UPI டிரான்ஸாக்ஷன் தோல்வியடைந்து விட்டால் உடனே இத பண்ணிடுங்க!
சில சமயம் நீங்கள் அவசரத்தில் தவறாக யூபிஐ பின் உள்ளிட்டாலும் உங்களது டிரான்ஸாக்ஷன் தோல்வியில் முடியும், அதனால் எப்போதும் ட்ரான்ஸாக்ஷன் செய்வதற்கு சரிபார்த்து கொள்வது அவசியம்.
யூபிஐ டிரான்ஸாக்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டது அனைவருக்கும் எளிமையான ஒன்றாக மாறிவிட்டது, ஒரே இடத்தில் இருந்துகொண்டே எந்த மாநிலத்தை சேர்ந்தவருக்கு எந்த நாட்டை சேர்ந்தவருக்கு ஒரே தட்டலில் பணத்தை அனுப்பிவைக்க முடியும். இவ்வாறு டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை மேற்கொள்வதன் மூலம் மக்கள் வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை செலுத்தியோ அல்லது பணத்தை எடுத்தோ நேரத்தை வீணடிக்க வேண்டிய தேவையில்லை. ஆனால் சில சமயங்களில் நீங்கள் யூபிஐ மூலமாக டிரான்ஸாக்ஷன் செய்யும்போது உங்களது சேவையில் பாதிப்பு ஏற்படும், அதாவது உங்களது டிரான்ஸாக்ஷன் தோல்வியில் முடியும் அந்த சமயத்தில் சிலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. எதனால் டிரான்ஸாக்ஷன் தோல்வியடைந்தது என நினைத்து குழப்பத்தில் இருப்பார்கள்.
மேலும் படிக்க | Aadhaar Card: ஆதாரில் எத்தனை முறை அப்டேட் செய்ய முடியும்? கட்டணம் என்ன?
முதலில் எதனால் டிரான்ஸாக்ஷன் தோல்வியடைந்தது என்கிற காரணத்தை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியமான ஒன்று. தினசரி இவ்வளவு தொகை மட்டுமே பரிவர்த்தனை செய்ய வேண்டுமென்கிற வரம்பு விதிக்கப்பட்டு இருக்கும், அந்த டிரான்ஸாக்ஷன் வரம்பை தாண்டி நீங்கள் டிரான்ஸாக்ஷன் செய்யும்பட்சத்தில் அது தோல்வியில் முடியும். மீண்டும் டிரான்ஸாக்ஷன் செய்ய நீங்கள் 24 மணி நேரம் காத்திருந்து அதன் பின்னர் டிரான்ஸாக்ஷன் செய்ய வேண்டும். அடுத்ததாக சில சமயம் நீங்கள் அவசரத்தில் தவறாக யூபிஐ பின் உள்ளிட்டாலும் உங்களது டிரான்ஸாக்ஷன் தோல்வியில் முடியும், அதனால் எப்போதும் ட்ரான்ஸாக்ஷன் செய்வதற்கு முன்னதாக நீங்கள் யாருக்கு அனுப்புகிறீர்களோ அவர்களது விவரங்களை சரியாக கண்காணிக்க வேண்டும், அதனை சரிபார்த்த பிறகு உங்கள் யூபிஐ எண்ணெயும் சரியாக உள்ளிட்டு பரிவர்த்தனை செய்யுங்கள்.
மேலும் உங்களது கணக்கில் போதுமான பணம் இல்லாவிட்டாலும் உங்களது டிரான்ஸாக்ஷன் தோல்வியில் முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதனால் நீங்கள் பரிவர்த்தனை செய்வதற்கு முன்னதாக உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை சரிபார்த்த பின்னர் டிரான்ஸாக்ஷன் செய்யலாம். சில சமயம் உங்கள் வங்கிகளில் ஏற்படும் சர்வர் பிரச்சனை காரணமாகவும் டிரான்ஸாக்ஷன் செய்வதில் சிக்கல் ஏற்படும், அந்த குறிப்பிட்ட நேரத்தை தவிர்த்து மற்ற நேரத்தில் நீங்கள் பரிவர்த்தனை செய்துகொள்ளலாம். நீங்கள் டிரான்ஸாக்ஷன் செய்யும்போது உங்கள் கணக்கிலிருந்து, பெறுபவரின் கணக்கிற்கு பணம் செல்லவில்லையெனில் அந்த பணம் 48 மணி நேரத்திற்குள் உங்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும்.
மேலும் படிக்க | அக்.1 முதல் புதிய கிரெடிட் / டெபிட் கார்டு முறை - டோக்கன் உருவாக்குவது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ