அதிக கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டு குறிப்புகள்: மஞ்சள் பொதுவாக வீடுகளில் உணவை சுவையாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் சருமத்தின் அழகை அதிகரிப்பதில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை பல விதங்களில் பயன்படுகிறது. மஞ்சள் பழங்காலத்திலிருந்தே நோய்த்தொற்றுகள், காயங்கள் மற்றும் வயிற்றுப் பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய் போன்ற குணப்படுத்த முடியாத நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு மசாலாவாக மஞ்சள் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மஞ்சள் சந்தையில் எளிதில் கிடைக்கின்றது. இதை பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம். இரத்தத்தில் உள்ள கொழுப்பைப் பராமரித்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க மஞ்சள் உதவுகிறது. கொலஸ்ட்ராலைப் பராமரிக்க மஞ்சள் எவ்வாறு உதவியாக இருக்கும் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.


இதய நோய்க்கு நன்மை பயக்கும்


உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், மாரடைப்பு முதல் பக்கவாதம் வரை பல ஆபத்துகள் வரக்கூடும். மஞ்சள் கொண்டு கொலஸ்ட்ரால் அளவைப் பராமரிக்க அவ்வப்போது பல ஆய்வுகள், ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விலங்குகள் மற்றும் மனிதர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் படி, மஞ்சள் உட்கொள்வது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை மூன்று வழிகளில் பாதிக்கிறது.


மேலும் படிக்க | சர்க்கரை நோய் முதல் உயர் ரத்த அழுத்தம் வரை; பூண்டு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? 


எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்தல்


குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் அதாவது LDL கொலஸ்ட்ரால் கெட்ட கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது. இது தீவிர இதய பிரச்சனைகளை ஏற்படுத்தும். மஞ்சளை உட்கொள்வது எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைத்து, உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.


ஆக்சிடேஷனிலிருந்து LDL கொழுப்பின் பாதுகாப்பு 


எல்டிஎல் கொழுப்பு ஆக்ஸிஜனுடன் வினைபுரியும் போது பெருந்தமனி தடிப்பு ஏற்படுகிறது. இது இரத்த ஓட்டத்தில் அடைப்புகளை ஏற்படுத்தும். மஞ்சளை உட்கொள்வது இந்த ஆக்ஸிஜனேற்றத்தை நிறுத்துகிறது. இதன் காரணமாக கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் இரத்த நாளங்களும் ஆரோக்கியமாக இருக்கும்.


ட்ரைகிளிசரைடு அளவுகளை குறைத்தல்


அதிக ட்ரைகிளிசரைடு அளவுகள் மற்றும் உயர் இரத்த கொலஸ்ட்ரால் இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும். ட்ரைகிளிசரைடு தமனிகளில் உருவாகிறது. இது எல்டிஎல் கொலஸ்ட்ரால் சுழற்சி சிக்கல்களை ஏற்படுத்துவதை எளிதாக்குகிறது. மஞ்சளைப் பயன்படுத்துவதன் மூலம் ட்ரைகிளிசரைடு அளவைக் கட்டுப்படுத்தலாம்.


மஞ்சளை இவ்வாறு பயன்படுத்தவும்


மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க காய்கறிகளில் தினமும் மஞ்சள் பயன்படுத்த வேண்டும். மேலும், இரவில் படுக்கும் முன் ஒரு கிளாஸ் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சளைக் கலந்து குடிக்க வேண்டும். இது தவிர, தினமும் ஒரு கப் க்ரீன் டீ குடிப்பதும் அதிக கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும்.


மேலும் படிக்க | அடிக்கடி இந்த இடத்துல வலி இருக்கா? கொலஸ்ட்ராலாக இருக்கலாம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ