நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரான எஸ்பிஐ வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு உடனடி கடன் வழங்கும் செயலிகள் குறித்த சில எச்சரிக்கைகளை அறிவித்துள்ளது.  தனது வாடிக்கையாளர்களின் நலனை கருத்திற்கொண்டு வங்கி சில பாதுகாப்பு வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.  சமீபத்தில் எஸ்பிஐ வங்கி அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், சந்தேகத்திற்குரிய இணைப்புகளைக் கிளிக் செய்வதையோ அல்லது வங்கி அல்லது நிதி நிறுவனமாக காட்டிக் கொள்ளும் நிறுவனத்திற்கு உங்கள் தகவலை வழங்குவதையோ தவிர்க்க வேண்டும் என்றும், இதுகுறித்த புகாரை https:// cybercrime.gov.in என்ற முகவரியில் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | ரயில் பயணிகளுக்கு ஷாக்: ரயிலில் உணவு வாங்க இனி அதிக செலவாகும்


எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள 6 பாதுகாப்பு வழிமுறைகள்:


1) ஒரு செயலியை டவுன்லோடு செய்யும் முன் அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டும்.


2) சந்தேகத்திற்கிடமான லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம்.


3) உங்கள் டேட்டாவை திருடக்கூடிய அங்கீகரிக்கப்படாத ஆப்ஸைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.


4) உங்கள் டேட்டாக்கள் திருடப்படாமல் பாதுகாக்க, ஆப்ஸ் அனுமதி அமைப்புகளைச் சரிபார்க்கவும்.


5) சந்தேகத்திற்கிடமான வகையில் கடன் வழங்கும் செயலிகள் பற்றி எதுவும் தெரியவந்தால் அதுபற்றி உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுக்குப் புகாரளிக்கவும்.


6) உங்களின் அனைத்து நிதித் தேவைகளுக்கும் http://bank.sbi-க்கு சென்று சரிபார்க்கலாம்.


ரிசர்வ் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்கள் முறையான கடன்களை வழங்க முடியும்.  மக்கள் கேஒய்சி ஆவணங்களின் நகல்களை அடையாளம் தெரியாத நபர்களிடமோ அல்லது சரிபார்க்கப்படாத/அங்கீகரிக்கப்படாத செயலிகளிலோ பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று வங்கி எச்சரித்துள்ளது.  மேலும் எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு ஃபிஷிங் ட்ரென்ட்ஸ் பற்றியும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


மேலும் படிக்க | ஃப்ரிட்ஜில் வைத்த உணவை சாப்பிவதால் இவ்வளவு பாதிப்புகள் வருமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ