தொப்பை கொழுப்பை குறைக்க உதவும் வேப்பம்பூ: இப்படி சாப்பிட்டால் உடனடி நன்மை

Weight Loss Tips: குறைந்த அளவு முயற்சியில் தொப்பை கொழுப்பு (Belly Fat) மற்றும் இடுப்பு கொழுப்பைக் குறைக்க விரும்பினால், ஆயுர்வேத தீர்வு பயனுள்ளதாக இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 18, 2024, 09:50 AM IST
  • உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள்.
  • சிலர் ஜிம் செல்கிறார்கள்.
  • சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள்.
தொப்பை கொழுப்பை குறைக்க உதவும் வேப்பம்பூ: இப்படி சாப்பிட்டால் உடனடி நன்மை

Weight Loss Tips: உடல் பருமன் இந்த காலத்தில் பலரை பாடாய் படுத்தும் ஒரு பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. உடல் எடை வேகமாக அதிகரித்து விடுகிறது. ஆனால் அதை குறைப்பது மிக கடினமான ஒரு பணியாக உள்ளது. குறிப்பாக தொப்பை கொழுப்பை கரைப்பது ஒரு பிரம்ம பிரயத்னமாகவே பார்க்கப்படுகின்றது. உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள். சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள்.

Add Zee News as a Preferred Source

சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். குறைந்த அளவு முயற்சியில் தொப்பை கொழுப்பு (Belly Fat) மற்றும் இடுப்பு கொழுப்பைக் குறைக்க விரும்பினால், ஆயுர்வேத தீர்வு பயனுள்ளதாக இருக்கும். அத்தகைய பயனுள்ள தீர்வுகளில் ஒன்று வேப்பம்பூ. இதில் பல வித மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இது பல வித நோய்களுக்கு தீர்வாக அமைகிறது. 

எடை இழப்பிலும் வேப்பம்பூ (Neem Flower) உதவும் என கூறப்படுகின்றது. இது உடலில் உள்ள கூடுதல் கொழுப்பை அகற்றி நச்சுகளையும் அகற்றுகிறது. வேப்பம்பூவில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளதாகவும், அதனால் நமக்கு அளவற்ற பயன்கள் கிடைக்கும் என்றும் ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகிறார்கள். வேம்பின் பூ மட்டுமல்லாமல், வேப்பிலை, வேப்பங்குச்சி, வேம்பு பொடி என வேப்ப மரத்தின் அனைத்து பாகங்களும் ஏதாவது ஒரு வகையில் உதவுகின்றன. இவற்றில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. 

மேலும் படிக்க | பழத்தை விடுங்க... கொய்யா இலையை சாப்பிடுவதால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள் - இதோ!

வேப்பம் பூ மூலம் உடல் எடையை குறைக்கலாம்

ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ் எடை இழப்பில் வேப்பம்பூவின் பங்கு பற்றி கூறுகிறார். வேப்பம்பூ வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உணவை எளிதாக ஜீரணிக்க வைக்கிறது. இது உடலில் உள்ள கலோரிகளை வேகமாக எரிக்கிறது. இந்த வழியில், வேம்பு சாப்பிடுவது எடை இழப்பு மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். வேப்பம்பூ குறிப்பாக சருமம் முதல் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை நீக்கும் வல்லமை கொண்டது. வேப்பம்பூ உங்கள் பசியை கட்டுப்படுத்தும் ஒரு தாவரமாகும். இதனால் அதிகமான, தேவையற்ற உணவை அடிக்கடி சாப்பிடுவது தவிர்க்கப்படுகின்றது. இது செரிமானத்தை மெதுவாக்குகிறது. இதன் மூலம் வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருக்கும்.

வேப்பம்பூ கொண்டு உடல் எடையை வேகமாக குறைப்பதற்கான வழிகள்

- காலையில் எழுந்தவுடன் வேப்பம்பூவைப் பறித்து வெறும் வயிற்றில் அப்படியே சாப்பிடலாம். இது தவிர, இதன் மென்மையான இலைகளையும் கடித்து சாப்பிடலாம். இவை உடல் எடையை குறைக்க உதவும்.

- உடல் எடையை குறைக்க வேப்பம்பூ மற்றும் தேன் கலந்து உட்கொள்வதும் நன்மை பயக்கும். முதலில், வேப்பம்பூவை நன்கு நசுக்கிக்கொள்ளவும். அதன் பின்னர், அதில் 1 ஸ்பூன் தேன் கலக்கவும். இதனுடன் தேவைப்பட்டால், அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறும் கலக்கலாம். பின்னர் இந்த கலவையை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சில நடகளில் உடல் எடை குறையும். 

- வேப்பம் பூ டீயும் உடல் எடையை குறைக்க உதவும். வேப்பம் பூ தேநீர் (Neem Flower Tea) தயாரிக்க, வேப்பம்பூவை 1 கப் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு அதில் சிறிது இஞ்சி சாறு கலந்து குடிக்கவும். ஒரு நாளைக்கு 1 கப் வேப்பம்பூ தேநீர் மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க |  இந்த நபர்களுக்கு உயர் கொலஸ்ட்ரால் ஆபத்து அதிகம்.... இதை எல்லாம் செய்யாதீங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News