Old Pension Vs New Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டமா, புதிய ஓய்வூதியத் திட்டமா? எந்த திட்டம் சிறந்தது?
Old Pension Vs New Pension Scheme: ஊழியர்களுக்கு ஏற்ற ஓய்வூதியத் திட்டம் எது? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? இந்த பதிவில் விரிவாக காணலாம்.
பழைய ஓய்வூதியத் திட்டம்: மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற அரசு ஊழியர்களின் கோரிக்கை அதிகரித்து வருகிறது. மாநிலங்களை பொறுத்த வரையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பழைய ஓய்வூதியத் திட்டம் பற்றிய அறிவிப்பை முதன்முதலில் வெளியிட்டார். 2022 மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, சட்டசபையில் ஏழு லட்சம் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவதாக அவர் அறிவித்தார். ராஜஸ்தானை அடுத்து, பஞ்சாப், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநில அரசுகளும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளன.
ஆன்லைன் கூட்டத்தில் தொழிலாளர் அமைப்புகள் பங்கேற்கவில்லை
சமீபத்தில் இந்த திட்டம் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் அரசுகளால் செயல்படுத்தப்பட்டது. பஞ்சாபில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ஆம் ஆத்மி அரசு தயாராகி வருகிறது. இவற்றுக்கு மத்தியில், மத்திய அரசின் தரப்பிலிருந்து இது குறித்து எந்த தகவலும் இல்லை. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், பழைய ஓய்வூதிய முறையை (ஓபிஎஸ்) அமல்படுத்த வேண்டும் என தொழிலாளர் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. நிதியமைச்சருடன் நேரில் அமர்ந்து பேச்சுவர்த்தை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த தொழிலாளர் அமைப்புகள் ஆன்லைன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
எதிர்காலத்தில் வரி செலுத்துவோர் மீது சுமை கூடும்
இத்தனைக்கும் மத்தியில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது எதிர்காலத்துக்குச் சரியானதாக இருக்குமா என்ற கேள்வி அனைவரது மனங்களிலும் உள்ளது. கடனில் சிக்கித் தவிக்கும் மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தினால், அது வரும் காலங்களில் அவர்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என்று நிபுணர்களும் கூறுகிறார்கள். இது அடுத்தடுத்து ஆட்சிக்கு வரவிருக்கும் அரசுகளுக்கு நிதிச்சுமையை அதிகரிக்கும். மாநில அரசுகளின் இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் வரி செலுத்துவோர் மீது சுமையை ஏற்படுத்தும் என்று நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் பெர்ரி சமீபத்தில் தெளிவாகக் கூறியிருந்தார்.
மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு அசத்தல் செய்தி: மீண்டும் வருகிறதா பழைய ஓய்வூதியத் திட்டம்?
பழைய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?
இத்திட்டத்தில், பணி ஓய்வு பெறும் போது, சம்பளத்தில் பாதி, ஓய்வூதியமாக வழங்கப்படும். பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பொது வருங்கால வைப்பு நிதி (ஜிபிஎஃப்) வழங்கப்பட்டுகிறது. இத்திட்டத்தில், பணியாளர்கள் ரூ.20 லட்சம் வரை பணிக்கொடை பெறும் வசதி உள்ளது. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு முறை அகவிலைப்படி அதிகரிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியத் தொகை அரசின் கருவூலத்தில் இருந்து வழங்கப்படுகிறது. ஓய்வு பெற்ற ஊழியர் இறந்தால், விதிகளின்படி அவரது குடும்ப உறுப்பினர்கள் ஓய்வூதியத் தொகையைப் பெறுவார்கள். இத்திட்டத்தில், பணியாளரின் சம்பளத்தில் இருந்து எந்த தொகையும் பிடித்தம் செய்யப்படுவதில்லை.
புதிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?
புதிய ஓய்வூதிய திட்டத்தில் அடிப்படை சம்பளம் மற்றும் டிஏ-வில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) முற்றிலும் பங்குச் சந்தையின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில், 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியம் பெற, என்பிஎஸ் நிதியில் 40 சதவீதத்தை முதலீடு செய்ய வேண்டும். அதாவது, ஊழியர்களுக்கு 60 சதவீத தொகையிலிருந்து ஓய்வூதியம் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் பணி ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியத்துக்கான உத்தரவாதம் இல்லை. உறவினர்களுக்கான எந்த வித வசதியும் இதில் செய்யப்படவில்லை. இதில் அகவிலைப்படி அதிகரிப்பதற்கான விதிமுறையும் இல்லை.
அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜனவரி 2004 முதல் தேசிய ஓய்வூதிய முறையை (என்பிஎஸ்) அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. என்பிஎஸ் என்பது பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டமாகும். மேலும் அதில் அகவிலைப்படி வழங்கப்படுவதற்கான எந்த வழிமுறையும் இல்லை.
மேலும் படிக்க | லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு லாட்டரி, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ