ரேஷன் கார்டு (Ration card) என்பது அரசின் அங்கீகரிக்கப்பட்ட அரசு ஆவணமாகும். ரேஷன் கார்டின் உதவியுடன், மக்கள் பொது விநியோக முறைமையின் (பி.டி.எஸ்) கீழ் சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் நியாயமான விலைக் கடைகளிலிருந்து உணவு தானியங்களை, அதாவது, கோதுமை, அரிசி மற்றும் பருப்பு வகைகள் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை வாங்கலாம். இந்தியாவில் வழக்கமாக மூன்று வகையான ரேஷன் கார்டுகள் தயாரிக்கப்படுகின்றன. வறுமைக் கோட்டுக்கு மேலே வாழும் மக்களுக்கு ஏபிஎல் (APL), வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிப்பவர்களுக்கு பிபிஎல் (BPL) மற்றும் மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு அந்தோயோதயா கார்டுகள் வழங்கப்படுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சந்தை விலையை விட குறந்த விலையில், அரிசி, கோதுமை பருப்பு, சர்க்கரை போன்றவற்றை வாங்கலாம். மாநில அரசுகள் வழங்கும் ரேஷன் கார்டு அடையாள அட்டையாகவும் செயல்படுகிறது, ஆனால் நீங்கள் தவறான ஆவணங்கள் மற்றும் தகவல்களை கொடுத்து ரேஷன் கார்டு வாங்கினால், உங்களுக்கு சிறை தண்டனை  மற்றும் அபராதம் இரண்டும் விதிக்கப்படலாம்.


போலி ரேஷன் கார்டு தயாரித்தால், இந்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஐந்தாண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படுகிறது. எனவே, நீங்கள் ரேஷன் கார்டை தயாரிக்கும் போது, சரியான தகவலை உணவுத் துறைக்கு கொடுங்கள். நீங்கள் சரியான தகவலைக் கொடுக்கவில்லை என்றால், விளைவுகள் மோசமாக இருக்கும். தவறான தகவலைக் கொடுத்து மற்றொரு குடிமகனின் உரிமைகளை நீங்கள் பறித்தால், நீங்கள் தண்டிக்கப்படலாம்.


நாடு முழுவதும், ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு என்னும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. இதுவரை, 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த திட்டத்தின் கீழ் உள்ளன. இதன் மூலம், நுகர்வோர் மற்ற மாநிலங்களிலும் ரேஷன் பெறலாம். ரேஷன் கார்டு வைத்திருப்பவர் ஊர் மாறும் போது, ரேஷன் கார்டை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இந்தியா முழுவதற்கும் பொதுவான ரேஷன் கார்டாக இருக்கும்.


மத்திய அரசின் இந்த முடிவின் மூலம், நாட்டு மக்கள் இப்போது எந்த மாநிலத்திலும் எளிதாக ரேஷன் பெற முடியும். குறிப்பாக வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களுக்கு, மத்திய அரசின் இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பல்வேறு வகையான பேரழிவுகள் போன்ற அசாதரணமான சூழ்நிலைகளில், மத்திய அரசின் திட்டம் பொது மக்களுக்கு நன்மை பயக்கும்.


ரேஷன் கார்டைப் பெறுவதற்கு சில விதிகளை கடைபிடிப்பது கட்டாயமாகும், ஆனால் மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்குகான கார்டை பெறவும் அல்லது அந்தியோதயா திட்டத்திற்கு கீழ் ரேஷன் கார்டை பெறவும், தவறான ஆவணங்களை சமர்ப்பிக்கிறார்கள். போலி ரேஷன் கார்டை தயாரிப்பது இந்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
மேலும் படிக்க | மாதம் ₹70,000 வரை சம்பாதிக்க Amazon வழங்கும் அற்புத வாய்ப்பு..!!!


போலி ரேஷன் கார்டை தயாரித்த குற்றவாளி என நீங்கள் கண்டறியப்பட்டால், உங்களுக்கு  ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். ரேஷன் அட்டை தயாரிக்க உணவுத் துறை அதிகாரியிடம் லஞ்சம் கொடுத்தால் அல்லது லஞ்சம் க் கொண்டு உணவுத் துறை அதிகாரி ரேஷன் கார்டை தயாரித்து கொடுத்தால்,  சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.


எனவே ரேஷன் கார்ட் தயாரிக்கும் போது கவனம் தேவை. 


மேலும் படிக்க | பென்ஷன் இல்லையேன்னு டென்ஷன் வேண்டாம்.. LIC பாலிஸியில் மிக அற்புத திட்டம் இருக்கு..!!!