வட்டி விகிதம் அதிகமானது! ஐடிபிஐ வங்கியின் நிலையான வைப்புத்தொகை வட்டி இனிமேல் இவ்வளவு தான்...

IDBI Bank Revises FD Rates: 2023 செப்டம்பர் 15 முதல் பொது மக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான ஐடிபிஐ வங்கி FD வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளது 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 19, 2023, 05:44 AM IST
  • வங்கி வட்டி விகிதம் அதிகரித்தது!
  • மூத்த குடிமக்களுக்கு வருமானம் அதிகரிக்கும்
  • வட்டி உயர்வு எவ்வளவு தெரியுமா?
வட்டி விகிதம் அதிகமானது! ஐடிபிஐ வங்கியின் நிலையான வைப்புத்தொகை வட்டி இனிமேல் இவ்வளவு தான்... title=

புதுடெல்லி: ஐடிபிஐ வங்கி, செப்டம்பர் 15, 2023 முதல் அதன் நிலையான வைப்புத்தொகைக்கான விகிதங்களைத் திருத்துவதாக அறிவித்துள்ளது. ஆனால், புதுப்பிக்கப்படும் டெபாசிட்டுகள் மற்றும் புதிய வைப்புத்தொகைகளுக்கு மட்டுமே மாற்றியமைக்கப்பட்ட வட்டி விகிதங்கள் பொருந்தும் என்றும், தற்போதுள்ள டெபாசிட்டுகளுக்கு ஒப்பந்த விகிதத்தில் தொடர்ந்து வட்டி கிடைக்கும் என்றும் ஐடிபிஐ வங்கி தெரிவித்துள்ளது.
 
FD விகிதங்களைத் திருத்திய ஐடிபிஐ வங்கி, செப்டம்பர் 15, 2023 முதல் பொது மக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான ஐடிபிஐ வங்கி FD வட்டி விகிதங்களைச் சரிபார்க்கவும்

"பல்வேறு வைப்புத் திட்டங்களின்படி வங்கி வைப்புத்தொகைகளுக்கு வட்டி செலுத்துகிறது. வட்டி விகிதங்கள் அவ்வப்போது திருத்தப்பட்டு பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும். புதிய வைப்புகளுக்கும், ஏற்கனவே வங்கியில் இருக்கும் நிலையான வைப்புத் தொகைகளின் புதுப்பித்தலுக்கு மட்டுமே பொருந்தும், அதே நேரத்தில் தற்போதுள்ள வைப்புத்தொகையானது, ஏற்கனவே ஒத்துக் கொள்ளப்பட்ட விகிதத்தில் தொடர்ந்து வட்டி பெறும்" என்று ஐடிபிஐ வங்கி கூறுகிறது.

மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட் செய்தி: வருகிறது 'வந்தே சாதாரண்' ரயில்.. குறைந்த கட்டணம், அதிக வசதிகள்

ஐடிபிஐயின் புதிய வட்டி மாற்றத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்.

IDBI வங்கி FD திட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகளை தெரிந்துக் கொள்ளுங்கள்.

FD கணக்கை எங்கு வேண்டுமானாலும் அணுகலாம்
பல வைப்பு விருப்பங்கள் உண்டு
வைப்புத்தொகைகள் முதிர்வு காலத்திற்கு பிரகு தானாக புதுப்பிக்கும் வசதி உண்டு
கணக்கில் இருக்கும் நிலுவைத் தொகையின் மீது கடன் பெறலாம்
ஃபிக்ஸட் டெபாசிட் முதிரும் காலத்திற்கு முன்னரே, முன்கூட்டியே திரும்பப் பெறும் வசதி வழங்கப்படுகிறது. இருப்பினும், முன்கூட்டியே திரும்பப் பெற்றால் அதற்கு அபராதம் விதிக்கப்படும்.
மூத்த குடிமக்களின் வைப்புத்தொகைகளுக்கு கூடுதல் வட்டி விகிதம் வழங்கப்படும்
நிலையான வைப்புத் திட்டத்தின் காலம் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை உண்டு
குறைந்தபட்ச வைப்புத்தொகை 10,000 ரூபாய் ஆகும்.

ஐடிபிஐ வங்கியில் யாரெல்லாம் எஃப்டி கணக்கைத் திறக்க முடியும்?  

தொண்டு நிறுவனங்கள்
கல்வி நிறுவனங்கள்
நிறுவனங்கள்
கூட்டாண்மை நிறுவனங்கள்
தனியார் நிறுவனங்கள்
மூத்த குடிமக்கள்
இந்து கூட்டுக்குடும்பம்
வெளிநாடு வாழ் இந்தியர்கள்
சிறார்
இந்தியர்கள்
கூட்டு கணக்கு வைத்திருப்பவர்கள்
தனிநபர்கள்

மேலும் படிக்க | ஜாக்பாட் அறிவிப்பு விரைவில்: சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் மாற்றம்

ஐடிபிஐ வங்கியில் எஃப்டி கணக்கைத் தொடங்க சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் இவை...

நிலையான வைப்புக்கணக்கு தொடங்க தேவையான ஆவணங்கள்

நிரந்தர கணக்கு எண் (PAN) அட்டை
பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
வயதுச் சான்று
முகவரி சான்று
அடையாள சான்று
விண்ணப்ப படிவம்

IDBI வழங்கும் பல்வேறு FD திட்டங்கள்
சுவிதா நிலையான வைப்பு
சுவிதா வரி சேமிப்பு நிலையான வைப்பு
ஐடிபிஐ வங்கி ஃப்ளோட்டிங் ரேட் FD
நமன் மூத்த குடிமக்கள் வைப்புத் திட்டம்

மேலும் படிக்க | நல்ல செய்தி விரைவில்: PPF வட்டி விகிதங்களை அதிகரிக்க திட்டமா? காத்திருக்கும் மக்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News