காசோலை மோசடி வழக்கு: தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமாருக்கு 6 மாத சிறை தண்டனை

காசோலை மோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமாருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 27, 2024, 02:48 PM IST
  • ஆறு மாத சிறை தண்டனை.
  • காசோலை மோசடி வழக்கில் சதீஷ்குமார் கைது.
காசோலை மோசடி வழக்கு: தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமாருக்கு 6 மாத சிறை தண்டனை title=

காசோலை மோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமாருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குற்றம் கடிதல், தங்க மீன்கள், தரமணி உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமார். பிரபல தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமார் கடந்த 2016 ஆண்டின் சினிமா பைனான்சியர் ஜெகன் போத்ராவிடம் 97 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதற்காக மூன்று காசோலைகளை அவர் வழங்கியுள்ளார். குறிப்பிட்ட காலத்தில் கடனை திருப்பி செலுத்தாததாலும் அவர் அளித்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்ததாலும் சதீஷ் குமார் மற்றும் ஜே.எஸ்.கே ஃபிலிம் நிறுவனத்திற்கு எதிராக கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் போத்ரா வழக்கு தொடர்ந்தார்.

மேலும் படிக்க | கல்கி 2898 ஏடி சென்சார் குழுவின் விமர்சனம்! அப்ளாஸ் அள்ளுமா? மன்னை கவ்வுமா?

இந்த வழக்கில் கடந்த 2016 ஆம் ஆண்டில் தன்னிடம் திரைப்பட தயாரிப்பாளர் சதீஷ்குமார் 2.6 கோடி ரூபாய் கடன் வாங்கியதாக கூறியிருந்தார், அத்துடன் இதற்காக 2017 ஆம் ஆண்டில் கடன் தொகைக்காக தயாரிப்பாளர் வழங்கிய காசோலை வங்கிக் கணக்கில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பி வந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதனை அடுத்து தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமாரை காசோலை மோசடி வழக்கில் உரிய தண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கு ஜார்ஜ் டவுண் நான்காவது விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி ஏ கே என் சந்திர பிரபா முன்பு தற்போது விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி தயாரிப்பாளர் சதீஷ்குமாருக்கு தற்போது ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடன் தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி இந்த தொகையை செலுத்தவில்லை என்றால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | கமலை காணோம்..கல்கி 2898 ஏடி பட டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News