COVID-19 UPDATE: உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம்
உலக அளவில் நாள்தோறும் பாதிப்பு ஏற்படுத்தும் கொரோனாவின் பாதிப்பு குறித்த புதுப்பிப்பு
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை1,04,87,022. இதுவரை கொரோனாவால் உலக அளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,11,546 ஆக உயர்ந்துவிட்டது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 53,36,322
இந்தியா: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று இந்தியாவில் ஆறு லட்சத்தையும் தாண்டிவிட்டது.
ஆஸ்திரேலியா: 300,000 மக்கள் தொகை கொண்ட மெல்போர்ன் புறநகர்ப்பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று தீவிரமாக பரவுவதால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த உத்தரவிடப்பட்டது.
COVID-19 நோய்த்தொற்றைக் குணப்படுத்த உதவும் ரெம்டிசிவிர் மருந்தை பெருமளவில் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்தை (1,50,000) தாண்டியது.
கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிமாக இருக்கும் முதல் பத்து நாடுகளின் பட்டியல்:
1. அமெரிக்கா - 26,86,258
2. பிரேசில் - 14,48,753
3. ரஷ்யா - 6,53,479
4. இந்தியா - 6,04,641
5. இங்கிலாந்து - 3,14,992
6. பெரு - 2,88,477
7. சிலி - 2,82,043
8. ஸ்பெயின் - 2,49,659
9.இத்தாலி - 2,40,760
10. மெக்சிகோ - 2,31,770