சசிகலாவிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே பிரதமர், அமித்ஷாவை முதல்வர் பழனிசாமி சந்தித்துள்ளார் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் (TN Assembly Election) நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. ஆளும் கட்சியுடனான எதிர்க்கட்சியின் மோதல் நாளுக்கு நாள் வலுக்கிறது. தேர்தலில் BJP-வுடன் கூட்டணியை அதிமுக உறுதிப்படுத்தியிருக்கும் நிலையில், அரசு முறை பயணமாக டெல்லி சென்ற முதல்வர் பிரதமருடன் (Narendra Modi) பேச்சுவார்த்தை நடத்தினார். தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள் குறித்தும், சட்டமன்றத் தேர்தல் குறித்தும் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.


முதல்வரின் இந்த பயணம், அரசு முறை பயணம் என்று சொல்லப்பட்டாலும் இதன் முக்கிய நோக்கம் தேர்தல் ரீதியாக தான் இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சிறையில் இருந்து சசிகலா (Sasikala) விடுதலையாகவிருக்கும் நிலையில், திடீரென முதல்வர் டெல்லி சென்றதற்கு என்ன காரணம்? பிரச்சாரத்திற்கு முன்பே முதல்வர் சென்றிருக்கலாமா? என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.


ALSO READ | உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் அரசியல் பேசவில்லை: பழனிசாமி!


இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பாகரை ஊராட்சியில் திமுக சார்பில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் (MK. STalin) கூறியதாவத., "அ.தி.மு.க., ஆட்சியில் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. ஆட்சியாளர்களுக்கு மக்கள் நலன் மீது எவ்வித அக்கறையும் இல்லை, மின்சார வாரியத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. அது தொடர்பாக கவர்னரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, இந்த தொகுதி MLA-வும், மூத்த அமைச்சருமான தங்கமணிக்கும் அந்த நகல் கிடைத்திருக்கும் என நம்புகிறேன். ஆனால், இதுவரை, அது தொடர்பாக எந்தவித மறுப்போ, நீதிமன்றத்தில் வழக்கோ தொடரப்படவில்லை. இதில் இருந்து உண்மை என்னவென மக்களுக்கு தெரியும். 


DMK ஆட்சியில் இருந்த போது NEET தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஜெயலலிதாவும் NEET தேர்வை ஏற்கவில்லை. ஆனால், தற்போதைய முதல்வர் பழனிசாமி நீட் தேர்வை ஏற்று கொண்டார். நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பியும் பலனில்லை.


முதல்வர் பழனிசாமி, விவசாயிகள் பிரச்னையை தீர்க்க டில்லிக்கு செல்லவில்லை. வரும் 27 ஆம் தேதி சசிகலா வெளியே வரும் போது அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும். இதனால், ஆட்சியை தக்க வைக்கவே முதல்வர் டில்லி சென்றுள்ளார். சசிகலாவிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே பிரதமர் மோடி, அமித்ஷாவை முதல்வர் பழனிசாமி சந்தித்துள்ளார். DMK, ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு தேவையான அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும்" என அவர் கூறினார். 


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR