EPFO உறுப்பினர்கள் எச்சரிக்கை! PF தொடர்பான இந்த வேலையை விரைவில் செய்யுங்கள்!
யூஏஎன் எண் பயன்படுத்தி லாக் இன் செய்வதன் மூலம் ஊழியர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட மொத்தத் தொகையைப் பார்க்க முடியும்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது (இபிஎஃப்ஓ) பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைத்து ஊழியர்களையும் இ-நாமினேஷன் செய்வதை கட்டாயமாக்கியுள்ளது. அவ்வாறு கணக்கு வைத்திருக்கும் அனைத்து ஊழியர்களும் இ-நாமினேஷன் செய்யவில்லை என்றால், கணக்கு வைத்திருக்கும் ஊழியர் இறந்த பின்னர் அவருக்கான டெபாசிட் தொகையைப் பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்படும் என்று அறிவுறுத்தப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள பல ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை அவர்களது பிஎஃப் கணக்கில் வருங்கால வைப்பு நிதியாக டெபாசிட் செய்து வருகின்றனர். ஊழியர்கள் டெபாசிட் செய்யும் இந்த தொகையானது அவர்களது பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும், சில சமயங்களில் அவர்களது செலவை சமாளிக்க வேண்டிய சூழ்நிலைகளிலும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, அகவிலைப்படியில் பம்பர் அதிகரிப்பு
பணியாளர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்த தொகை, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதே தொகையை முதலாளி அமைப்பால் அவர்களது கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. தனியார் துறையில் பணிபுரியும் பல பணியாளர்கள் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தை நிலையாக இல்லாமல் அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பதால், அவர்களின் பிஎஃப் கணக்கு எண்ணும் நிறுவனத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், யூஏஎன் எண் பயன்படுத்தி லாக் இன் செய்வதன் மூலம் அவர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட மொத்தத் தொகையைப் பார்க்க முடியும். யூஏஎன் எண்ணுடன் லாக் இன் செய்வதன் மூலம் உங்கள் பிஎஃப் கணக்கின் பாஸ்புக்கையும் நீங்கள் எளிதாக அணுக முடியும்.
இபிஎஃப்ஓ இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் உங்கள் பாஸ்புக்கை அணுக விரும்பினால், அதற்கு நீங்கள் முதலில் மின்-நாமினேஷனைச் செய்ய வேண்டும். பாஸ்புக் பக்கம் திறந்தவுடன் இணையதளத்தில் இ-நாமினேஷனுக்கான பாப்-அப் விண்டோ தோன்றும். இதில், நீங்கள் இ-நாமினேஷனைத் தாக்கல் செய்யவில்லை என்றால், இந்த பாப் அப் விண்டோ இணையதளப் பக்கத்திலிருந்து போகாது.
மேலும் படிக்க | ITR E Verification: 30 நாட்களுக்குள் செய்யவில்லை என்றால் ரீஃபண்ட் கிடைக்காது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ