புதுடெல்லி: பால் மற்றும் பால் பொருட்களில் 'புரத பைண்டர்களை' சேர்க்க அனுமதி இல்லை என்று  இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI)  தெளிவுபடுத்தியுள்ளது. பெரும்பாலும் பால் பொருட்களில் புரத பைண்டர்களாகப் என்சைம்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது தயிரின் சுவையை மாற்றுகிறது. இது போன்ற நொதிகளை பால் பொருட்களில் சேர்க்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளள FSSAI, இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட தயிர் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை அடிக்கோடிட்டு சொல்லியிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பால் பொருட்களை ஜீரணிப்பதில் சிரமம் 
புதிய உணவுப் பொருட்களை, குறிப்பாக அரை-திட நிலையில் உள்ள அல்லது திட உணவுகளைத் தயாரிக்க, புரோட்டீன் பைண்டர்கள் 'பைண்டிங் ஏஜெண்டுகளாக' பயன்படுத்தப்படுகின்றன என்று FSSAI தெரிவித்துள்ளது. புரோட்டீன் பைண்டர்களைப் பயன்படுத்துவது பால் பொருட்களை செரிமானம் செய்வதில் உடலுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். இது தொடர்பாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


மேலும் படிக்க | நீரிழிவு நோய் இருப்பதே தெரியாமல் வாழும் மக்கள் வசிக்கும் நாடுகள்! விழிப்புணர்வு பற்றாக்குறை


அதில், பால் பொருட்களில் புரதத்தின் பயன்பாடானது செரிமானத்தை பாதிக்கும் என்று அறியப்படுகிறது. மேலும், பால் பொருட்களில் புரதத்தை சேர்ப்பதால், பாலில் இருக்கும் இயற்கையான புரதத்தின் உயிரியல் மற்றும் ஊட்டச்சத்து மதிப்பும் பாதிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது.



தரநிலை அறிவுறுத்தல்கள்


உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகளின்படி பால் மற்றும் பால் பொருட்களில் அனுமதிக்கப்பட்ட சேர்க்கைகளை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று FSSAI தெளிவுபடுத்தியுள்ளது. கிட்டத்தட்ட ஒவ்வொரு பால் பொருட்களும் தனித்துவமான மற்றும் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட உணர்ச்சி பண்புகளைக் கொண்டுள்ளன. எனவே, பால் மற்றும் பால் பொருட்களில் புரோட்டீன் பைண்டர்கள் போன்ற எந்தவொரு பொருட்களையும் சேர்த்து, அதன் அமைப்பு அல்லது உணர்ச்சி அளவுருக்களை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | 30 நாள் நோ சுகர் டயட்: நம்ப முடியாத நன்மைகள்.. ட்ரை பண்ணி பாருங்க


புரோட்டீன் பைண்டர்கள், பொதுவாக சீஸ் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. அதனால் தான் சீஸ் ஒரு அளவுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது என்று கூறப்படுகிறது. அதேபோல, புரோட்டீன் பைண்டர்கள் பயன்பாடு, பால் புரதங்களின் செரிமானத்தை பாதிக்கிறது. எனவே, பால் புரதத்தின் உயிரியல் மற்றும் ஊட்டச்சத்து மதிப்பும் உடலுக்கு கிடைக்காமல் போய், பால் பொருட்களை நாம் உண்பதற்கான அர்த்தத்தையும் பால் புரதம் அதிக உயிரியல் மதிப்பைக் கொண்டுள்ளது, ஏனெனில் இது அத்தியாவசிய அமினோ அமிலங்களின் நல்ல மூலமாகும். 


புரோட்டீன் பைண்டர்கள் சேர்ப்பதால், பாலில் உள்ள சிறப்பம்சங்கள் மாறிவிடும் எனும்போது, அதை ஏன் சேர்க்க வேண்டும் என்ற கேள்வியை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI)தற்போது வெளியிட்ட உத்தரவு எழுப்புகிறது.


பாலில் உள்ள சத்துக்கள் 
பால் மிகச்சிறந்த ஒரு சத்துணவு ஆகும். புரதம், கால்சியம், வைட்டமின் பி (குறிப்பாக ரிபோ ஃபிளேவின்), வைட்டமின் டி என எல்லாச் சத்துக்களும் பாலில் உள்ளன. பிறந்த குழந்தை முதல் வயதானவர் வரை அனைவரும் பால் குடிக்க வேண்டும். 


மேலும் படிக்க | Dark Tea: டீ குடிச்சுகிட்டே நீரிழிவை குறைக்கலாம்! பால் டீ வேண்டாம்! க்ரீன் டீ? NO


பால் என்பது குழந்தைகளுக்கு அடிப்படை உணவு என்றால் வயதானவர்களுக்கு சப்ளிமென்ட் ஆகும்.சைவ உணவுக்காரரகளுக்கு பால் ஒரு சமச்சீர் உணவு ஆகும். நாளொன்றுக்கு ஒருவருக்கு சராசரியாக 250 மி.லி. பால் அவசியம் என்று கூறப்படுகிறது.


பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிர், மோர், வெண்ணெய், பனீர், சீஸ் போன்றவற்றில் தயிரும் மோரும் தான் தலையாய ஆரோக்கிய பண்புகளைக் கொண்டவை. தயிரில் உள்ள பாக்டீரியாக்களும் லாக்டிக் அமிலமும் செரிமானத்துக்குப் பெரிதும் உதவக் கூடியவை. 
மருந்து,மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் நிலையில் இருப்பவர்களுக்கு ஏற்படும் வயிற்று எரிச்சல், வயிற்றில் புண் போன்றவற்றை சீர்ச்செய்ய தயிர் மிகவும் சிறந்தது. மருந்துகளின் பக்க விளைவுகளையும் வீரியத்தையும் குறைப்பதில் தயிரினி பங்கு அளப்பறியது.


தயிர் செய்வது எப்படி?
இதுபோன்ற ஆரோக்கியப் பண்புகளை கொண்ட தயிரை எப்படி தயாரிப்பது? பாலை தயிராக மாற்ற என்சைம்கள் தேவை. காய்ச்சின பால், மிதமான சூட்டில் இருக்கும்போது, அதை புளிக்க வைக்க, தயிர் அல்லது உரை மோர் சேர்த்து வைக்க வேண்டும்.


4 அல்லது 5 மணி நேரத்தில் தயிர் இயற்கையாக உருவாகிவிடும். இதைத்தவிர எலுமிச்சை சாறு, வினிகர், புளி ஆகியவற்றைப் பயன்படுத்தியும் வீட்டில் தயிரை உரை குத்தும் பழக்கம் உண்டு.


மேலும் படிக்க | சர்க்கரை நோயாளிகளுக்கு அலர்ட்! இந்த 10 காய்கறிகளை வாரத்தில 2 நாளாவது சேர்த்துக்கோங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ