சைவ உணவு பழக்கம் உள்ளவர்களின் ஊட்டச்சத்து தேவைகள் பல்வேறு உணவுப்பொருட்களில் உள்ளது என்றாலும், அதிக புரதம் பெற சோயாவை பூரணமாக நம்பலாம். 
சோயா என்பது இறைச்சியுடன் ஒப்பிடக்கூடிய உள்ளடக்கத்தைக் கொண்ட புரத சக்தியைக் கொண்டது.. உடலின் அன்றாட செயல்பாடுகளுக்குத் தேவையான ஒன்பது தேவையான அமினோ அமிலங்களைக் கொண்ட ஒரு சில தாவர உணவுகளில் சோயாபீன்ஸ் ஒன்றாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலர்ந்த சோயாபீன்ஸில் 36–56% புரத அளவு உள்ளது, வைட்டமின் பி, நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் என பல சத்துக்களை கொண்டுள்ளது. சோயாவில் புரதச்சத்து அதிகம் இருப்பதுடன், குறைந்த நிறைவுற்ற கொழுப்பு உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது.  


சோயாவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் புரதங்கள் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. மக்கள் மத்தியில் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கும், ஆரோக்கியமான உணவை ஊக்குவிப்பதற்கும் சோயா பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இந்த  தொற்றுநோய் காலகட்டத்தில் இந்திய அரசு மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆகிய இரண்டும் இதைக் கூறியுள்ளன. 


Also Read | Weight Loss: முட்டைகோஸ் ஜூஸ் குடித்தால் இத்தனை நன்மைகளா!!!


சோயாவில் ஏராளமான பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு இருப்பதால் இதயத்திற்கு நல்லது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், கொலஸ்ட்ரால் அளவைப் பராமரிப்பதற்கும் சோயா உதவுகிறது. அதோடு, இதில் இருக்கும் ஒமேகா -3 கொழுப்புகள் உடலுக்கு நல்லது.  வயதாகும்போது ஏற்படும் எலும்பு சம்பந்தமான பிரச்சினைகளை தவிர்க்க, உயர் ஊட்டச்சத்து உள்ளடக்கங்களைக் கொண்ட சோயாபீன் பயபடுத்தலாம். இது எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது. 


ஆரோக்கியமான கொழுப்புகளைக் கொண்ட சோயாவில் இருக்கும் உயர் புரத உள்ளடக்கம், வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது. இது ஆரோக்கியமற்ற பசி கட்டுப்படுத்தி, எடை குறைப்பை ஊக்குவிக்கிறது.சோயாவில் இரும்பு மற்றும் தாமிரம் அதிகம் இருப்பதால் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை (red blood cells)மேம்படும்.   


 பாரம்பரிய சோயா உணவுகளான மிசோ, டெம்பே (tempeh), டோஃபு (tofu) மற்றும் எடமாம் ஆகியவை நவீன பதப்படுத்தப்பட்ட இறைச்சி மாற்றுகளை விட அதிக சத்தானவை. ஆனால் விலை மிகவும் மலிவானவை என்பதால், சோயாபீன்ஸ் மற்றும் சோயாவை அடிப்படையாகக் கொண்ட உணவுப் பொருட்கள் அனைவருக்கும் ஏற்றவை.


Also Read | Vitamin D எடுத்துக் கொண்டால் கொரோனா வைரஸ் அபாயம் குறையுமா? உண்மை இதுதான்…


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR