EPFO New Update: EPFO வெளியிட்டுள்ள முக்கியமான 5 புதிய விதிகள்!
யூஏஎன் கணக்கில் இ-நாமினேஷன் ஃபைல் இல்லாத பிஎஃப் உறுப்பினர்கள் அவர்கள் பிஎஃப் பாஸ்புக்கைப் பார்க்க முடியவில்லை மற்றும் அனைத்து வகையான முன்பணத்தின் கீழும் முன்கூட்டியே பிஎஃப் பெற முடியாமல் போனது.
யூனிஃபைடு மெம்பர் போர்ட்டலில், பிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் பிஎஃப் கணக்கு தொடர்பான பல வேலைகளை ஆன்லைன் வாயிலாக வீட்டில் அமர்ந்தபடியே செய்து கொள்ளலாம். இபிஎஃப்ஓ ஆனது யூனிஃபைட் மெம்பர் போர்ட்டலில் அவ்வப்போது பல்வேறு அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது, இந்நிலையில் இந்த 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் யூனிஃபைட் மெம்பர் போர்ட்டலில் ஐந்து புதிய அப்டேட்களை கொடுத்திருக்கிறது, அதுகுறித்து பின்வருமாறு காண்போம். இபிஎஃப்ஓ முன்னர் பாஸ்புக்கைப் பார்ப்பதற்கும், அட்வான்ஸ் பிஎஃப் பெறுவதற்கும் இ-நாமினேஷன் முறையை கட்டாயமாக்கியது. யூஏஎன் கணக்கில் இ-நாமினேஷன் ஃபைல் இல்லாத பிஎஃப் உறுப்பினர்கள் அவர்கள் பிஎஃப் பாஸ்புக்கைப் பார்க்க முடியவில்லை மற்றும் அனைத்து வகையான முன்பணத்தின் கீழும் முன்கூட்டியே பிஎஃப் பெற முடியாமல் போனது.
மேலும் படிக்க | ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதா?
இதனை கருத்திற்கொண்டு இபிஎஃப்ஓ, பிஎஃப் பாஸ்புக் மற்றும் முன்பணம் பார்க்க இ-நாமினேஷன் கட்டாயமில்லை என்று விலக்கு அளித்துள்ளது. இப்போது நீங்கள் உங்கள் பாஸ்புக்கைப் பார்த்து, இ-நாமினேஷன் தாக்கல் செய்யாமலேயே முன்கூட்டிய பிஎஃப் கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம். யூனிஃபைடு மெம்பர் போர்ட்டலில் உள்நுழைய, ஒருவர் யூஏஎன் எண், பாஸ்வேர்டு மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும், ஆனால் தற்போது இபிஎஃப்ஓ யூனிஃபைடு மெம்பர் போர்ட்டலில் உள்நுழைவு செயல்முறையை எளிதாக்கியுள்ளது. புதிய முறையின்படி, இப்போது நீங்கள் உங்கள் யூஏஎன் எண் மற்றும் பாஸ்வேர்டை உள்ளிட்டு நேரடியாக உள்நுழையலாம், கேப்ட்சா குறியீடு வேண்டியதில்லை.
இது தவிர, யூனிஃபைட் மெம்பர் போர்ட்டலில் உள்நுழையும்போது, பிளஸ் ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் உறுப்பினர் புரொஃபைலில் யூஏஎன் எண் மற்றும் பெயர் மட்டுமே காட்டப்படும், மற்ற அனைத்து தகவல்களும் மறைக்கப்பட்டுள்ளன. டிஜி லாக்கருக்கு முன்பு, யுஏஎன் கார்டு வசதி மட்டுமே இருந்தது, ஆனால் இப்போது பிஎஃப் உறுப்பினர்கள் டிஜி லாக்கரிலிருந்து ஸ்கீம் சான்றிதழ் மற்றும் ஓய்வூதியச் சான்றிதழைப் பதிவிறக்க முடியும். இபிஎஃப் இ-நாமினேஷன் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி தொடர்பாக ஒரு செய்தி பரவியதில் இருந்து அனைவரும் அவர்களது இ-நாமினேஷனை தாக்கல் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். ஆனால் இபிஎஃப்ஓ அதை மறுத்தது, பிஎஃப் கணக்கில் வேட்புமனு தாக்கல் செய்ய இபிஎஃப்ஓ வால் கடைசி தேதி அல்லது காலக்கெடு எதுவும் அறிவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பிஎஃப் சந்தாதாரர்களுக்கு ஒரு மோசமான செய்தி என்னவென்றால், கோவிட்-19 அட்வான்ஸ் பிஎஃப் க்ளைம் தற்போது 72 மணி நேரத்திற்குள் தீர்க்கப்படவில்லை, கொரோனா காலத்தில் லாக்டவுன் காரணமாக பிஎஃப் அலுவலகத்தில் 50% நிறுத்தங்கள், இது போன்ற கடினமான காலங்களில், EPFO ஆனது கோவிட்-19 பரவுவதற்கான புதிய அட்வான்ஸ் பாரா, இதன் கீழ் அட்வான்ஸ் பிஎஃப் க்ளெய்ம் தானாகவே 72 மணி நேரத்திற்குள் தீர்க்கப்படும், ஆனால் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 72 மணி நேரத்தில் கோவிட்-19 அட்வான்ஸ் பிஎஃப் க்ளைம் செட்டில்மென்ட் நடக்கவில்லை.
மேலும் படிக்க | EPFO விதிகள்: PF கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த தப்ப மட்டும் செஞ்சிடாதீங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ