக்கு முன்னதாக பணிஓய்வு பெறுவதற்கு திட்டமிடக்கூடியவர்கள் அரிதாகவே உள்ளனர். சில வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்கள், தங்களால் நீண்ட காலம் பணியாற்ற முடியாது என்று சொல்வதைக் கேட்டிருக்கலாம். உதாரணமாக ஐடி துறை, வெல்டிங் வேலை செய்பவர்கள், தங்கள் பணியில் இருக்கும் இடர்களால் மட்டும் அல்ல, ஆரோக்கியத்தின் அடிப்படையிலும் 60 வயதுக்கு முன்னதாகவே ஓய்வு பெற விரும்புவதாக சொல்வதைக் கேட்டிருக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓய்வு காலத்திற்காக, வேலை செய்யும்போதே திட்டமிட்டால், ஓய்வுக்காலம் சுமையில்லாமல் இருக்கும். ஓய்வுகாலத்திற்கு முன்னரே ஓய்வு பெற விரும்புபவர்கள், FIRE (Financial Independence, Retire Early) என்ற சூத்திரத்தின் அடிப்படையில் ஓய்வூதியத்தை திட்டமிட வேண்டும்.  


FIRE மாதிரி


1992 இல் விக்கி ராபின் மற்றும் ஜோ டொமிங்குவேஸ் எழுதிய யுவர் மனி ஆர் யுவர் லைஃப் (Your Money or Your Life) என்ற புத்தகத்தில் உருவானது. FIRE மாதிரியின் கீழ், உங்கள் ஓய்வு வயதை நீங்களே தீர்மானிக்கலாம். இருந்தாலும், இந்த மாதிரியை ஏற்றுக்கொண்டால், அதற்காக திட்டமிட வேண்டும்.  சிறப்பு உத்தியை உருவாக்க வேண்டும் மற்றும் உங்கள் சம்பளத்தில் 70 சதவீதத்தை சேமிக்க வேண்டியிருக்கும்.


FIRE எண்
FIRE எண்ணை அறிந்துகொள்வது நீங்கள் எந்த வயதில் ஓய்வு பெற விரும்புகிறீர்கள் என்று புரிந்துக் கொள்ள வேண்டும். உங்கள் சம்பளம், செலவுகள், வாழ்க்கை முறை மற்றும் ஓய்வுக்குப் பின் வாழ்க்கை முறையை வைத்து கணக்கீடுகளை செய்ய வேண்டும். இந்தக் கணக்கீடுகளைச் செய்ய முடியாவிட்டால், நிதி நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளலாம்.  


மேலும் படிக்க | அதிகரிக்குமா வங்கி சேமிப்புக் கணக்கு வட்டி? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் SBI சேர்மன் வேண்டுகோள்!


அதிக சேமிப்பு குறைந்த செலவு 
இந்த மாதிரியின் கீழ், சேமிப்பு அதிகபட்சமாக இருப்பது மிக முக்கியம். இதன் கீழ், செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். எவ்வளவு அதிகமாக முதலீடு செய்கிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் நீங்கள் ஓய்வு பெறலாம் மற்றும் ஓய்வூதியம் அதிகமாக இருக்கும்.


வருமானத்தை அதிகரிப்பதில் கவனம் அவசியம்
அதிக சம்பளத்தில் வேலையைச் செய்தால் பரவாயில்லை, இல்லையெனில் சம்பளத்தை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அதிக ஊதியம் பெறும் வேலையைப் பெற முடியாவிட்டால், நீங்கள் சில பகுதி நேர அல்லது ஃப்ரீலான்சிங் வேலையைச் செய்ய முயற்சிக்க வேண்டும், இளம் வயதில் அதிகமாக சம்பாதித்தால் தான், வயதான காலத்தில் நிம்மதியாக இருக்க முடியும். 


பணத்தை எங்கே முதலீடு செய்வது?
பணத்தை முதலீடு செய்யும் போது, ​​கொஞ்சம் ரிஸ்க் எடுக்க வேண்டும். பல்வேறு விதங்களில் முதலீடு செய்ய முயற்சிக்கவும். உதாரணமாக, உங்கள் முதலீட்டில் பாதியை பங்குச் சந்தை அல்லது பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யலாம். 


பிபிஎஃப் முதலீடு
கொஞ்சம் ரிஸ்க் எடுத்து பணத்தை முதலீடு செய்தால், மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து சராசரியாக 12 சதவீதம் லாபம் பெறலாம். அதேபோல, PPF இல் சேமிப்பதும் நல்லது. கணிசமாக பணம் சேர்ந்தவுடன், சொத்தில் முதலீடு செய்யலாம். இப்படி, வெவ்வேறு இடங்களில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் நிதிநிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும்.


ஆண்டுதோறு சேமிப்பை 10 சதவீதம் அதிகரிக்கவும்
மொத்த சேமிப்பில் 50 சதவீதத்தை மியூச்சுவல் ஃபண்டுகளிலும், 25-25 சதவீதத்தை பிபிஎஃப் மற்றும் சொத்தில் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆண்டுக்கு எவ்வளவு பணம் முதலீடு செய்வது என்பதும் முக்கியமான விஷயம். ஓய்வூதியமாக  உங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை திட்டமிட வேண்டும். உங்கள் சம்பளம் ஆண்டுக்கு சராசரியாக 10 சதவிகிதம் அதிகரிக்கும் என்று வைத்துக்கொண்டால், செலவினங்களை அதற்கேற்றாற்போல அதிகரிக்காமல், சேமிப்பை 10 சதவிகிதம் அதிகரிக்க வேண்டும்.


ஓய்வூதிய நிர்ணயம்
நீங்கள் 50 வயதில் ஓய்வு பெற விரும்பும்போது உங்கள் செலவை திட்டமிட வேண்டும். உங்கள் தற்போதைய செலவுகள் ரூ. 25 ஆயிரமாக இருந்தால், ஓய்வூதியக் காலத்தில் சுமார் 60 ஆயிரம் தேவைப்படும், அதற்கு ஏற்றாற்போல உங்கள் ஓய்வுகாலத்தைத் திட்டமிட வேண்டும்.


மேலும் படிக்க | Budget 2024: 8வது ஊதியக்குழ், பழைய ஓய்வூதிய திட்டம்.. நிதியமைச்சர் முன் வைக்கபட்டுள்ள கோரிக்கைகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ