ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை தற்போது வழங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான அறிவிப்பின்படி, இனி அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து குரூப் இன்சூரன்ஸ் திட்டத்திற்கு (GIS) பணம் பிடித்தம் செய்யப்படாது. 2013ம் ஆண்டு செப்டம்பர் 1 முதல் அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு இந்த மாற்றம் பொருந்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு குழுக் காப்பீட்டுத் திட்டம் (CGEGIS) ஜனவரி 1982ல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஊழியர் இருந்தால் அவரது குடும்பத்திற்கு நிதி உதவி கிடைக்கும். மேலும் ஓய்வு பெரும் போது அவருக்கு மொத்த பணமும் கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Bank Holidays in July: ஜூலையில் இத்தனை நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை.. நோட் பண்ணுங்க மக்களே!!


GIS தொடர்பாக EPFOன் புதிய அப்டேட்


கடந்த 21 ஜூன் அன்று ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பின் மூலம் செப்டம்பர் 1, 2013க்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து GISக்கான பணம் பிடித்தம் செய்யப்படாது என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் இதுவரை பிடித்தம் செய்யப்பட்ட பணமும் விரைவில் திரும்ப கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இனிமேல் பணியில் சேரும் அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும். தற்போது GIS நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்களின் சம்பளமும் அதிகரிக்கும். கடந்த சுமார் 10 ஆண்டுகளாக பிடித்தம் செய்யப்பட்ட தொகை கிடைக்க உள்ளதால் ஊழியர்களுக்கும் மகிழ்ச்சியில் உள்ளனர்.


GIS திட்டம் நிறுத்தப்பட்டதா?


தற்போது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ​​இது தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. கடந்த ஜூன் 21ம் தேதி வெளியான அறிவிப்பில் செப்டம்பர் 1, 2013க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களிடம் இருந்து இனி GIS பணம் பிடித்தம் செய்யப்படாது என்பதை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2013க்கு முன்பு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கான குழுக் காப்பீட்டுத் திட்டத்தில் ஏதேனும் மாற்றம் உள்ளதா அல்லது அதுவும் நிறுத்தப்படுகிறதா என்பது குறித்த தெளிவாக தகவல் எதுவும் இல்லை. எனவே அடுத்த சில வாரங்களில் EPFO ​​இது குறித்த தெளிவான விளக்கம் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு


தனியார் மற்றும் அரசு என எந்த துறைகளில் வேலை செய்தாலும் அவர்களது சம்பளத்தில் இருந்து பிஎப் தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த இபிஎஃப் தொகை அனைவருக்கும் அவர்களது பணி ஓய்வுக்கு பிறகான முக்கியமான நிதி ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. இது மட்டுமின்றி பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் ஓய்வுக்குப் பிறகு இலவச ஓய்வூதிய பலனையும் பெறுகிறார்கள். ஒவ்வொரு மாதமும், பணியாளர்களின் இபிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகை ஊதியத்திலிருந்து கழிக்கபட்டு டெபாசிட் செய்யப்படுகின்றது. அதே அளவு தொகையை நிறுவனமும் ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்கிறது.


மேலும் படிக்க | நாளைக்குள் இந்த வேலையை முடிச்சுடுங்க! இறுதி வார்னிங் கொடுக்கும் பஞ்சப் நேஷனல் பேங்க்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ