PF Withdrawal: EPFO-வில் கணக்கு வைத்திருக்கும் 73.58 உறுப்பினர்களுக்கு சிறப்பு செய்தி உள்ளது. இந்த உறுப்பினர்களின் அத்தியாவசிய தகவல்களை ஏப்ரல் முதல் ஜூன் வரை EPFO ​​புதுப்பித்துள்ளது. பெயர் திருத்தம், ஆதார் எண் புதுப்பிப்பு  (Aadhaar number update), யுஏஎன் (UAN), பிறந்த தேதி போன்றவை இதில் அடங்கும். இதனை அடுத்து, இப்போது இந்த உறுப்பினர்கள் கோவிட் 19 (Covid 19) அச்சத்துக்கு மத்தியிலும், தங்கள் பி.எஃப் கணக்கில் பணத்தை எடுப்பதற்கு எந்த பிரச்சனையும் எதிர்கொள்ள மாட்டார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உங்கள் சில தகவல்களை நீங்கள் புதுப்பிக்க விரும்பினால், அது மிகவும் எளிதானது. வருங்கால வைப்பு நிதிக்கான (Provident fund) உரிமை கோரல்களைச் சமர்ப்பிக்கவும், நிலுவைத் தொகையைப் பார்க்கவும், பணம் எடுக்கவும், வீட்டிலிருந்தபடியே, ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்தலாம். EPFO நிறுவத்தின் சேவைபடி, அதன் பெரும்பாலான சேவைகள் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளலாம்.


ALSO READ | உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்படுகிறது? என்பதை நொடியில் அறிய..


ஊழியர்கள் தங்கள் UAN-எண்ணை ஆன்லைனில் உருவாக்கலாம். இதற்காக, வாடிக்கையாளர் ஆதார் (Aadhaar), பான் (PAN), வங்கி கணக்கு (Bank Account) மற்றும் மொபைல் (Mobile Number) எண்ணைப் பயன்படுத்தி KYC விதியைப் பின்பற்றினால் போதும்.


பல சேவைகளை ஆன்லைனிலும் பெறலாம். நிறுவன முதலாளிகள் ஒரு புதிய ஊழியரை ஆன்லைனில் அதன் போர்ட்டலில் பதிவு செய்யலாம். உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் epfigms.gov.in வலைதளத்தை பயன்படுத்தி முழு விவரங்களை அறிந்துக்கொள்ளலாம்.


ALSO READ | ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியை ஆன்லைனில் நொடிகளில் மாற்றுவது எப்படி


KYC ஐப் புதுப்பிப்பதன் மூலம், உறுப்பினர்கள் EPFO ​​இன் ஆன்லைன் போர்ட்டல் மோளம் சேவைகளைப் பெற முடியும். அவர்கள் கடைசியாக செலுத்திய கட்டணம் வரை அறிந்துக்கொள்ளலாம். 


கோவிட் -19 நெருக்கடியின் சூழ்நிலைகளைப் பொறுத்தவரை, மக்கள் ஆன்லைன் சேவைகளை அணுகுவது முக்கியம். எனவே, 2020 ஏப்ரல்-ஜூன் மாதங்களில் EPFO ​​தனது 73.58 லட்சம் உறுப்பினர்களின் KYC ஐ புதுப்பித்துள்ளது.


இதில் 52.12 லட்சம் பேரின் ஆதார் எண், 17.48 லட்சம் பேரின் யுஏஎன் தகவல், 17.87 லட்சம் பேரின் வங்கி கணக்கு தகவல்களை புதுப்பிக்கப்பட்டு உள்ளது. 9.73 லட்சம் பேரின் பெயர் மற்றும் 4.18 லட்சம் பேரின் பிறந்த தேதி சரி செய்யப்பட்டு உள்ளது. மொத்த இபிஎஃப்ஒ உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் 6 கோடி ஆகும்.


ALSO READ | உங்கள் PF கணக்கில் இருந்து பணத்தை திரும்ப பெற ஒரு எளிய வழி!