ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள்.  அதிக ஓய்வூதியத்தை பெற விரும்பும் ஊழியர்கள், ஊழியர்களின் ஓய்வூதிய நிதி அமைப்பான இபிஎஃப்ஓ-ன் ஒருங்கிணைந்த உறுப்பினர்களின் போர்டல் வழியாக, அனைத்து தகுதியான உறுப்பினர்களும் மே 3, 2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது இபிஎஃப்-ல் ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் மொத்தம் 12% தொகையை அவர்களது முதலாளிகள் வழங்குகின்றனர்.  இந்த 12% பங்களிப்பில், 8.33% ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கும் (இபிஎஸ்), 3.67% ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கும் (இபிஎஃப்) வழங்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Aadhar Safety: இந்த 3 வழிகள் மூலம் உங்கள் ஆதார் தகவல்கள் திருடப்படாது!!.. பாதுகாப்பாக இருக்கும்


1995-ம் ஆண்டு இபிஎஃப் சட்டத்தின் 6A பிரிவின் கீழ் ஒரு ஓய்வூதியத் திட்டம் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது.  ஊழியர்கள் ஓய்வூதிய முறை 1995 சட்டத்தின்படி(EPS-95), ஓய்வூதியத் திட்டத்தில் 8.33%  பங்களிப்பு செய்யப்பட வேண்டும்.  இபிஎஸ்-95 மூலம் ஊழியர்களுக்கான அதிகபட்ச மாத ஓய்வூதியம் ரூ. 5,000 அல்லது ரூ.6,000 ஆகும்.  ஊழியர்கள் அதிகபட்சமாக ரூ.5000 வரை ஓய்வூதியம் பெற வேண்டுமென்றால் அவர்கள் 8.33% பங்களிக்க வேண்டியது அவசியம், இந்த ஓய்வூதிய தொகை பின்னர் ரூ.6,500 ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.



உதாரணமாக மாதந்தோறும் ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ. 40,000 என வைத்துக்கொள்வோம்.  அடிப்படை சம்பளத்தில் 12% அதாவது ரூ. 4800 இபிஎஃப் கணக்கிற்கு மாற்றப்படும்.  இதில் இபிஎஸ் கணக்கிற்கு ரூ.1250 மாற்றப்படும், இறுதியாக ஊழியரது இபிஎஃப் கணக்கில் ரூ.3550 வந்து சேரும்.  இப்போது நீங்கள் மாதந்தோறும் அதிகளவிலான ஓய்வூதியத்தை பெற விரும்பினால், நீங்கள் ஓய்வுபெறும்போது உங்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியமானது உங்களின் உண்மையான அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படி மூலம் தீர்மானிக்கப்படும்.  உதாரணமாக, முந்தைய 60 மாதங்களில் உங்கள் சராசரி ஊதியம் ரூ.40,000 ஆக இருந்தால், உங்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.18,857 கிடைக்கும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: 18 மாத டிஏ நிலுவைத் தொகை கிடைக்கவுள்ளதா? முக்கிய அப்டேட் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ