ITR E Verification: 30 நாட்களுக்குள் செய்யவில்லை என்றால் ரீஃபண்ட் கிடைக்காது

ITR E Verification: வருமான வரி செலுத்துவோர் வருமான வரி தாக்கல் செய்த பிறகு ஈ-வெரிஃபிகேஷன் எனப்படும் ஈ-சரிபார்ப்பு, அதாவது ஐடிஆர்-வியின் ஹார்ட் காப்பியை சமர்பிப்பதற்கான கால வரம்பை வருமான வரித்துறை குறைத்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 2, 2022, 01:18 PM IST
ITR E Verification: 30 நாட்களுக்குள் செய்யவில்லை என்றால் ரீஃபண்ட் கிடைக்காது title=

ஐடிஆர் இ-வெரிஃபிகேஷன்: வருமான வரி செலுத்துவோர் வருமான வரி தாக்கல் செய்த பிறகு ஈ-வெரிஃபிகேஷன் எனப்படும் ஈ-சரிபார்ப்பு, அதாவது ஐடிஆர்-வியின் ஹார்ட் காப்பியை சமர்பிப்பதற்கான கால வரம்பை வருமான வரித்துறை குறைத்துள்ளது. இந்த கால வரம்பு 120 நாட்களிலிருந்து 30 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வந்து விட்டது. இந்த தகவலை வருமான வரி செலுத்துவோர் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். 

ஐடிஆர் சரிபார்ப்பு பற்றி முக்கிய அம்சங்கள்: 

- ஐடிஆர்-இன் ஈ வெரிஃபிகேஷன் ரிட்டர்ன் தாக்கல் செயல்முறையை நிறைவு செய்கிறது.

- ஐடிஆர்-இன் ஈ வெரிஃபிகேஷன் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்யப்படாவிட்டால், ஐடிஆர் செல்லாததாகக் கருதப்படும்.

- இந்த அறிவிப்பு தொடங்கும் தேதியில் அல்லது அதற்குப் பிறகு மின்னணு முறையில் ரிட்டர்ன் தரவை அனுப்பினால், மின் சரிபார்ப்பு அல்லது ஐடிஆர்-வி சமர்ப்பிப்பதற்கான கால வரம்பு இப்போது 30 நாட்களாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | Rice Price: முதலில் கோதுமை! இப்போது நெல்; தொடர்ந்து குறையும் விளைச்சல் 

- இதுவரை, வருமான வரிக் கணக்கை (ஐடிஆர்) தாக்கல் செய்த பிறகு, ஐடிஆர்-ஐ ஈ வெரிஃபிகேஷன் செய்வது அல்லது ஐடிஆர்-வி -ஐ அஞ்சல் மூலம் அனுப்புவதற்கான கால அவகாசம், ஐடிஆர் பதிவேற்றப்பட்ட நாளிலிருந்து 120 நாட்களாக இருந்தது.

- ஐடிஆர்-இன் ஈ வெரிஃபிகேஷன் அல்லது ஐடிஆர்-வி -இன் ஹார்ட் காபியை 30 நாட்களுக்கு மேல் தபாலில் அனுப்பினால், ரிட்டர்ன் தாமதமாகவோ அல்லது குறிப்பிட்ட தேதிக்கு அப்பாற்பட்டதாகவோ கருதப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஐடிஆர்-வியை ஹார்ட் காப்பியாக அனுப்ப விரும்புவோர், "ஸ்பீட் போஸ்ட் ஒன்லி" என்ற வழக்கமான முகவரி மூலம் அனுப்பலாம்: மையப்படுத்தப்பட்ட செயலாக்க மையம், வருமான வரித் துறை, பெங்களூரு-560500, கர்நாடகா.

- முறையாக சான்றளிக்கப்பட்ட ஐடிஆர்-வி ஸ்பீட் போஸ்ட் அனுப்பப்பட்ட தேதியானது, வருமான வரி அறிக்கையை மின்னணு முறையில் அனுப்பிய நாளிலிருந்து 30 நாட்களுக்கு நிர்ணயிக்கும் நோக்கத்திற்காக கணக்கிடப்படும்.

- மார்ச் 31, 2022 இல் முடிவடைந்த நிதியாண்டிற்கான கணக்குகளை இன்னும் தணிக்கை செய்யாத வரி செலுத்துவோர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31 அன்று முடிவடைந்தது.

- ஜூலை 31-ம் தேதி, ஐடிஆர் தாக்கலுக்கான கடைசி நாளன்று, 72.42 லட்சம் வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன, மொத்த வருமானம் 5.83 கோடியாக இருந்தது. இது தோராயமாக கடந்த ஆண்டு இருந்த அளவிலேயே இருந்தது. 

- ஐடிஆர் மூலம், ஒரு நபர் அந்த ஆண்டில் வருமானம், செய்த பெரிய பண பரிமாற்றங்கள், கட்டணங்கள் பற்றிய தகவல்களை வருமான வரித் துறைக்கு அளிக்க வேண்டும்.

மேலும் படிக்க | 73 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு EPFO அளித்த பரிசு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News