இலவச திட்டங்களில் கூட்டங்களை 60 நிமிடங்களாக குறைக்கிறது Google Meet

COVID-19 தொற்றுநோயால் Google Meet மற்றும் பிற வீடியோ-கான்பரன்சிங் தளங்கள் மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டது குறிப்பிடத்தக்கது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 1, 2020, 08:03 PM IST
  • Google Meetஇன் இலவச திட்டங்கள் வாயிலாக அக்டோபர் முதல் தேதியில் இருந்து நடத்தப்படும் கூட்டங்கள் 60 நிமிடங்கள் என்ற காலவரையறைக்குள் கட்டுப்படுத்தப்படும்.
  • G Suiteஇன் வாடிக்கையாளர்களுக்கு ஜி சூட்டின் "enterprise" பிரிவில் மாதந்தோறும் 25 அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்த வேண்டும்...
இலவச திட்டங்களில் கூட்டங்களை 60 நிமிடங்களாக குறைக்கிறது Google Meet title=

COVID-19 தொற்றுநோயால் Google Meet மற்றும் பிற வீடியோ-கான்பரன்சிங் தளங்கள் மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டது குறிப்பிடத்தக்கது.

கூகுளின் வீடியோ உரையாடல் தளமான Google Meet வாயிலாக அக்டோபர் முதல் தேதியில் இருந்து நடத்தப்படும் கூட்டங்கள் 60 நிமிடங்கள் என்ற காலவரையறைக்குள் கட்டுப்படுத்தப்படும். இது Google Meetஇன் இலவச திட்டங்களுக்கு மட்டும் தான். இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் வேலை பார்ப்பவர்கள் என பலரும் பாதிக்கப்படுவார்கள்.

இந்த கட்டுப்பாடானது, " மேம்பட்ட அம்சங்களுக்கான ஜி சூட் (G Suite) அணுகல் மற்றும் கல்விக்கான ஜி சூட் (G Suite for Education) உட்பட பிற பிரிவுகளுக்கும் பொருந்தும். அதோடு, ஒரு கூட்டத்தில் 250 பங்கேற்பாளர்கள் வரை மட்டுமே அனுமதிப்பது, ஒரு டொமைனுக்குள் 100,000 பேர் வரை நேரடி கலந்துரையாடல்களில் கலந்துக் கொள்ளலாம். அதோடு, இந்த கூட்டங்களின் வீடியோ பதிவுகளை Google Driveஇல் சேமிக்கும் திறனுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக" the Verge என்ற செய்தி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"அதாவது கூகுள் கணக்கு உள்ள யார் வேண்டுமானாலும் 100 நபர்களுடன் இலவச கூட்டங்களை நடத்தலாம், அதற்கு கால வரையறை இல்லை" என்று கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் the Verge செய்தி நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார். இந்த வசதி பொதுவாக G Suiteஇன் வாடிக்கையாளர்களுக்கு ஜி சூட்டின் "enterprise" பிரிவில் மட்டுமே கிடைக்கும், இதற்காக ஒருவர் மாதந்தோறும் 25 அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்த வேண்டும்.

COVID-19 தொற்றுநோய் பல அலுவலக ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதனால் கூகுள் மீட் மற்றும் பிற வீடியோ-கான்பரன்சிங் தளங்கள் உச்சத்தைக் கண்டன. தொற்றுநோய் அச்சம் நிலவும் இந்த சமயத்தில், கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்களுக்கு ஆன்லைனில் கல்வி கற்பிக்கின்றன. அதையடுத்து,  இதுபோன்ற வீடியோ கான்பிரன்சிங் தளங்கள் பிரபலமாகியிருக்கின்றன.  

COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் பங்களிக்கும் கூகுள், நாடுகள், தங்களது சொந்த தொடர்பு தடமறிதல் பயன்பாடுகளை வரிசைப்படுத்த உதவும் மென்பொருள் கட்டமைப்பை அறிமுகப்படுத்துகிறது. இது பொது சுகாதார அதிகாரிகள், தொற்று நோயைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கிறது. இதற்கான அடிப்படை கட்டமைப்பை கூகுள் நாடுகளின் தேவைகளுக்கு ஏற்ப கட்டமைக்கிறது.

இதையும் படிக்கலாம் | Twitterஇன் Dataminr கண்காணிப்பு சேவை 'கண்காணிப்பு நோக்கங்களுக்காக' மட்டுமா?  எச்சரிக்கை!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News