உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? தெரிந்துகொள்ள எளிய வழிகள்!
யூஏஎன் மற்றும் பிஎஃப் இருப்பை ஆன்லைனிலேயே சரிபார்த்து கொள்ள முடியும், யூஏஎன் இருந்தால் தான் இபிஎஃப் பாஸ்புக்கை பெற முடியும்.
Employees Provident Fund: யூஏஎன் மற்றும் பிஎஃப் இருப்பை ஆன்லைனிலேயே சரிபார்த்து கொள்ள முடியும், யூஏஎன் இருந்தால் தான் இபிஎஃப் பாஸ்புக்கை பெற முடியும்.
Employees’ Provident Fund: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பிலிருந்து (இபிஎஃப்ஓ) வருங்கால வைப்பு நிதியில் (பிஎஃப்) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, இபிஎஃப் பாஸ்புக் வழங்கப்படுகிறது. இந்த இபிஎஃப் பாஸ்புக் ஆனது டெபாசிட்கள், வருவாய்கள் மற்றும் திரும்பப் பெறுதல்கள் உட்பட அனைத்து கணக்கு செயல்பாடுகளையும் கொண்டிருக்கும். இந்த டிஜிட்டல் பாஸ்புக்கின் உதவியுடன் பிஎஃப் இருப்பு, முதலாளி பங்களிப்புகள் மற்றும் வட்டி அனைத்தையும் சரிபார்க்கலாம். பிஎஃப் பங்களிப்புகள் மற்றும் இருப்பு சரிபார்ப்பு போன்ற அனைத்து செயல்களுக்கும் இ-பாஸ்புக் பயன்படுகிறது. இந்த அம்சத்தை பெற வேண்டுமானால் முதலில் ஊழியர்கள் இபிஎஃப்ஓ கணக்கில் பதிவுசெய்து அவர்களின் யூஏஎன்-ஐ செயல்படுத்த வேண்டியது அவசியம். இபிஎஃப்ஓ தளத்தில் உங்கள் பிஎஃப் இருப்பைச் சரிபார்த்து, யூஏஎன் எண்ணைச் செயல்படுத்தலாம்.
மேலும் படிக்க | வாவ் செம்ம ஜாக்பாட், ஓய்வூதியத்தில் ரூ.15,000 உயர்வு, அரசு புதிய அறிவிப்பு
யூஏஎன் எண்ணை செயல்படுத்துவதற்கான படிகள்:
- இபிஎஃப்ஓ-ன் அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
- சேவைகள் பிரிவின் கீழ், "For Employees" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- சேவைகளின் பட்டியலில், "உறுப்பினர் யூஏஎன் /ஆன்லைன் சேவை" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- புதிய விண்டோவில் "ஆக்டிவேட் யூஏஎன்" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் யூஏஎன் அல்லது உறுப்பினர் ஐடியுடன் ஆதார் எண், பெயர், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஓடிபி-ஐ பெற, "கெட் ஆதரைசேஷன் பின்" என்பதைக் கிளிக் செய்யவும்.
- இப்போது ஓடிபி-ஐ உள்ளிட்டு, "வேலிடேட் ஓடிபி & ஆக்டிவேட் யூஏஎன்" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் யூஏஎன்-ஐ செயல்படுத்தலாம்.
- பிறகு உங்கள் மொபைலுக்கு பாஸ்வேர்ட் அனுப்பப்படும்.
- யூஏஎன் மற்றும் பாஸ்வேர்டை வைத்து உங்கள் இபிஎஃப் பாஸ்புக் மற்றும் பிற சேவைகளை நீங்கள் எளிதாக அணுகலாம்.
இபிஎஃப்ஓ இணையதளத்தில் பிஎஃப் இருப்பை சரிபார்த்தல்:
- இபிஎப்ஓ-ன் அதிகாரபூர்வ இணையதளமான www.epfindia.gov.in என்பதற்கு செல்லவும்.
- 'சர்வீசஸ்' எனும் மெனுவில் உள்ள "மெம்பர் பாஸ்புக்" என்கிற ஆப்ஷனை தேர்வு செய்யவேண்டும்.
- பணியாளர்களுக்கான சேவைகளை அணுக, முதலில் பிரதான மெனுவின் "For Employees" பகுதிக்குச் செல்லவும்.
- அதன் பிறகு கீழே உள்ள "மெம்பர் பாஸ்புக்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
யூஏஎன் மற்றும் பாஸ்வேர்டு மூலம் மட்டுமே உங்கள் இபிஎஃப் கணக்கு பாஸ்புக்கை அணுக்க முடியும். உறுப்பினரின் பாஸ்புக்கைப் பார்க்க, உறுப்பினரின் ஐடியைத் தேர்ந்தெடுத்த பிறகு, "வியூ பாஸ்புக்" என்பதற்குச் செல்லவும். அதன் பிறகு லாக் இன் செய்ததும் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து பொருத்தமான உறுப்பினர் ஐடியைத் தேர்ந்தெடுக்கவும். "சீ பாஸ்புக்" எனும் ஆப்ஷனை தேர்வு செய்ததும் உங்கள் கணக்கிலுள்ள தகவல்கள் அனைத்தும் காண்பிக்கப்படும், இதில் நீங்கள் கணக்கிலுள்ள இருப்பு மற்றும் பிற தகவல்களை சரிபார்த்து கொள்ளலாம். பாஸ்புக்கை பிரிண்ட் செய்ய விரும்பினால் "டவுன்லோடு பாஸ்புக்" என்பதை தேர்ந்தெடுத்து டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
மேலும் படிக்க | 7th Pay Commission: மகிழ்ச்சியின் உச்சியில் ஊழியர்கள்... மீண்டும் ஒரு ஊதிய உயர்வு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ