EPFO Rule Change: நாட்டில் சம்பள வர்க்கத்தினர் அனைவருக்கும் இபிஎஃப் கணக்கு உள்ளது. இந்த கணக்குகள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஆல் நிர்வகிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும், பணியாளரின் சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, இந்தக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதே அளவு தொகையை நிறுவனங்களும் ஊழியர்களின் இபிஎஃப் கணக்கில் (EPF Account) டெபாசிட் செய்கிறார்கள். பணி ஓய்வுக்கு பிறகு பிஎஃப் நிதி ஊழியர்களுக்கு மிக உதவியாக இருக்கின்றது. இது தவிர ஓய்வுக்கு முன்னரும் சில அவசரகாலங்களில் இந்த நிதியைப் பயன்படுத்தலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விதிகளில் மாற்றம்


EPFO தற்போது, மருத்துவ தேவைகளுக்கான அட்வான்ஸ் பணம் எடுப்பதற்கான விதிகளில் முக்கியமான மாற்றங்களைச் செய்துள்ளது. இபிஎஃப்ஓ இது தொடர்பான வரம்பை இரட்டிப்பாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்பு மருத்துவம் தொடர்பான தேவைகளுக்கு எவ்வளவு தொகையை முன்பணமாக எடுக்க முடியும்? இப்போது ஏற்பட்டுள்ள மாற்றம் என்ன? இதை பற்றி இந்த பதிவில் காணலாம். 


இரட்டை வித்ட்ராயல் வரம்பு


மருத்துவ அவசரநிலையின் கீழ் பணம் எடுப்பதற்கான க்ளைம் வரம்பை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி இபிஎஃப்ஓ உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 16 வெளியிடப்பட்ட ஒரு சுற்றறிக்கை மூலம் EPFO இந்த அறிவிப்பை வெளியிடப்பட்டது. ஓய்வூதிய நிதி கட்டுப்பாட்டாளரான இபிஎஃப்ஓ ஏப்ரல் 10, 2024 அன்று விண்ணப்ப மென்பொருளிலும் மாற்றங்களைச் செய்துள்ளது. 


ஏற்கனவே மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையரிடமிருந்து (CPFC) இதற்கான ஒப்புதலை பெற்றுவிட்டதாக EPFO சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நோக்கங்களுக்கு படிவம் 31 மூலம் EPF தொகையில் பகுதியளவு எடுப்பதற்கான வசதி அளிக்கப்படுகின்றது. வீடு வாங்குதல், வீடு கட்டுவது, திருமணம், கடனை திரும்ப செலுத்துதல், என இது இவை அனைத்தையும் உள்ளடக்கியது.


மேலும் படிக்க | ஒவ்வொரு வங்கியிலும் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்?


இந்த வரம்பு பாரா 68J இன் கீழ் இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் படி, சந்தாதாரர் அல்லது குடும்ப உறுப்பினரின் நோய்க்கான சிகிச்சைக்காக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்குகளில் இருந்து முன்பணத்தைப் பெறலாம். இதற்கு, படிவம் 31 உடன், இபிஎப் சந்தாதாரர் (EPF Subscriber) ஊழியர் மற்றும் மருத்துவரால் கையொப்பமிடப்பட்ட சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.


படிவம் 31 என்றால் என்ன?


ஊழியர்கள் தங்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதிக் கணக்கிலிருந்து பகுதியளவு தொகையை எடுக்க விரும்பினால், EPF படிவம் 31 -ஐ பூர்த்தி செய்ய வேண்டும். 


- படிவம் 31 மூலம், பாரா 68B இன் கீழ், வீடு/பிளாட் வாங்குதல், வீடு கட்ட முன்பணத்திற்கு விண்ணப்பிக்கலாம். 


- சிறப்புச் சந்தர்ப்பங்களின் கீழ் கடனைத் திருப்பிச் செலுத்த பாரா 68BB -இன் கீழ் முன்பணம் எடுக்கலாம். 


- பாரா 68H இன் கீழ், நீங்கள் சிறப்பு சந்தர்ப்பங்களில் கிராண்டுக்கு விண்ணப்பிக்கலாம். 


- பாரா 68J இன் கீழ் மருத்துவ சிகிச்சைக்காக அட்வான்ஸ் கோரலாம்.


- பாரா 68K இன் கீழ், திருமணம் அல்லது குழந்தைகளின் மெட்ரிக் பிந்தைய கல்விக்கு முன்பணம் வழங்கப்படுகிறது.


- பாரா 68N இன் கீழ், உடல் ஊனமுற்ற உறுப்பினர்களுக்கு முன்பணம் வழங்கப்படுகிறது. 


- பாரா 68NNன் கீழ், ஓய்வு பெற்ற ஒரு வருடத்திற்குள் அட்வான்ஸ் தொகையை கோரலாம்.


மேலும் படிக்க | உங்களிடம் வோட்டர் ஐடி இல்லையா? அப்போ வாக்களிப்பது எப்படி? உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ