Bank Holidays in July: ஜூலையில் இத்தனை நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை.. நோட் பண்ணுங்க மக்களே!!

Bank Holidays in July: இந்த முறை ஜூலை மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். வெவ்வேறு பிராந்தியங்களின் விடுமுறைகள் மற்றும் வார இறுதி நாட்கள் ஆகிய இரண்டும் இதில் அடங்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 29, 2024, 12:41 PM IST
  • ஜூலை மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
  • ஆண்டு முழுவதும் வங்கி விடுமுறைகள் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது.
  • ஆன்லைன் வங்கி சேவைகள் மூலம் பணிகளை செய்து முடிக்கலாம்.
Bank Holidays in July: ஜூலையில் இத்தனை நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை.. நோட் பண்ணுங்க மக்களே!! title=

Bank Holidays in July: அடிக்கடி வங்கித் தொடர்பான பணிகளுக்காக வங்கிக்கு செல்லும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். திங்கட்கிழமை அதாவது ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிய மாதம் தொடங்கும். ஜூலை மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகள் செயல்படும், எந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை என்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த முறை ஜூலை மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். வெவ்வேறு பிராந்தியங்களின் விடுமுறைகள் மற்றும் வார இறுதி நாட்கள் ஆகிய இரண்டும் இதில் அடங்கும். ஆண்டு முழுவதும் வங்கி விடுமுறைகள் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (Reserva Bankof India) வெளியிடுகிறது. 

இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகள் இயங்காது

ரிசர்வ் வங்கியின் (RBI) பட்டியலின்படி, ஜூலை மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளைத் தவிர நான்கு ஞாயிற்றுக்கிழமைகளையும் உள்ளடக்கிய 12 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் மட்டுமே வங்கிகள் திறந்திருக்கும். அனைத்து மாதங்களிலும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் வங்கிகளுக்கு விடுமுறை.

ஆன்லைன் வங்கி சேவைகள் மூலம் பணிகளை செய்து முடிக்கலாம் 

வங்கி விடுமுறை நாட்களிலும், ஆன்லைன் வங்கி சேவைகள் மூலம் உங்கள் வேலைகளை செய்துகொள்ள முடியும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வது அவசியம். ஏதேனும் அவசர வேலைகள் இருந்தால், வங்கியின் இணையதளம், மொபைல் ஆப் அல்லது ஏடிஎம் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். பல வித பணிகளுக்கான வங்கிக் கிளைக்கு செல்ல திட்டமிடும் நபர்கள், அதற்கு முன் ஜூலை வாத வங்கி விடுமுறை நாட்களைப் பற்றி நிச்சயமாக அறிந்து கொள்வத் நல்லது. 

மேலும் படிக்க | Credit Card விதிகளில் முக்கிய மாற்றங்கள்: இந்த வங்கி கிரெடிட் கார்ட் உங்ககிட்ட இருந்தா உடனே நோட் பண்ணுங்க

ஜூலை 2024 வங்கி விடுமுறை நாட்கள்

- ஜூலை 3 (புதன்கிழமை): ஷில்லாங்கில் பெஹ் டீன்க்லாம் பண்டிகை காரணமாக வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- ஜூலை 6 (சனிக்கிழமை): எம்ஹெச்ஐபி தினத்தையொட்டி ஐஸ்வாலில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
- ஜூலை 7 (ஞாயிறு): வாராந்திர வங்கி விடுமுறை காரணமாக, நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- ஜூலை 8 (திங்கட்கிழமை): குர்புரப் (குரு ஹர்கோவிந்த் சாஹிப்பின் பிறந்த நாள்) காரணமாக வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- ஜூலை 9 (செவ்வாய்கிழமை): ட்ருக்பா சே-ஜியை முன்னிட்டு காங்டாக்கில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
- ஜூலை 13 (சனிக்கிழமை): மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை காரணமாக நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
- ஜூலை 14 (ஞாயிறு): வாராந்திர வங்கி விடுமுறை காரணமாக, நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- ஜூலை 16 (செவ்வாய்கிழமை): ஹரேலா பண்டிகையையொட்டி டேராடூனில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
- ஜூலை 17 (புதன்கிழமை): முஹர்ரம் மற்றும் யு டிரோட் சிங் தினத்தின் போது மூடப்பட்டிருக்கும்.
- ஜூலை 21 (ஞாயிறு): வாராந்திர வங்கி விடுமுறை காரணமாக, நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- ஜூலை 27 (சனிக்கிழமை): மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால், நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்.
- ஜூலை 28 (ஞாயிறு): வாராந்திர வங்கி விடுமுறை காரணமாக, நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

ரிசர்வ் வங்கியின் விடுமுறை நாட்காட்டி நாடு முழுவதும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலையில் நாடு முழுவதும் குறிப்பிடப்பட்டுள்ள விடுமுறை நாட்களைத் தவிர, சில மாநிலங்களில் கூடுதல் விடுமுறைகள் குறித்து ரிசர்வ் வங்கி முடிவு செய்கிறது. மேலும் தகவலுக்கு நீங்கள் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தையும் பார்வையிடலாம். ஒவ்வொரு மாதமும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும். இது தவிர, நாட்டின் பெரும்பாலான வங்கிகள் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நெருங்கும்போது பணிச்சுமை அதிகரிப்பதால் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சில மாற்றங்கள் ஏற்படலாம்.

வங்கி தொடர்பான பெரும்பாலான வேலைகளை ஆன்லைனிலேயே செய்ய முடியும் என்று ஆர்பிஐ அறிவுறுத்துகிறது. இந்த பணிகளை முடிக்க நீங்கள் கிளைக்கு செல்ல தேவையில்லை. இதற்கு வங்கி வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங் (Net Banking), மொபைல் பேங்கிங் (Mobile Banking) அல்லது வாட்ஸ்அப் வங்கி சேவையைப் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க | நுழைவுத்தேர்வுகளுக்கான வடிவத்தை மாற்றிய NTA !புதிய தேர்வு தேதிககள் அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News