சுவிட்சர்லாந்து வங்கிகளில் பிற நாட்டினர் வைத்திருக்கும் பண இருப்பின் அடிப்படையில் தயாரிக்கப்படும் பட்டியலில் இந்தியா 77ஆவது இடத்திற்கு பின்னேறிவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிதி சார்ந்த சொத்துகளை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான சில நாடுகளில் ஒன்று சுவிட்சர்லாந்து. அங்கு யார் வங்கிக் கணக்கு வைத்திருக்கிறார்கள் என்ற தகவல்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் என்பதால், அனைவரும் சுவிஸ் வங்கிகளில் பணம் போட்டு வைத்திருப்பதாக நம்பப்படுகிறது.


வங்கிகளின் ரகசியம் காக்கும் தன்மையே, உலகம் முழுவதும் உள்ளவர்கள் தங்களுடைய பணம், தங்கம், நகைகள், ஓவியம் உள்ளிட்ட பல மதிப்புமிக்க பொருட்களை சேமித்து வைப்பதற்கான அடிப்படைக் காரணம் ஆகும்.   


Also Read | நன்னடைத்தையால் தண்டனை காலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்படுகிறாரா சசிகலா?


ஆனால் மாறும் கால சூழ்நிலைக்கு ஏற்ப, பயங்கரவாதம், வரி ஏய்ப்பு உட்பட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் சுவிட்சர்லாந்து தனது விதிமுறைகளில் சற்றே மாற்றங்கள் கொண்டு வரத் தொடங்கியுள்ளது. 


ஆனால், சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணம் பதுக்கி வைத்து வரி ஏய்ப்பு செய்யப்படவதாக சர்வதேச அளவில் பேசப்படுகிறது.  சுவிட்சர்லாந்தை பொருத்தவரை, தனது வாடிக்கையாளர் தொடர்பான தகவலை, ஒரு வங்கி பிறருக்கு கொடுப்பது குற்றம். பல்வேறு சர்ச்சைகளுக்கும் விவாதங்களுக்கும் பிறகு, சுவிட்சர்லாந்து தனது விதிமுறைகளை மாற்றியமைத்தது.


சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு இந்தியா உள்ளிட்ட 75 நாடுகளுடன் 31,00,000 வங்கி கணக்குகள் குறித்த விபரங்களை பகிர்ந்துக் கொள்வதாக சுவிட்சர்லாந்து வரி நிர்வாகத்துறை தெரிவித்தது.


Also Read | இரானில் இருந்து 687 தமிழக மீனவர்களுடன் ஐஎன்எஸ் ஜலஸ்வா போர்க் கப்பல் தூத்துக்குடி கிளம்பியது


கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முதன்முறையாக சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை சுவிட்சர்லாந்து நாட்டு அரசு, இந்திய அரசிடம் வழங்கியது.  அடுத்த பட்டியல் இந்த ஆண்டு வழங்கப்படும் என்றும் சுவிட்சர்லாந்து தெரிவித்திருந்தது.  இந்த நிலையில் சுவிஸ் நாட்டு வங்கிகளில் பணம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 77வது இடத்திற்கு வந்துவிட்டது.


முதல் பட்டியல் வெளியான பிறகு, இந்தியர்கள் தங்கள் கணக்குகளில் இருந்து பெருமளவில் பணத்தை எடுத்துவிட்டதாகவும் இதற்குக் பொருள் கொள்ளலாம்.  அல்லது, பிற நாட்டினர் சுவிஸ் வங்கிகளில் அதிக அளவில் பணத்தை டெபாஸிட் செய்திருக்கலாம்.