புதுடெல்லி: இந்திய தொழிலதிபர் கெளதம் அதானியின் சிக்கல்கள் முடிவுக்கு வந்துவிட்டதாக தோன்றுகிறது. இலங்கையில் ஒரு கொள்கலன் முனையம் அமைப்பதற்காக அதானி குழுமத்திற்கு 553 மில்லியன் அமெரிக்க டாலர்களை அமெரிக்கா கடன் கொடுத்தது. இந்த பெரியத் தொகையை கடனாக வழங்குவதற்கு முன், கார்ப்பரேட் மோசடி குறித்த குற்றச்சாட்டுகளை அமெரிக்கா விசாரித்தது என்றும், குற்றச்சாட்டுகள் உண்மையில் பொருத்தமானவை அல்ல என்ற செய்தி அதானி குழுமத்திற்கு நிம்மதியை கொடுத்திருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹிண்டன்பேர்க் ரிசர்ச் நிறுவனம் முன் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பிறகும் இந்திய நிறுவனத்திற்கு கடன் கொடுத்தது தொடர்பாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திடம் மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தாக தகவல்கள் கூறுகின்றன.


இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு சுமார் 100 பில்லியன் டாலர்கள் வீழ்ச்சியடைந்தது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட ஒரு செய்தியில் இருந்த குற்றச்சாட்டுகளே அதானி குழுமத்தின் இழப்புக்கு அடிப்படையாக இருந்தது. அறிக்கையில் கூறப்பட்டிருந்த மோசமான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அது சரியானதில்லை என்று கண்டறியப்பட்ட பிறகே, கடன் வழங்கப்பட்டதாக சர்வதேச வளர்ச்சி நிதிக் கழகம் DFC அதிகாரி ஒருவர் Bloomberg இடம் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | 2015 செயற்கை வெள்ளம்... இது இயற்கை வெள்ளம் - ஸ்டாலினின் விளக்கம் என்ன?


இந்த செய்தி, அதானி குழும முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய செய்தியாகவும் உள்ளது. ஏனென்றால், இந்த ஆண்டு துவக்கத்திலேயே அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியானதில் இருந்து நஷ்டத்தை அனுபவித்த அதானி குழுமம், அந்த பிரச்சனையை திறமையாக கையாண்டு மீண்டுவிட்டது. இருந்தாலும், கௌதம் அதானியின் சொத்து மதிப்பு சரிந்தது. அத்துடன், முதலீட்டாளர்களின் மதிப்பும் சரிந்து வந்தது.


அதானி - ஹிண்டன்பெர்க் ரிசர்ச் விவகாரம் தொடர்பான விவகாரத்தில் சில ஊடக அறிக்கைகளை மட்டும் நம்பிம் செபி அமைப்பின் விசாரணையை நீதிமன்றம் சந்தேகிக்க முடியாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி DY சந்திரசூட் தலைமையிலான நீதிமன்ற அமர்வு கூறியது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து அதானி குழும பங்குகள் மீண்டும் மீண்டு வரும் நிலையில், தற்போதைய செய்தியும் அதானி குழுமத்திற்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது.


மேலும் படிக்க | மிக்ஜாம் புயலின் கோர ஆட்டம்... ஊர் முழுக்க தண்ணீர் - சென்னையின் இப்போதைய நிலை என்ன?


தற்போது இலங்கையில் துறைமுகத்தை அமைக்கும் அதானி குழுமத்திற்கு 553 மில்லியன் டாலர் வரை கடன் நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனால், சர்வதேச வளர்ச்சி நிதிக் கழகம் அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்த பிறகே கடன் வழங்கப்பட்டது என்ற விஷயம், அதானி குழுமத்திற்கு க்ளீன் சிட் கொடுத்ததாகவே கருதபடுகிறது.


மேலும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றச்சாட்டுகளுக்கும், அதானி போர்ட்ஸ் & SEZ மற்றும் இலங்கை திட்டத்தைச் செயல்படுத்தும் கிளை நிறுவனத்திற்கும் தொடர்பு இல்லை என்பதை உறுதி செய்த பின்பு தான் கடன் கொடுத்துள்ளது என்ற தகவலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்கும் விதமாக இந்தியா - அமெரிக்கா கூட்டணியில் அதானி குழுமம் கட்டும் புதிய துறைமுகத்திற்கு அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி நிதிக் கழகம் சுமார் 533 மில்லியன் டாலர் அளவிலான நிதியுதவியை அளிப்பதாக அமெரிக்க அரசு தரப்பில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டது.


மேலும் படிக்க | 1 ரூ.கோடி டர்ன்-ஓவர் செய்யும் விவசாயி! மத்திய அரசின் Billionaire award பெறும் ரமேஷ் நாயக்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ