உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் அரசியல் பேசவில்லை: பழனிசாமி!

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்கக்கோரி பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 19, 2021, 01:59 PM IST
    1. இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்கக்கோரி பிரதமரிடம் கோரிக்கை.
    2. தமிழகத்தில் முடிக்கப்பட்ட திட்டங்களை திறந்து வைக்க அழைப்பு விடுப்பு.
    3. உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் அரசியல் பேசவில்லை.
    4. சசிகலாவுக்கு இடமில்லை என முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் அரசியல் பேசவில்லை: பழனிசாமி! title=

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்கக்கோரி பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) இரண்டு நாட்கள் அரசு முறை சுற்றுப் பயணமாக டெல்லி சென்றுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் ஜெயக்குமார் சென்றுள்ளார். டெல்லியில் AIADMK MP-க்கள் முதல்வரை வரவேற்றனர். இந்நிலையில், நேற்று இரவு 7.30 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து பேசினார். 

இதையடுத்து, இன்று காலை முதலமைச்சர் பிரதமர் மோடியை (PM Narendra Modi) அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இதை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்., "புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன்.

ALSO READ | Bank Alert: பிப்ரவரி 1 முதல் Non-EMV ATM-களில் இருந்து பணம் எடுக்க முடியாது..! 

வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை (Metro rail service) தொடக்க விழாவுக்கும் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தேன். கோரிக்கை ஏற்று தமிழகம் வருவதாக தெரிவித்திருக்கிறார். இலங்கை கடற்படையால் (Sri Lankan Navy) சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்கக்கோரி பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன். தமிழக அரசின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்" என கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்., "உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் அரசியல் பேசவில்லை” என்றார். தற்போது தமிழக அரசியலில் சசிகலாவில் (Sasikala) விடுதலை குறித்து தான் அதிகம் பேசப்படுகிறது. டெல்லி சென்ற முதல்வர் சசிகலா குறித்து பேசினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை சசிகலா கட்சியிலே இல்லை. சசிகலாவுடன் இருந்தவர்கள் பலர் AIADMK-வில் இணைந்து விட்டனர். சசிகலா வருகையால் அ.தி.மு.கவில் எந்த மாற்றமும் ஏற்படாது. சசிகலாவை அ.தி.மு.க-வில் இணைக்க 100 சதவீதம் வாய்ப்பில்லை" என்றார்.

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News