பம்பர் லாபம் தரும் SIP: முதலீடு செய்யும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்
SIP: எஸ்ஐபி மூலம் செய்யப்படும் முதலீடு மிகப்பெரிய அளவில் அதிகரிப்பதற்கு பல காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். எளிய முதலீடு, சிறிய தொகையில் தொடக்கம், நீண்ட கால முதலீட்டில் காம்பவுண்டிங் மூலம் அதிக பலன் ஆகியவை இந்த காரணங்களில் சில.
SIP: இன்றைய காலத்தில் மக்கள் பணத்தை முதலீடு செய்து, எதிர்காலத்திற்கான நிதி பாதுகாப்பை உறுதி செய்கிறார்கள். பணத்தை முதலீடு செய்து நல்ல லாபம் காண இன்றைய காலகட்டத்தில் பல திட்டங்கள் உள்ளன. இவற்றில் மியூசுவல் ஃபண்ட் (Mutual Fund) முதலீடு மக்களிடையே மிக பிரபலமான திட்டமாக உள்ளது. இதிலும், சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (Systematic Investment Plan) மூலம் செய்யப்படும் முதலீடு அதிக பிரபலமாகி வருகின்றது. ஜூலை மாதத்தில் SIP மூலம் ரூ.23,000 கோடிக்கு மேல் வரத்து இருந்தது.
எஸ்ஐபி மூலம் செய்யப்படும் முதலீடு மிகப்பெரிய அளவில் அதிகரிப்பதற்கு பல காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். எளிய முதலீடு, சிறிய தொகையில் தொடக்கம், நீண்ட கால முதலீட்டில் காம்பவுண்டிங் மூலம் அதிக பலன் ஆகியவை இந்த காரணங்களில் சில. SIP -இல் முதலீடு செய்ய நினைப்பவர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியம் அமசங்கள் பற்றி இங்கே காணலாம்.
1. சிறிய தொகையுடன் தொடங்கலாம்
SIP இன் சிறப்பு என்னவென்றால், இதில் குறைந்தபட்சம் மாதம் 100 ரூபாயிலும் முதலீடு செய்யலாம். அதாவது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய பெரிய தொகை தேவைப்பட வேண்டிய அவசியமில்லை. 100 ரூபாய் எஸ்ஐபி மூலம் முதலீட்டைத் தொடங்கக்கூடிய பல திட்டங்கள் இதில் உள்ளன.
2. வழக்கமான முதலீடு
மியூசுவல் ஃபண்டுகளில் SIP மூலம், முதலீட்டாளருக்கு வழக்கமான சேமிப்பு மற்றும் முதலீடு செய்யும் பழக்கத்தை அளிக்கும். ஏனென்றால், இதில் முதலீட்டாளர் ஒரு குறிப்பிட்ட தேதியில் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். ஆகையால், இதற்கான ஏற்பாட்டை முதலீட்டாளர் முன்னரே செய்கிறார். அதாவது, இந்த சேமிப்பும் முதலீடும் ஒரு வழக்கமான பழக்கமாக மாறிவிடும்.
3. ஆட்டோமேட்டிக் முதலீடு
SIP மூலம் முதலீட்டைத் தொடங்குவது மிக எளிதானது. ஏனென்றால், இது முதலீட்டாளரின் வங்கிக் கணக்கை அவரது முதலீட்டுடன் இணைக்கிறது. இதன் மூலம், ஒரு குறிப்பிட்ட தேதியில் உங்கள் கணக்கிலிருந்து முன்பே தீர்மானிக்கப்பட்ட தொகை தானாகவே கழிக்கப்படும்.
4. எளிய KYC செயல்முறை
மியூசுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன், முதலீட்டாளர்கள் என்னென்ன ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு, KYC செயல்முறையை முடிக்க வேண்டும். அதில் அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று இருக்க வேண்டும். பான் மற்றும் ஆதார் ஆகியவையும் இதற்கு தேவைப்படும்.
5. நிதி மதிப்பீடு
SIP மூலம் முதலீடு செய்யத் தொடங்கும் முன், SIP கால்குலேட்டரின் உதவியுடன் SIP நிதியின் வருடாந்திர வளர்ச்சி மற்றும் செயல்திறனை மதிப்பிடலாம். உதாரணமாக, ஒரு முதலீட்டாளர் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஃபண்டில் SIP ஐத் தொடங்கினார் என்றால், இன்று அதன் மதிப்பு எவ்வளவாக இருக்கும்? நிதியின் ஆண்டு வளர்ச்சி எப்படி இருக்கும்? இத்தனை கெள்விகளுக்கும் மதிப்பீட்டின் மூலம் பதில் பெற முடியும். இதன் மூலம் நீங்கள் முழு மியூச்சுவல் ஃபண்டிலும் முதலீட்டின் மேட்ரிக்ஸைப் புரிந்துகொள்ளலாம்.
SIP என்றால் என்ன?
SIP என்பது மியூசுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான ஒரு முறையான வழியாகும். இதில், முதலீட்டாளர் பங்குகள் போன்ற நேரடி சந்தை அபாயத்தை எதிர்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் சந்தை ஏற்ற இறக்கங்களுடன் தொடர்புடைய ஆபத்து இதில் உள்ளது. இருப்பினும், பாரம்பரிய முதலீட்டு திட்டங்களை விட இதில் அதிகமாக வருமானம் கிடைக்கும். மியூச்சுவல் ஃபண்டுகளில் கடந்தகால வருமானம் எதிர்கால வருமானத்திற்கான உத்தரவாதமாக இல்லை என்பதை அறிந்து கொள்வது அவசியம். ஆகையால் முதலீட்டாளர் தனது வருமானம், இலக்கு மற்றும் இடர் விவரங்களைப் புரிந்துகொண்டு முதலீடு செய்ய வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ