7th Pay Commission New updates: இந்த தேதியில் இருந்து DA, DR சலுகைகள் கிடைக்கும்

ஏழாவது ஊதிய பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் நாள்,   லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணத்தை அளிக்கும்

ஜூலை 1 முதல் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று மோடி அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் கணிசமான பலன் கிடைக்கும், இது நிலுவையில் உள்ள முந்தைய மூன்று காலகட்டத்திற்கான அதிகரிப்புகளையும் சாத்தியமாக்கலாம்..

Also Read | ஜஸ்பிரித் பும்ரா-சஞ்சனா கணேசனின் திருமண சடங்குகள் அசத்தலான புகைப்படங்கள்

1 /5

லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசு நிவாரணம் அளித்து வருவதாக நிதியமைச்சர் அனுராக் தாக்கூர் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஜூலை 1 முதல் ஊழியர்களுக்கு,  நிலுவையில் உள்ள முந்தைய மூன்று காலகட்டத்திற்கான தொகையும் கிடைக்கலாம்.

2 /5

கோவிட் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு ஜனவரி முதல் ஜூலை 2020 வரை (3%) மற்றும் ஜூலை முதல் டிசம்பர் 2020 வரை (4%) மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது.   இப்போது 2021 ஜனவரி முதல் ஜூலை வரையிலான டிஏ அறிவிக்கப்பட வேண்டும், இது 4 சதவீதமாக இருக்கலாம். நிலுவையில் இருக்கும் 17 சதவிகித டிஏவையும், கடந்த மூன்று பருவத்திற்கான நிறுத்தி வைக்கப்பட்டதையும் சேர்த்து மொத்தமாக (3 + 4 + 4) 28 சதவிகிதம் வரை அதிகரிப்பு இருக்கலாம்.

3 /5

டிஏ அதிகரிப்பு அறிவிப்பால், ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். தரவுகளின்படி, சுமார் 50 லட்சம் மத்திய அரசி ஊழியர்கள் மற்றும் 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோர் பலன் பெறுவார்கள்.

4 /5

புதிய தொழிலாளர் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், எதிர்வரும் நிதியாண்டில் இருந்து புதிய தொழிலாளர் சட்டமும் (New Wage Code 2021) அமலுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம். ஏப்ரல் 1 முதல் மோடி அவை அமலுக்கு வருவது அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாறுதல்களை ஏற்படுத்தும்.  

5 /5

டிஏ அதிகரிப்பு அறிவிக்கப்பட்டவுடன், அது உங்கள் சம்பளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். விதிகளின்படி, அடிப்படை சம்பளத்தை கணக்கில் வைத்து, அதற்கேற்றாற் போல பி.எஃப் மற்றும் கிராஜுவிட்டி கழிக்கப்படுகிறது. புதிய சம்பள சட்டத்தின்படி, சி.டி.சி-யில் அடிப்படை சம்பளம் 50 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கக்கூடாது.