ஒருவர் தனது வணிக முயற்சியில் வெற்றிபெற என்ன தேவை? ஒரு தனித்துவமான யோசனை மற்றும் சரியான முதலீடு. ஆம்... நாம் ஸ்டார்ட்அப்களின் சகாப்தத்தில் வாழ்கிறோம், மேலும் தொழில்முனைவோர் பயணத்தைத் தொடங்க இது சிறந்த நேரம். ஒருவருக்கு மில்லியன் டாலர் வணிக யோசனை இருந்தாலும் போதுமான முதலீடு இல்லாதிருக்க வாய்ப்பு உள்ளது. இப்போது, இந்த நிலையில், 10,000 ரூபாய்க்கு குறைவான முதலீட்டில் ஸ்டார்ட்அப் ஐடியாக்களின் பட்டியலைத் தொகுத்துள்ளோம். அதனை அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊறுகாய் வியாபாரம் (Pickle Business)


ரூ.10,000 முதலீட்டில் தொழிலை (Business Idea) தொடங்க விரும்புபவர்கள் ஊறுகாய் வியாபாரத்தை தேர்வு செய்யலாம். இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில், வெவ்வேறு வகையான ஊறுகாய் மற்றும் சட்னிகள் உணவின் முக்கியமான அங்கமாக இருக்கின்றன. பல விதமான ஊறுகாய்களைத் தயாரிப்பது என்பது எல்லோருக்கும் எளிதான காரியம் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதோடு இன்று வேலைக்கு செல்பவர்கள் அதிகம் இருப்பதால், நேரமின்மை காரணமாக ஊறூகாய்களை வாங்கும் பழக்கம் உள்ளது. இதனால் தான் நம்மில் பலர் சொந்தமாக தயாரிப்பதை விட, நமக்குப் பிடித்த வகை ஊறுகாய் வகைகளை கடையில் தான் வாங்குகின்றோம். எனினும் வீட்டில் தயாரித்த ஊறுகாய்கள் என்றால், அதிகம் பேர் வாங்க விரும்புவார்கள். இந்தத் தொழிலைத் தொடங்க உங்களுக்கு தேவையானது புதிய மூலப்பொருள், சரியான செய்முறை மற்றும் சில பேக்கேஜிங் பொருட்கள் மட்டுமே. விற்பனையை அதிகரிக்க ஒரு நல்ல சந்தைப்படுத்தல் உத்தியை திட்டமிடுங்கள்.


பிளாக்கிங் (Blogging)


தற்போது பிளாக்கிங் என்பது பலரின் விருப்பமாக மாறிவிட்டது. பிளாக்கிங்கைத் தொடங்க ஒருவர் அதிக முதலீடு செய்வதில்லை. பெரிய பிராண்டுகள் மற்றும் நிறுவனங்கள் கூட வலைப்பதிவாளர்களை பணியமர்த்துகின்றன, அவர்கள் வலைதளங்களுக்கு சுவாரஸ்யமான வீடியோக்கள் மற்றும் உள்ளடக்கங்களை நிர்வகிக்க முடியும். அவர்களின் உள்ளடக்கத்தின் உதவியுடன் உலகளாவிய பார்வையாளர்களைச் சென்றடைவது அவர்களுக்கு எளிதாகிறது.


மேலும் படிக்க | Business Idea: லட்சங்களில் வருமானம் தரும் ஆலோவேரா ஜெல் பிஸினஸ்... நீங்களும் தொடங்கலாம்!


யோகா வகுப்புகள் (Yoga Classes)


ஒருவர் கருத்தில் கொள்ளக்கூடிய மற்றொரு செழிப்பான தொழில் முயற்சி யோகா வகுப்புகள். இந்த வேகமான உலகில், மக்களிடம் போதுமான நேரம் இல்லை. ஆனால் ஆரோக்கியமாக இருப்பதற்கான வழிகளைத் தேடுகின்றனர். இந்நிலையில், யோகா வகுப்புகள் நடத்துவது உங்களுக்கு நிலையான வருவாயைத் தரும். மக்களிடையே யோகா பிரபலமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, வீட்டிலோ அல்லது சமூக மையத்திலோ யோகா கற்பிக்க ஒருவர் தங்கள் சொந்த முயற்சியைத் தொடங்கலாம். இந்த வணிகத்திற்கு 10,000 ரூபாய்க்கு குறைவான முதலீடு தேவைப்படுகிறது.


டிபன் சர்வீஸ் (Tiffin Service)


10,000க்கு கீழ் தொழில் தொடங்க விரும்புவோருக்கு, டிபன் சேவை சிறந்த தேர்வாக இருக்கும். குறிப்பாக பெண்களுக்கு. இப்போதெல்லாம், பெரும்பாலான இந்திய தம்பதிகள் வேலை செய்யும் போது, அவர்கள் நேரமின்மையால் டிபன் சேவை பெறுவது அவர்களது பணியை எளிதாக்கும். ஆரோக்கியமான உணவை உண்பதை உறுதி செய்வதற்காக மக்கள் நல்ல தொகையை செலுத்த தயாராக உள்ளனர். உங்கள் சொந்த சமையலறையில் இருந்து இந்தத் தொழிலைத் தொடங்கலாம்.


ஆன்லைன் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் (Online Fitness Instructor)


வேலை-வாழ்க்கை சமநிலையை பராமரிக்க உலகம் தொடர்ந்து போராடுவதால், அவர்கள் வசதியான மற்றும் எங்கும் பயணிக்க வேண்டிய அவசியமில்லாத உடற்பயிற்சி வகுப்புகளைத் தேடுகிறார்கள். இதன் விளைவாக, ஆன்லைன் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளருக்கான தேவை அதிகரித்துள்ளது. உங்களுக்கு தேவையானது போதுமான அறிவு மற்றும் திறன்கள் ஆகியவை தான்.


மேலும் படிக்க | Business Tips: வெறும் ரூ.10,000 முதலீடு செய்தால் போதும்.. மாதம் 40,000-50,000 வரை சம்பாதிக்கலாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ