Zomato, Swiggy: சொன்ன பேச்சை கேட்க மாட்டியா? பிடி நோட்டீஸை! கடுப்படிக்கும் Google
கூகுளின் பெரியண்ணன் போக்குக்கு `The end` card போடுவது எப்போது என்று தெரியவில்லை. கூகுளின் Play Storeஐ சார்ந்திருக்கும் போக்கில் இருந்து மாற வேண்டும் என்று இந்தியாவின் start-up நிறுவனங்கள் கோரிக்கை விடுக்கின்றன. முதலில் Paytmக்கு நோட்டீஸ் அனுப்பிய கூகுள் தற்போது Zomato மற்றும் Swiggyக்கும் நோட்டீஸ் அனுப்பியிருப்பதால் சர்ச்சை சூடுபிடித்துள்ளது.
புதுடெல்லி: Paytmக்கு நோட்டீஸ் அனுபிய கூகுள் (Google), தற்போது உணவு விநியோக செயலிகளான Zomato மற்றும் Swiggyயும் வழிகாட்டு நெறிமுறைகளை மீறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.
இந்த இரண்டு நிறுவனங்களின் கேமிங் அம்சங்கள் குறித்து கூகுள் ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளது. இதற்கு முன்னதாக, தனது பிளே ஸ்டோரிலிருந்து Paytm ஐ நீக்கியது. Paytm, சூதாட்டத்தை ஊக்குவிப்பதாகக் கூறிய கூகுள், தனது பயன்பாட்டு மேடையின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி சூதாட்டம் போன்ற விஷயங்கள் தவறு என்று விளக்கமளித்தது.
கூகுளில் இருந்து தங்களுக்கு அறிவிப்பு கிடைத்ததை Zomato உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நோட்டீஸ் முற்றிலும் தவறானது என்று கூறும் Zomato, தாங்கள் சிறிய நிறுவனம் என்றும், கூகுளின் வழிகாட்டுதல்களின்படி தங்களுடைய வணிக நடவடிக்கைகளை ஏற்கனவே மாற்றியமைத்துள்ளதாக கூறியிருக்கிறது. இந்த வார இறுதிக்குள் Zomato Premier League என்ற திட்டத்திற்கு பதிலாக வேறொரு திட்டத்தை அறிமுகப்படுத்தவிருப்பதாக நிறுவனம் கூறுகிறது.
ஆனால், இந்த பிரச்சனை தொடர்பாக Swiggy இதுவரை ஏதும் கூறாமல் மெளனம் சாதிக்கிறது. கிடைத்த தகவல்களின்படி, Swiggy நிறுவனம் கூகுளுடன் இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்கிறது. ஆனால், கூகுள் இதுவரை இது தொடர்பான எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவில்லை.
உண்மையில், பல நிறுவனங்கள் ஐபிஎல் மற்றும் வாடிக்கையாளர்களை மீட்டெடுக்க விளையாட்டு தொடர்பான gamification features எனப்படும் அம்சங்களைப் பயன்படுத்துகின்றன, இதனால் அவர்களின் விற்பனையை அதிகரித்துள்ளது. Paytm, சூதாட்டம் போன்ற விளையாட்டுகளை வைத்திருப்பதாக கூறி, அந்த செயலியை செப்டம்பர் 18 அன்று பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியது கூகுள். சில மணிநேரங்களுக்குப் பிறகு Paytm 'கேஷ்பேக்' அம்சத்தை அகற்றிவிட்டது.
தொடர்புடைய செய்தி | இலவச திட்டங்களில் கூட்டங்களை 60 நிமிடங்களாக குறைக்கிறது Google Meet
இந்த சம்பவத்திற்கு பிறகு, Paytm நிறுவனம், கூகுள் நிறுவனத்தைக் கடுமையாக விமர்சித்தது. கூகுள் தனது கொள்கைகளில் பாகுபாடு காட்டுவதாகவும் Paytm குற்றம் சாட்டுகிறது.
வேடிக்கையான விஷயம் என்னவென்றால், செவ்வாயன்று, கூகிள் ஸ்டோர் மூலம் டிஜிட்டல் உள்ளடக்கத்தை விற்கும் அனைத்து செயலிகளும் கூகிள் பிளே பில்லிங் முறையைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறியது. இது தவிர, சில பகுதிகள் செயலிகளை பதிவிறக்கம் செய்வதற்கு கட்டணமும் செலுத்த வேண்டியிருக்கும். இதனையடுத்து, கூகுளின் அணுகுமுறை குறித்து பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தின.
எந்தவொரு இந்திய பயன்பாட்டு டெவலப்பர்களையோ அல்லது செயலி உரிமையாளர்களோ, கூகுளின் பில்லிங் முறையைப் பயன்படுத்த அது கட்டாயப்படுத்த முடியாது என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் கூகுளுக்கு 30 சதவீத பங்கு வழங்குவது என்பது சரியல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கூகுளின் பெரியண்ணன் போக்குக்கு "The end" card போடுவது எப்போது என்று தெரியவில்லை. கூகுளின் Play Storeஐ சார்ந்திருக்கும் போக்கில் இருந்து மாற வேண்டும் என்று இந்தியாவின் start-up நிறுவனங்கள் கோரிக்கை விடுக்கின்றன.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR