Shocking propaganda: BJP பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியின் சிதம்பரத்தின் மருமகள் ஸ்ரீநிதி கார்த்தி
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், பல அதிர்ச்சியூட்டும் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், பல அதிர்ச்சியூட்டும் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் தனது இருப்பை உறுதி செய்ய பிரம்ம பிரயர்த்தனங்களை செய்துவரும் நிலையில், அதற்காக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் மனைவி டாக்டர் ஸ்ரீநிதி சிதம்பரத்தின் காட்சிகளை பயன்படுத்தியிருப்பது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
Also Read | பிஜேபி வேட்பாளர் குஷ்பு சுந்தருடன் சிறப்பு நேர்காணல்
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சமூக ஊடகப் பிரிவு, தங்கள் ட்விட்டர் பக்கத்தில் "தாமரை பூக்கட்டும், தமிழகம் வளரட்டும்" என்ற தலைப்பில் ஒரு வீடியோவை மார்ச் 28 அன்று பகிர்ந்து கொண்டது.
சுமார் 5 நிமிடங்கள் கொண்ட அந்த விளம்பர வீடியோவில் தமிழ் மொழி, கலாச்சாரம், மற்றும் பாஜக மாநிலத்தின் வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை பிரசாரம் செய்யும் விதத்தில் இருந்தது.
பரதநாட்டிய நடனக் கலைஞரின் நடனக் காட்சிகள் அந்த வீடியோவில், இடம் பெற்றிருந்தன. அந்த நடனமணி பிரபலமான பரதநாட்டிய நடனக் கலைஞரும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்தின் மனைவியான டாக்டர் ஸ்ரீநிதி சிதம்பரம் என்பது தான் சர்ச்சையை கிளப்பிய விஷயம்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு “செம்மொழியான தமிழ்மொழியே” பாடலுக்காக எடுக்கப்பட்ட வீடியோவில் இடம் பெற்றிருந்த ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் பரதநாட்டிய ஆடிய காட்சிகளில் இருந்து இந்த எடுக்கப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாடல் வரிகளுக்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல் இது.
Also Read | ஐபிஎல் முன்னேற்பாடுகளுக்காக மும்பைக்கு செல்லும் CSK
இந்த விஷயத்தை டிவிட்டரில் பார்த்த ஒரு பத்திரிகையாளர் பிரசார வீடியோவை ஸ்கிரீன் ஷாட்டை எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தபோது இந்த விளம்பரம் வெளிச்சத்திற்கு வந்தது.
விளம்பரத்தில் தனது புகைப்படம் பயன்படுத்தப்பட்டது குறித்து பதிலளித்துள்ள ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் “ பாஜகவின் தேர்தல் விளம்பரத்துக்காக எனது புகைப்படத்தை பயன்படுத்தியது அபத்தம். தமிழகத்தில் தாமரை என்றும் மலராது” என தெரிவித்திருக்கிறார்.
வீடியோ இப்போது நீக்கப்பட்டுவிட்டது என்றாலும், நெட்டிசன்கள் எடுத்த ஸ்கிரீன் ஷாட்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன.
Also Read | அதிமுக-பாஜக கூட்டணியில் சசிகலா? சூசகமாக சொல்கிறார் Thuglak குருமூர்த்தி
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR