ரயில்வே: நவராத்திரி, தீபாவளி ஆகியவற்றை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 நாடு முழுவதும் 196 புதிய ரயில்களை ரயில்வே இயக்கும். இந்த ரயில்களில் பயணத்தின் போது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் சில வழிகாட்டுதல்களைப் அவசியம் பின்பற்ற வேண்டும், இல்லையெனில் நீங்கள் கம்பி எண்ண வேண்டியிருக்கும். 


பயணத்திற்கு முன், ரயிலில் பயணிக்கும் பயணிகள்  மாஸ்க் கண்டிப்பாக அணிய வேண்டும். இல்லை என்றால், ரயிலில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். கோவிட் -19 தொடர்பான நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றால், ரயில்வே சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படலாம் அல்லது அவர்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.


மேலும் படிக்க | பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித்ஷாவின் சொத்து விபரங்களை தெரிந்து கொள்வோமா..!!!


ரயிலில் பயணிக்கும் பயணிகள் பின்பற்ற வேண்டிய கட்டாயம் வழிகாட்டுதல்கள் :


  • பயணிகள்  மாஸ்கை முறையாக அணிய வேண்டும்.

  • சமூக இடைவெளி விதிகளை பின்பற்ற வேண்டும்.

  • கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தால், ரயிலில் பயணம் செய்ய அனுமதி இல்லை.

  • அவர்களுக்கு கொரோனா நெகடிவ் என முடிவு வந்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள்.

  • ரயில் நிலையத்தில் உள்ள சுகாதார குழு அனுமதி வழங்கவில்லை என்றால், பயணம் செய்ய இயலாது.

  • சுகாதாரக் குழுவினர் பயணிக்க அனுமதி அளிக்கா விட்டாலும் ரயிலில் ஏற முயற்சி செய்தால், ரயில்வே சட்டத்தின் 145,153 மற்றும் 154 பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்கப்படலாம்

  • பொது இடத்தில் துப்புவதும் சட்டவிரோதமானது என்று ரயில்வே காவல் துறை கூறியுள்ளது

  • விதிகளை மீறுபவர்கள் ரயில்வே சட்டத்தின் 145 வது பிரிவின் கீழ் அதிகபட்சம் ஒரு மாதம் சிறைவாசம் அனுபவிக்க நேரிடலாம்

  • பிரிவு 153 இன் கீழ் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடலாம். 


ALSO READ | செய்தி சேனல்களின் வாராந்திர TRP மதிப்பீடுகளை BARC தற்காலிகமாக நிறுத்தியுள்ளது..!!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe