LIC Whatsapp Service: காப்பீடு நிறுவனமான எல்ஐசி, சமீபத்தில் தனது பாலிசிதாரர்களுக்காக தனது முதல் வாட்ஸ்அப் சேவையை அறிமுகப்படுத்தியது. எல்ஐசி இணையத்தளத்தில் தங்களது பாலிசிகளைப் பதிவு செய்த பாலிசிதாரர்கள் மட்டுமே இந்தச் சேவைகளை வாட்ஸ்அப்பில் பெற முடியும். உங்களது வாட்ஸ்அப் மொபைல் எண்ணில், 897686209 என்ற எண்ணை பதிவுசெய்து 'HI' என்று சேவையை பெற்றுக்கொள்ளலாம். அவர்கள் தங்களின் பிரீமியம் நிலுவைத் தொகை, பாலிசி நிலை கடன் வட்டி, மற்றும் போனஸ் தகவல் ஆகியவற்றை எப்போது வேண்டாமானாலும் பார்த்துக்கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எல்ஐசி இணையத்தளத்தில் தங்களது பாலிசிகளைப் பதிவு செய்த பாலிசிதாரர்கள் மட்டுமே இந்தச் சேவைகளை  பெற முடியும் என்பதால், licindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைந்து ஒருவர் தங்கள் பாலிசியை பதிவு செய்யலாம்.


எல்ஐசி ஆன்லைன் போர்ட்டலில் பாலிசியை பதிவு செய்வது எப்படி?


- www.licindia.in என்ற எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- இப்போது "Customer Portal" ஆப்ஷனை கிளிக் செய்து திறக்கவும்.
- நீங்கள் புதிய பயனராக இருந்தால், "New User" என்பதைக் கிளிக் செய்து தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளிடவும். அடுத்த திரையில், நீங்கள் விரும்பும் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைத் தேர்ந்தெடுத்து சமர்ப்பிக்க வேண்டும்.
- இப்போது உங்கள் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைத் தேர்ந்தெடுத்து உங்கள் விவரங்களைச் சமர்ப்பிக்கவும்.
- புதிதாக உருவாக்கப்பட்ட இந்த பயனர் ஐடி மூலம் உள்நுழைந்து, 'Basic Service' - "Add Policy" என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும், உங்களின் மீதமுள்ள அனைத்து பாலிசிகளையும் பதிவு செய்யவும். - இந்த கட்டத்தில், நீங்கள் பதிவுசெய்த பாலிசியின்கீழ் அனைத்து அடிப்படை சேவைகளும் கிடைக்கும்.
- அதன் பிறகு, பிரீமியர் சேவைகளுக்கான பதிவுக்கான 3-படி செயல்முறையைப் பின்பற்றவும். இப்போது பதிவை முடிக்க உங்களின் அனைத்து பாலிசிகளின் விவரங்களையும் சேர்க்கவும்.


மேலும் படிக்க | துருக்கி நிலநடுக்கம்! வாட்ஸ்அப் ஸ்டேடஸால் இடிபாடுகளில் இருந்த மீட்கப்பட்ட நபர்!


எல்ஐசி வாட்ஸ்அப் வழங்கும் சேவைகள்


  1. செலுத்த வேண்டிய பாலிசி பிரீமியம்

  2. ஊக்கத் தொகை

  3. பாலிசியின் நிலை

  4. கடன் தகுதி மேற்கோள்

  5. கடன் திருப்பிச் செலுத்துவதற்கான மேற்கோள்

  6. கடன் வட்டி செலுத்தும் தொகை

  7. பிரீமியம் செலுத்திய சான்றிதழ்

  8. ULIP - அலகுகளின் அறிக்கை

  9. எல்ஐசி சேவை இணைப்புகள்

  10. சேவைகளைத் தேர்வு செய்யவும் / விலகவும்

  11. உரையாடலை முடிக்கவும்


எல்ஐசி வாட்ஸ்அப் சேவைகளை எவ்வாறு பயன்படுத்துவது?


- உங்கள் தொலைபேசியின் தொடர்புகளில் எல்ஐசியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணைச் சேமிக்கவும். எண்: 8976862090. 
- உங்கள் வாட்ஸ்அப்பைத் திறந்து, பிறகு எல்ஐசி ஆஃப் இந்தியா வாட்ஸ்அப் சாட் பாக்ஸைத் தேடித் திறக்கவும்.
- மெசேஜ் பாக்ஸில் 'HI' என அனுப்பவும்
- எல்ஐசி தானியங்கி உங்களுக்கு மேற்கூறிய 11 ஆப்ஷன்களை கொடுக்கும். 
- சேவை தேர்வு விருப்ப எண்ணுடன் மெசேஜில் பதிலளிக்கவும். எடுத்துக்காட்டாக, 1 பிரீமியம் தேதிக்கானது, மற்றும் 2 போனஸ் தகவலுக்கானது.
- வாட்ஸ்அப் மெசேஜில் தேவையான விவரங்களை எல்ஐசி பகிரும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ அரியர் பற்றிய முக்கிய அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ