வாழ்க்கையில் நிம்மதி தேவையென்றால் பொருளாதார பிரச்சனைகள் இருக்கக்கூடாது. ஒரு குழந்தை பிறந்ததில் இருந்தே பெற்றோர் அதன் படிப்பு திருமணம் என நீண்ட காலத்திற்கு திட்டமிடத் தொடங்கிவிடுகின்றனர். இளம் வயதிலேயே சேமிக்கத் தொடங்கிவிட்டால், சேமிக்கும் பழக்கமும் வளரும், வாழ்க்கையில் பிரச்சனைகளும் இருக்காது. ஒருவர் தனது வாழ்க்கையில் சீக்கிரம் சேமிக்கத் தொடங்கினால் வாழ்க்கையில் நினைத்ததெல்லாம் நிறைவேற்றத் தேவையான நிதி வசதி இருக்கும். கிறாரோ, அவ்வளவு அவர்களின் பணம் வளர்ச்சியடையும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலீடு செய்ய இளைஞர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள். சரி, முதலீடு செய்ய அல்லது சேமிக்கத் தொடங்க சரியான வயது எது? என்ற கேள்விக்கான பதில் பலருக்கும் தெரிவதில்லை. முதலில், முதலீட்டைத் தொடங்குவதற்கு முன்னதாக வட்டியையும், முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபத்தையும் திட்டமிட வேண்டும். 


எதிர்காலத்தில் எதிர்பாராமல் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்திலேயே நிதி மேலாண்மையை மேற்கொள்வது முக்கியம். முதலீடு செய்ய தொடங்கும்போது இளம் வயதிலேயே அதனைத் தொடங்கினால் சேமிக்கும் பழக்கம் கைவந்த கலையாகிவிடும். நிதிச் சந்தைகள் மற்றும் பல்வேறு சேமிப்புக் கருவிகளின் உதவியும், இன்றைய தொழில்நுட்பங்கள் கொடுக்கும் தகவல்களும் அற்புதமான அணுகல்தன்மையைக் கொடுக்கின்றன. 


மேலும் படிக்க | காசோலை மோசடி வழக்கு: தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமாருக்கு 6 மாத சிறை தண்டனை


பெரும்பாலும், 20 களின் முற்பகுதியில் அல்லது 20களின் நடுப்பகுதியில், சேமிப்பு அல்லது முதலீடு செய்வதை விட செலவினங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் மனப்போக்கு இருக்கும். இருப்பினும், பணத்தை நிர்வகிக்கும் கலையில் தேர்ச்சி பெறுவது ஆரோக்கியமான நிதி வாழ்க்கைக்கு முக்கியமானது. 


இளம் வயதிலேயே முதலீடு செய்யத் தொடங்குவது, ஒருவர் வாழ விரும்பும் அல்லது கனவு காணும் வாழ்க்கையை உருவாக்க உதவியாக இருக்கும். ஒருவர் எவ்வளவு சீக்கிரம் தனது முதலீட்டு பயணத்தை தொடங்குகிறாரோ, அவ்வளவு நேரம் அவர்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகலாம்


இரு வேறு நபர்களின் உதாரணத்தைப் பார்ப்போம். ஏ என்ற ஒருவர் 25 வயதில் முதலீடு செய்யத் தொடங்குகிறார், பி என்ற நபர் 35 வயதில் முதலீடு செய்யத் தொடங்குகிறார். 35 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதித் தொகையில் உள்ள வேறுபாடு என்ன என்பதைப் பார்ப்போம்.


முதலீடு


10 சதவீத வருடாந்திர கூட்டு வட்டியின் அடிப்படையில் மாதம் ஏ ரூ. 5,000 ரூபாயை முதலீடு செய்கிறார் என்றும் பி மாதம் ரூ. 7,000 முதலீடு செய்கிறார் என்றும் வைத்துக் கொள்வோம். ஏ என்ற நபருக்கு 1.71 கோடி ரூபாய் கிடைக்கும் என்றால், அவரை விட மாதம் 2000 ரூபாய் அதிகமாக முதலீடு செய்தாலும் பி என்பவருக்கு கிடைக்கும் முதிர்வுத் தொகை 72.65 லட்சம் ரூபாயாக இருக்கும்.


சிறு வயதிலேயே அதிகமாகச் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினால் இளம் முதலீட்டாளர்களுக்கு சாத்தியமான முதலீட்டு இழப்புகளிலிருந்து மீள அதிக காலம் இருக்கும். எனவே அவர்கள் அபாயமான முதலீட்டையும் பரிட்சித்துப் பார்க்கலாம். இது அவர்களின் ஒட்டுமொத்த போர்ட்ஃபோலியோ மீதான தாக்கத்தை குறைக்கிறது.


கூட்டு வருமானம் காலப்போக்கில் அதிவேகமாக வளரும், மற்றும் வழக்கமான ஆரம்ப முதலீடுகள் ஓய்வு காலத்தில் கணிசமான பலன்களை அளிக்கும். சிறு வயதிலிருந்தே முதலீடு செய்வது, இளம் வயதிலேயே நிதி ஸ்திரத்தன்மையை அடைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது, பாதுகாப்பு மற்றும் சுதந்திர உணர்வை வழங்குகிறது. சிறு வயதிலேயே செய்யும் முதலீடுகள் எதிர்பாராத நிதி நெருக்கடிகளின் போது ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படும் என்பதைவிட வேறு ஏதேனும் காரணம் தேவையா என்ன?  


மேலும் படிக்க | திமுக ஆட்சியில் குடிகாரர்களைக் கூட காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை - ராமதாஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ