Proud moment! UAEல் இருந்து 10 மில்லியன் டாலர் முதலீடு பெற்ற இந்திய மாணவரின் startup நிறுவனம்
துபாயில் நடைபெற்ற GITEX 2020 சர்வதேச மாநாட்டில் The biotech ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் தயாரிப்பு காட்சிப்படுத்தப்பட்டது. Innovation and Entrepreneurship Development Centre (IEDC) அமைப்பின் கீழ் இயங்கும் KSUM Startup திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
துபாயில் நடைபெற்ற GITEX 2020 சர்வதேச மாநாட்டில் The biotech ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் தயாரிப்பு காட்சிப்படுத்தப்பட்டது. Innovation and Entrepreneurship Development Centre (IEDC) அமைப்பின் கீழ் இயங்கும் KSUM Startup திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
பயோடெக் ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் தயாரிப்பு துபாயில் நடைபெற்ற GITEX 2020 சர்வதேச மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டது. கேரள ஸ்டார்ட்அப் மிஷனின் (கே.எஸ்.யூ.எம்) கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் (ஐ.இ.டி.சி) திட்டத்தின் கீழ், ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாகக் கொண்ட டி.சி.என் இன்டர்நேஷனல் காமர்ஸ் எல்.எல்.சியில் இருந்து "ஆல்கா-கடற்பாசி தொழில்நுட்பம்" என்ற திட்டத்திற்கு 10 மில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்றுள்ளது. .
மைக்ரோ ஆல்காவைப் பயன்படுத்தி ஆற்றல் மற்றும் உணவு நெருக்கடியில் ஆராய்ச்சி செய்வதில் கவனம் செலுத்தும் ஜாரா பயோடெக் (Zaara Biotech), டி.சி.என் சர்வதேச வர்த்தகத்தின் கீழ் அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி, விநியோகம் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றிற்கான நிதியைப் பெற்றது.
Also Read | Data Theft: OTPகள் பாதுகாப்பாக இல்லை, SMS மூலம் தரவுகள் திருட்டு
ஜாரா பயோடெக் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நஜீப் பின் ஹனீப் மற்றும் டி.சி.என் சர்வதேச வர்த்தகத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான மொஹமத் ஷாஃபி அப்துல்லா ஆகியோர் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
2016 ஆம் ஆண்டில் சஹர்தயா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் (Sahrdaya College of Engineering and Technology) உயிரி தொழில்நுட்ப பொறியியல் மாணவராக ஹனீஃப் இருந்தபோது ஜாரா பயோடெக் நிறுவனத்தை உருவாக்கினார்.
பயோடெக் ஸ்டார்ட்அப், Sahrdaya Technology Business Incubator (Sahrdaa TBI) உடன் இணைந்து செயல்படுகிறது. ICAR-CIFT அமைப்புடன் ஒன்றிணைந்து செயல்படும் இது, இந்தியாவின் முதல் ஆல்கா-கடற்பாசி உணவு தயாரிப்பு வடிவமைப்பாளராக மாறியுள்ளது.
Also Read | 7th Pay Commission New updates: இந்த தேதியில் இருந்து DA, DR சலுகைகள் கிடைக்கும்
ஜாரா குழு தொழில்முனைவோர் முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்னர் வளாகத்தில் அதன் முதல் ஆண்டில் ஒரு 'Mushroom Hub' ஒன்றை அமைத்திருந்தது.
டி.சி.என் இன்டர்நேஷனல் காமர்ஸ் ஐ.டி, பிசினஸ் பிராசஸ் மேனேஜ்மென்ட், டிரேடிங், ஹெல்த்கேர், கல்வி, எஃப்.எம்.சி.ஜி, கட்டுமானம் மற்றும் பொறியியல், பாதுகாப்பு, முக்கியமான சேவை வழங்குநர்கள், விமான மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற பல துறைகளில் தனது காலடி தடத்தைப் பதித்துள்ளது.
கே.எஸ்.யூ.எம் என்பது மாநிலத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு நடவடிக்கைகளுக்கான கேரள அரசின் நோடல் ஏஜென்சி ஆகும்.
Also Read | கைதிகளுக்கு GPS tag அணிவித்தால் குற்றங்கள் கட்டுப்படும் என்பது உண்மையா?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR