சர்க்கரை நோயாளிகளுக்கு அலர்ட்! இந்த 10 காய்கறிகளை வாரத்தில 2 நாளாவது சேர்த்துக்கோங்க

Vegetable Which Control Diabetes: நாம் உண்ணும் காய்கறிகளினாலேயே ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம், எந்தக் காயை உண்கிறோம் என்று தேர்ந்தெடுப்பது இரத்த சர்க்கரை மேலாண்மைக்கான சிறந்த வழியாகும்  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 6, 2023, 08:46 AM IST
  • இரத்த சர்க்கரை மேலாண்மைக்கான காய்கறிகள்
  • காய்கறிகளினாலேயே ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்
  • நீரிழிவு நோய்க்கான 10 சிறந்த காய்கறிகள்
சர்க்கரை நோயாளிகளுக்கு அலர்ட்! இந்த 10 காய்கறிகளை வாரத்தில 2 நாளாவது சேர்த்துக்கோங்க

புதுடெல்லி: மாறி வரும் வாழ்க்கை முறையால் ஆரோக்கிய பிரச்சனைகளும் அதிகரித்துவிட்டன. ஆரோக்கியத்தில் ஏற்படும் குறைபாடு, பல வகையான நோய்களை ஏற்படுத்துகின்றன. வாழ்க்கைமுறை பழக்கங்கள், உணவு வழக்கம் என தினசரி வாழ்க்கையில் நாம் செய்யும் செயல்களின் எதிரொலி, ஆரோக்கியம் பாதிக்கப்படுவதில் எதிரொலிக்கிறது. நீரிழிவு நோய் ஒரு நாள்பட்ட நோயாக உருவெடுத்திருக்கும் நிலையில், இந்த நோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் இயற்கை வழிமுறைகளை தெரிந்துக் கொண்டு பின்பற்றுவது நோயைத் தவிர்ப்பதற்கான சுலபமான வழிமுறை ஆகும்.

Add Zee News as a Preferred Source

தினசரி நாம் உண்ணும் காய்கறிகளினாலேயே ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம் என்பது தெரியுமா? எந்தக் காயை உண்கிறோம் என்று தேர்ந்தெடுப்பது இரத்த சர்க்கரை மேலாண்மை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும்.

போதுமான பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது ஆரோக்கியமான உணவுப்பழக்கம் ஆகும். ஆரோக்கியமான உணவை உண்டால் நீண்ட காலம் வாழலாம். பெண்களுக்கு ஒரு நாளைக்கு 2 முதல் 3 கப் காய்கறிகளும், ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 3 முதல் 4 கப் காய்கறிகளும் தேவை என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மேலும் படிக்க | யூரிக் ஆசிடை கட்டுப்படுத்த சூப்பர் டெக்னிக்! அமில சுரப்பை கட்டுப்படுத்தும் பாகற்காய்

அதிலும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கனிகளில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் அதிக நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் இருப்பதை உறுதி செய்யவேண்டும். இது ரத்த சர்க்கரை மேலாண்மை மற்றும் நீண்ட கால நீரிழிவு மேலாண்மை என இரண்டிற்கும் உதவும்.

நீரிழிவு நோயைப் பற்றி நாம் அடிக்கடி பேசினாலும், அது இரத்தத்தில் உள்ள சர்க்கரை பிரச்சனை, அது உண்மையில் அதைவிட அதிகம். டைப் 2 நீரிழிவு இன்சுலின் எதிர்ப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோய் என்பது, கொழுப்பு கல்லீரல், இதய நோய், அசாதாரண கொழுப்பு அளவுகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சில வகையான புற்றுநோய்களுடன் தொடர்புடையது.

vegetables for diabetes

நீரிழிவு நோயாளிகளின் உணவுகளில் சேர்க்கவேண்டிய பட்டியலில், இதய நோய் தடுப்பு மற்றும் புற்றுநோய் தடுப்பு ஆகியவற்றையும் கொண்ட காய்கறிகளும் வந்தால், அது இரட்டிப்பு லாபம் தானே?  

வெவ்வேறு காய்கறிகளில் வெவ்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் பல்வேறு வகையான நார்ச்சத்துக்கள் உள்ளன, மேலும் அவை அனைத்தும் நீரிழிவு மேலாண்மை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை ஆகும். நீரிழிவு மேலாண்மைக்கான காய்கறிகள் பல இருந்தாலும் அவற்றை பட்டியலிட்டால் முதலிடத்தை பிடிக்கும் காய்கள் இவை.

மேலும் படிக்க | யூரிக் அமிலத்தை காய்கள் மூலமே கட்டுப்படுத்தலாம்! கீல்வாதத்தை சரிசெய்ய காய்கனிகள்

1. கேரட்
2. ப்ரோக்கோலி
3. சுரைக்காய்
4. முட்டைக்கோஸ்
5. கீரை
6. தக்காளி
7. வெள்ளரி
8. கீரை
9. காளான்கள்
10. பச்சை பீன்ஸ்

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றும் முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | யூரிக் ஆசிடை கட்டுப்படுத்தும் கிச்சன் கில்லாடி! மஞ்சளுக்கு மிஞ்சியது ஏதேனும் உண்டா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News