மெதுவாக ஓடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா? வாங்க ஓடலாம்.. மாஸான ஹெல்த் டிப்ஸ்!!
Benefits of Slow Running: பொதுவாக வேகமான நடை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாக கூறப்படுகின்றது. ஆனால், மெதுவாக ஓடுவதும் பல வித ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
Benefits of Slow Running: அவசரப்படாமல், பதட்டமில்லாமல் செய்யப்படும் பணிகள் கண்டிப்பாக வெற்றியடையும். இது ஆரோக்கியத்தின் கண்ணோட்டத்திலும் உண்மைதான். நாம் உடல் எடையை குறைக்கவும், உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகப்படுத்தவும், ஓட்டப்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகியவற்றை மெற்கொள்கிறோம். பொதுவாக வேகமான நடை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாக கூறப்படுகின்றது. ஆனால், மெதுவாக ஓடுவதும் பல வித ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
மெதுவாக ஓடுவதால் இதயம் பலப்படுவதாகவும், இது சளி மற்றும் இருமலில் இருந்து உடலைப் பாதுகாப்பதாகவும் கூறப்படுகின்றது.
மெதுவாக ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- வேகமாக ஓடுவதை விட மெதுவாக ஓடுவது இதயத்திற்கு அதிக நன்மை பயக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
- மெதுவாக ஓடுவது இதயத்தின் செயல்திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தையும் குறைக்கிறது.
- இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
- மெதுவாக ஓடுவது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
- இதனால் இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவு அதிகமாகிறது.
- இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
ஆங்லியா ரஸ்கின் பல்கலைக்கழகத்தில் இருதய சுவாச உடற்பயிற்சி உடலியல் பேராசிரியர் டான் கார்டன் இது குறித்து தனது ஆய்வில் கண்டறிந்த விஷயங்களை பகிர்ந்தூள்ளார். 'மெதுவாக ஓடுவது சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் பிரபலமாகி வருகிறது. உயர்-தீவிர இடைவெளி பயிற்சி (HIIT) செய்ய முடியாதவர்களுக்கு இது சிறந்ததாக கருதப்படுகின்றது. HIIT பயிற்சிகள் கடினமானவை. இவை மக்களை விரைவாக சோர்வடையச் செய்கின்றன. ஆனால், மெதுவாக ஓடுவதால் சோர்வு தெரியாது. இதனால் பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன' என அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | சுகர் இருக்கா... அப்போ சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன் இதை மறக்காம செய்யுங்க!
5000 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது
டென்மார்க்கில் 2015 இல் 12 ஆண்டுகளில் 5,000 பேர் உட்படுத்தப்பட்ட ஒரு ஆய்வில், லேசான மற்றும் மிதமான ஓட்டப்பந்தய வீரர்கள் மிகக் குறைந்த இறப்பு விகிதங்களைக் கொண்டுள்ளதாகவும், வேகமாக ஓடும் ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் ஓட்டப்பயிற்சியே செய்யாதவர்களின் இறப்பு விகிதங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதாகவும் கண்டறியப்பட்டுல்ளது. மெதுவாக ஓடுவது இதயத் துடிப்பைக் குறைத்து இதயத் தசைகளை வலுவாக்குவதே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது.
மெதுவாக ஓடுவதன் பிற நன்மைகள்
- மெதுவாக ஓடுவதால் இன்னும் பல நன்மைகளும் ஏற்படுகின்றன.
- இதனால் உடல் கொழுப்பை எரிபொருளாகப் பயன்படுத்துகிறது.
- அதேசமயம் வேகமாக ஓடுவது கார்போஹைட்ரேட்டுகளை எரிக்கிறது.
- கொழுப்பு எரிந்து வளர்சிதை மாற்றம் மேம்படுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
- ஏனெனில் இது இரத்த குளுக்கோஸ் அளவை மேம்படுத்துகிறது.
- மேலும், இது டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
- குளிர்காலத்தில், சளி மற்றும் இருமல் ஆபத்து அதிகரிக்கும் போது, மெதுவாக ஓடுவது இவற்றை குணப்படுத்துகிறது.
- இது நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது.
- மெதுவாக ஓடுவது உடல் சளி மற்றும் இருமல் போன்ற நோய்களை எதிர்த்துப் போராடும் திறனை அதிகரிக்கின்றது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் சுலபமான வீட்டு வைத்தியங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ