மொராக்கோ ஜி20 கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் கவலை தெரிவித்ததன் பின்னணி என்ன?
Fragmented Supply Chains: மத்திய கிழக்கு நெருக்கடியில் ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலையில், சப்ளை சங்கிலிகள் துண்டிக்கப்படுவது, வளர்ந்து வரும் சந்தைகளுக்கு முக்கிய கவலைகளாக மாறியுள்ளது
புதுடெல்லி: சமீபத்திய மத்திய கிழக்கு நெருக்கடி, எரிபொருள் விலை மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் துண்டு துண்டானது வளர்ந்து வரும் சந்தைகளுக்கு முக்கிய கவலையாக உள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கவலை தெரிவித்தார். மொராக்கோவின் மராகேஷில் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய சீதாராமன், ஜி20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் (G20 FMCBG) இரண்டாவது நாள் கூட்டத்தின் இரண்டாவது அமர்வின் போது நடந்த விவாதங்களின் விவரங்களை விரிவாக தெரிவித்தார்.
கிரிப்டோ சொத்துக்கள் தொடர்பாக G20 நாடுகளின் ஆலோசனையை, கூட்டம் ஏற்றுக்கொண்டது என்றும், அது செயல்படுத்தப்படுவது தொடர்பக முன்னோக்கி செல்வதாகவும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். கிரிப்டோ சொத்துக்களுக்கான விரிவான கொள்கை தொடர்பான விரைவான மற்றும் ஒருங்கிணைந்த செயலாக்கம் தொடர்பான வழிகாட்டுதலை G20 நாடுகளின் உச்சிமாநாடு வழங்கியதாக இந்திய நிதியமைச்சர் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு நெருக்கடியில் ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலையில், சப்ளை சங்கிலிகள் துண்டிக்கப்படுவது, வளர்ந்து வரும் சந்தைகளுக்கு முக்கிய கவலைகளாக உள்ளன என்று அவர் தெரிவித்தார்.
அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் உலகளாவிய பொருளாதாரக் கண்ணோட்டம் மற்றும் சவால்களை எதிர்கொள்ள தனித்தனியாகவும் கூட்டாகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியமான கொள்கை அணுகுமுறைகள் குறித்தும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
பிரேசிலின் பொருளாதார அமைச்சர் பெர்னாண்டோ ஹடாட், 2024 இல் G20 பிரேசிலிய ஜனாதிபதி பதவியின் முக்கிய முன்னுரிமைகள் பற்றிய மேலோட்டத்தை வழங்கினார்.
G20 FinanceTrack இன் கீழ், உலகளாவிய அபாயங்கள், சர்வதேச நிதி நிறுவனங்களின் ஆழமான சீர்திருத்தங்கள், சர்வதேச வரிவிதிப்பு மற்றும் பிற சிக்கல்களை நிவர்த்தி செய்வதில் முக்கிய கவனம் செலுத்தும் என்று பெர்னாண்டோ ஹடாட் கூறினார்.
உலகில் உள்ள சமத்துவமின்மையை நிவர்த்தி செய்வது G-20 நாடுகளில், பிரேசிலின் தலைமைத்துவத்தின் மையமாக இருக்கும் என்று பெர்னாண்டோ ஹடாட் தெரிவித்தார். புது தில்லி பிரகடனத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைப் பின்தொடர்வதற்காக பிரதமர் மோடி ஜி-20 தலைவர்களின் மெய்நிகர் உச்சிமாநாட்டை நடத்தியதற்கு பிறகு, நடைபெறும் கூஉட்டம் இது.
"நியாயமான உலகத்தையும் நிலையான கிரகத்தையும் உருவாக்குதல்" என்ற் கருப்பொருளை பிரேசிலின் பொருளாதார அமைச்சர் ஹடாட் பகிர்ந்து கொண்டார். இந்திய நிதியமைச்சர் சீதாராமன் ஜி20 எஃப்எம்சிபிஜி கூட்டத்தை நிறைவு செய்தார், பிரேசிலின் தலைமைக்கு இந்தியாவின் ஆதரவை உறுதிசெய்த அவர், உலகம் மற்றும் உலக மக்கள் அனைவருக்கும் வலுவான திருப்தியான இன்று மற்றும் வலுவான எதிர்காலம் இருக்கும் என்று உறுதியளித்தார்.
முன்னதாக, மொராக்கோவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மிகவும் கடினமான சூழ்நிலையில் ஜி20 நாடுகளுக்கு மொராக்கோ கொடுத்த பாரம்பரிய மர்று உயரிய விருந்தோம்பலுக்காக, மொராக்கோ அரசாங்கத்திற்கும் மொராக்கோ மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்
பொருளாதார விவகாரங்கள் தொடர்பாக ஜி20 நாடுகளின் கூட்டத்திற்கு அருமையான பங்களிப்பு வழங்கிய இந்தோனேசிய நிதியமைச்சர் மற்றும் அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநருக்கு, இந்திய நிதியமைச்சர் நன்றி தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ