புதுடெல்லி: மத்திய அரசில் பணிபுரியும் ஊழியர்கள் தற்காலிக குறிப்பு எண்ணை(reference number) உருவாக்க ஆன்லைனில் (www.cghs.nic.in) புதிய CGHS கார்டுக்கு விண்ணப்பிப்பது அவசியம் என சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அலுவலக குறிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் சமர்ப்பித்த பிறகு, அதன் அச்சுப் பிரதியை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பவேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் சமர்ப்பித்த பிறகு, அதை பிரிண்ட் எடுத்து, அதில் புகைப்படங்களை ஒட்டி, கையொப்பம் இட்டு தற்போது பணிபுரியும் துறையிடம் அதை வேலிடேட் செய்து, சம்பந்தப்பட்ட கூடுதல் இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.


இந்த விண்ணப்பப் படிவத்தின் ஒரு நகல் சம்பந்தப்பட்ட நகரத்தின் கூடுதல் இயக்குநருக்கு அனுப்பப்பட வேண்டும், மற்றொன்று CGHS பலன்களுக்காக, பணியாளரின் சம்பந்தப்பட்டத் துறையிடன் (Employer Department of the Central Government (‘sponsoring authority)) பாதுகாக்கப்பட வேண்டும் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் டபுள் ஜாக்பாட்? தயாராகும் மத்திய அரசு


CGHS கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
www.cghs.nic.in வலைதளத்திற்கு செல்லவும் 


சரிபார்ப்பு படிவத்தை தேர்ந்தெடுக்கவும்


உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடவும்


Capcha குறியீட்டை உள்ளிட்டு OTP ஐ உருவாக்கவும்


உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP வந்தவுடன் அதனை உள்ளிடவும்.


பிறகு படிவத்தை பூர்த்தி செய்து, பிரிண்ட் அவுட் எடுத்து,படிவத்தை சமர்ப்பிக்கலாம்.


மேலும் படிக்க | Section 80C தவிர வருமான வரியை சேமிக்க உதவும் அட்டகாசமான வழிகள்


CGHS ஆன்லைன் விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள்


ஊதிய அளவு மற்றும் CGHS விலக்கு ஆகியவற்றைக் குறிக்கும் பே ஸ்லிப்.


ஆதார் அட்டை/பான் கார்டு அல்லது RBI வழிகாட்டுதலின்படி, ஊழியர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான அடையாளச் சான்றாக வேறு ஏதேனும் செல்லுபடியாகும் ஆவணம்.


07 மே 2018 தேதியிட்ட OM எண்.4-24/96- C&P/CGHS(P)/EHS இன் படி, ஊழியரை சார்ந்திருக்கும் மாற்றுத்திறனாளிகளின் சான்றிதழ் (பொருந்தினால் மட்டும்)


ஊழியர் மற்றும் அவரை சார்ந்திருக்கும் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள்.


CGHS கார்டை சரிபார்ப்பது அவசியமாகிறது. CGHS கார்டின் மின்னணு வடிவமானது, CGHS இணையதளம், myCGHS ஆப் மற்றும் ஆண்ட்ராய்டு/ஐஓஎஸ்-அடிப்படையிலான மொபைல் சாதனங்களுக்கான டிஜிலாக்கர் செயலி ஆகியவற்றில் ‘பயனாளி உள்நுழைவு’ என்ற விருப்பத்தைப் பயன்படுத்தி பயனாளிக்கு அணுக முடியும் என்று OM தெரிவித்துள்ளது.CGHS கார்டின் நம்பகத்தன்மையை CGHS இணையதளத்தில் (www.cghs.nic.in) கிடைக்கும் ‘பயனாளியைச் சரிபார்க்கவும்’ என்ற விருப்பத்தைப் பயன்படுத்தி சரிபார்க்கலாம்.


மேலும் படிக்க | 5 ஆண்டுகளில் ரூ. 24 லட்சம் வரை வருமானம்... ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்யலாம் - இதை பாருங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ