மஞ்சளின் சுவை இயற்கையானது, இதில் குர்குமின் என்ற பயோஆக்டிவ் தனிமமும் அதிகமாக உள்ளது. இது தவிர, இதில் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. வயிற்றுப் பிரச்சினைகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மற்றும் காயங்களை குணப்படுத்துவது என மஞ்சள் ஒரு சர்வரோக நிவாரணியாக செயல்படுகிறது. தினசரி உணவில் மஞ்சள் பயன்பாடு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆனால், பக்க விளைவுகள் இல்லாத பொருள் எதுவுமே கிடையாது என்ற நிதர்சனமான உண்மை மஞ்சளுக்கும் பொருந்தும்.
அற்புதமான மூலிகையான மஞ்சள், சரியான முறையில் அல்லது சரியான அளவில் உட்கொள்ளாதபோது உடல்நல கோளாறுகளை ஏற்படுத்தலாம். மஞ்சளை அதிகமாக உட்கொள்ளும் போது ஏற்படும் உடல்நல பாதிப்புகள் அச்சுறுத்துகின்றன.
மேலும் படிக்க | வெள்ளைப்படுதல் பிரச்சனை: இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் கை கொடுக்கும்
உடலில் சுரக்கும் அமிலங்களின் அளவில் மாற்றங்கள் ஏற்படலாம்
வயிற்று உபாதையை ஏற்படுத்தலாம்
செரிமான பிரச்சனைகள் உண்டாகும்
சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்கலாம்
இரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம்
அதிக அளவில் மஞ்சள் உட்கொள்ளும் போது, அது கல்லீரல் பாதிப்பையும் ஏற்படுத்தும்.
இரத்தம் உறைவதற்கான மருந்து உண்பவர்களுக்கு எதிர்மறையாக வேலை செய்யலாம்
இரத்தப்போக்கு அதிகரிக்கும் ஆபத்து
உடல் வீக்கம்
வயிற்றுப்போக்கு
மேலும் படிக்க | கருவளையங்கள் அழகை கெடுக்கிறதா... மாயமாய் நீக்க ‘சில’ எளிய வீட்டு வைத்தியங்கள்!
மஞ்சள் என்னும் அருமருந்தை அதிகமாக உட்கொள்பவர்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. சரியான அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் மஞ்சள், உணவின் சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், உணவின் ஊட்டச்சத்தையும் உயர்த்துகிறது. சரி, ஒருவர் தினமும் எவ்வளவு மஞ்சளை உட்கொள்ள வேண்டும்? இதை அறிந்துக் கொண்டால், மஞ்சள் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
நாள் ஒன்றுக்கு எவ்வளவு மஞ்சள் உட்கொள்ளலாம்?
நாளொன்றுக்கு 500 முதல் 2,000 மில்லிகிராம் மஞ்சளை உட்கொள்ளலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தினசரி இந்த அளவு மஞ்சளை விட அதிக அளவில் எடுத்துக் கொள்வது உடலுக்கு தீமையை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மஞ்சளை உணவில் மட்டுமல்ல, பாலில் சேர்த்து, மஞ்சள் பாலாக குடிப்பதும் ஆரோக்கியத்திற்கு நல்லது.
மஞ்சள் பால் குடிப்பது மிகவும் நல்லது என்று சொல்வதற்குக் காரணம், மஞ்சள் கலந்த பாலில் புரதம், கால்சியம், வைட்டமின் பி போன்ற வைட்டமின்கள் போன்ற பல அத்தியாவசிய ஊட்ட சத்துக்கள் காணப்படுகின்றன. ஆனால் அனைவருக்கும் மஞ்சள் பால் ஏற்றதாக இருக்கும் என கூற இயலாது. ஏனென்றால், மஞ்சளை அதிகமாக சாப்பிடும்போது ஏற்படும் அதே தீமைகள், மஞ்சளை எந்த வடிவத்திலும் உணவாக எடுத்துக் கொள்ளும்போது ஏற்படும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Women Longevity: மரணத்தைத் தள்ளிப்போட வாய்ப்பு! இது பெண்களுக்கான நீண்ட ஆயுள் டிப்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ