2015 செயற்கை வெள்ளம்... இது இயற்கை வெள்ளம் - ஸ்டாலினின் விளக்கம் என்ன?

Chennai Floods: சென்னை உள்ளிட்ட மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 5, 2023, 11:18 AM IST
  • மத்திய அரசிடம் ரூ.5 ஆயிரம் கோடி நிவாரணமாக கேட்டுள்ளோம் - முதல்வர் ஸ்டாலின்
  • கடந்த காலங்களை விட பாதிப்புகள் குறைவு - முதல்வர் ஸ்டாலின்
  • முழு வீச்சில் நடைபெற்று வருகிறது - முதல்வர் ஸ்டாலின்
2015 செயற்கை வெள்ளம்... இது இயற்கை வெள்ளம் - ஸ்டாலினின் விளக்கம் என்ன? title=

Chennai Floods: ரிப்பன் மாளிகையில் கட்டுப்பாட்டு அரையில் மேற்கொண்ட ஆய்வுக்கு பின் முதலமைச்சர் ஸ்டாலின் (CM MK Stalin) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டாலும், தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிப்பு மிகவும் குறைவாக உள்ளது. 9 மாவட்டங்களில் 61 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைகப்பட்டுள்ளன. 

2015இல் வந்தது செயற்கை வெள்ளம், இது இயற்கை வெள்ளம். அப்போது 119 பேர் உயிரிழந்த நிலையில், இப்போது 7 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த காலங்களை விட தற்போது பாதிப்புகள் குறைந்துள்ளன. மத்திய அரசிடம் 5 ஆயிரம் கோடி கேட்டுள்ளோம். ரூ.4 ஆயிரம் கோடியில் மழைநீர் வடிக்கால் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால்தான் பாதிப்பு குறைந்திருக்கிறது. சென்னையில் இயல்பு நிலை திரும்ப முழு வீச்சில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.

2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின், நவம்பரில் வெள்ளம் ஏற்பட்டது. இதற்கு பின், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு அவர்கள் அளித்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் ரூ.4 ஆயிரம் கோடி செலவில் மழை வெள்ள வடிகால் அமைக்கப்பட்டது.

மேலும் படிக்க | மிக்ஜாம் புயலின் கோர ஆட்டம்... ஊர் முழுக்க தண்ணீர் - சென்னையின் இப்போதைய நிலை என்ன?

இந்த பணியினால்தான் தற்போது ஏற்பட்டுள்ள இந்த வரலாறு காணாத வெள்ளத்தை சந்தித்தாலும், கடந்த காலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை நாம் சந்திக்கவில்லை. 2015இல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை யாராலும் மறக்க முடியும்

2015இல் நுங்கம்பாக்கத்தில் 29.4 மி.மீ., மழையும்; மீனம்பாக்கம் - 34.5 மி.மீ., மழையும் பதிவானது. தற்போது பெருங்குடியில் 44 மி.மீ., மழையும்; மீனம்பாக்கத்தில் 43 மி.மீ., மழையும் 36 மணிநேரத்தில் பதிவாகியுள்ளது. இதன்மூலம், இந்த மிக்ஜாம் புயலின் தாக்கத்தை புரிந்துகொள்ள முடியும். மிக்ஜாம் புயல் விரைவாக இல்லாமல் நீண்ட நேரம் நின்று வீசியதால் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டது. இதனால்தான் இந்த வெள்ளப்பெருக்கை எதிர்கொள்கிறோம். 

2015இல் வந்தது செயற்கை வெள்ளம், இது இயற்கை வெள்ளம். அப்போது 119 பேர் உயிரிழந்த நிலையில், இப்போது 7 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த காலங்களை விட தற்போது பாதிப்புகள் குறைந்துள்ளன. ஆனால், இந்த 7 பேரும் இறந்த சம்பவம் கூட ஏற்பட்டிருக்கக் கூடாது, இதற்காக வருந்துகிறேன்.

11 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கியிருக்கிறோம். 1 லட்சம் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. வெள்ள நீர் கடலில் கலக்க கூடியது அடையாறு, கூவம் நதிகளாகும். கடலில் அதிக அலைகளின் காரணமாக மழை வெள்ள நீர் கடலில் கலப்பது மிக மெதுவாக இருந்த காரணத்தினால் மழை வடிகால் தாமதமாகிறது. விரைவாக தற்போது வடிந்து வருகிறது. 

அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் விளக்க விரும்புகிறேன். 2015இல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திட்டமிடப்படாமல் 1 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டதால் அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டது. அது செயற்கையாக ஏற்பட்ட வெள்ளம். ஆனால், தற்போது திட்டமிடப்பட்டு சில நாள்களுக்கு முன்னரே திறந்துவிடப்பட்டது. பெருமழையிலும் 8 ஆயிரம் கன அடி நீரே திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால்தான், வெள்ளம் தற்போது விரைவாக வடிந்து வருகிறது. 

மக்கள் எதிர்கொண்டு வரும் இன்னல்களை கேட்டேன், நேரிலும் பார்த்தேன். அரசு மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்படுகிறது. பல மாவட்டங்களில் இருந்து வந்துள்ள தூய்மை பணியாளர்கள் சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றி, சென்னையை சுற்றிய பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப பணியாற்றி வருகின்றனர், பல அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். 

4 ஆயிரம் கோடி ரூபாய் செலவும் செய்தும், சென்னை மிதக்கிறது என எதிர்கட்சி தலைவர் சொல்கிறார். இதனை அரசியலாக்க விரும்பவில்லை. திட்டமிட்டு நடத்தப்பட்ட அந்த செலவினால்தான் கடந்த காலங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் தற்போது ஏற்படவில்லை. இதை கடந்த ஆட்சியில் அவர்கள் செய்யவில்லை, திமுக ஆட்சியில் செய்யப்பட்டுள்ளது. 

வரலாறு காணாத மழை காரணமாக வெள்ள சேதம், குடியிருப்புகள், சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, ரூ. 5 ஆயிரம் கோடி மத்திய அரசிடம் கேட்டு இன்று கடிதம் எழுத உள்ளோம். 900க்கும் மேற்பட்ட மோட்டர்கள் வைத்து நீரை வெளியேற்று வருகிறோம். நீரில் மூழ்கிய மோட்டர்களுக்கு மாற்றாகவும் மோட்டர்கள் கொண்டுள்ளன. இயற்கையாக வடிந்து வரும் நிலையில், மோட்டர் வைத்தும் நீர் வெளியேற்றப்படுகிறது. மின்சாரம் 75 சதவீதம் கொடுக்கப்பட்டுள்ளது, 25 சதவீதம் கொடுக்கப்பட்டுள்ளது. 

2015இல் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, நான்கு நாள்களுக்கு பிறகுதான் நிவாரணம் தொடங்கியது. இந்த ஆட்சியில் நேற்றில் இருந்தே பணிகள் தொடங்கியுள்ளன. அதிகாரிகள், அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு உடனடி நடவடிக்கைகள் ஏற்பட்டுள்ளன. பாதிப்புகளை கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. மத்திய அரசு நிதியும், தமிழ்நாடு அரசின் நிதியும் சேர்த்து பாதிப்புகள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் இதுவரை நல்ல ஒத்துழைப்பு அளித்தனர். இன்னும் சில நாள்கள் பொறுத்துக்கொண்டால் முழுமையாக நிவாரணம் அளிக்கப்படும்" என்றார். 

மேலும் படிக்க | மிக்ஜாம் புயலின் கோர ஆட்டம்... ஊர் முழுக்க தண்ணீர் - சென்னையின் இப்போதைய நிலை என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News