கொரோனா நோய்த்தொற்று பலரின் வாழ்க்கைப்போக்கையும் மாற்றிவிட்டது. மழைக்குக் கூட மருத்துவமனையை ஒதுங்காதவர்கள், இன்று மருத்துவமனையில் இடம் கிடைக்காதா என்று அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
டாக்டர் ரெட்டீஸ் (Dr.Reddy's) ஆய்வகங்களுடன் இணைந்து டிஆர்டிஓ (DRDO) உருவாக்கிய கொரோனாவிற்கான புதிய மருந்தான 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-deoxy-D-glucose (2-DG) ) அவசர கால பயன்பாட்டிற்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, சிகிச்சை அளிக்க ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. அதனால், அந்த மருத்திற்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது.
தமிழகத்துக்கு கூடுதலாக 20,000 ரெம்டெசிவிர் மருந்துகள் ஒதுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் வலியுறுத்தியுள்ளார்.
கோவிட் தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு எதிராக இந்தியா போராடி வருகிறது. இந்தியாவின் இந்த போராட்டத்திற்கு 42 நாடுகள் ஆதரவு கொடுக்கின்றன. 21 நாடுகளிடம் இருந்து உதவிப் பொருட்கள் ஏற்கனவே வந்துவிட்டன.
கொரோனா இரண்டாவது அலையில் இந்தியா சிக்கிக் கொண்டுள்ள நிலையில், ஆறுதல் அளிக்கும் விஷயமாக, நேற்று, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு கொரோனா மருந்து ஒன்றின் பயன்பட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும், கொரோனா தொற்று இரண்டாவது அலை தொடங்கி, மக்கள் அதன் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். அன்றாட தொற்று பாதிப்பு 4 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகிறது.
தேசிய தலைநகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கலில் ஏற்படும் குளறுபடிகள் தொடர்பான விஷயத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ள டெல்லி உயர்நீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கு, ஒரு பெரிய ஆக்ஸிஜன் சிலிண்டர் ரீ-ஃபில்லிங் பிரிவை கையகப்படுத்த உத்தரவிட்டது.
தமிழகத்தில் தொற்று நாளுக்கு நாள் மேல் நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. மருத்துவ வசதிகளுக்காக தட்டுப்பாடும் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், சுகாதாரத் துறை செயலாளர் செய்தியாளர்களை சந்தித்தார்.
கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் ஊசி மருந்துகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கோடிக்கணக்கான COVID-19 நோயாளிகளுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் விதமாக, மத்திய அரசு சனிக்கிழமை (ஏப்ரல் 17, 2021) COVID-19 எதிர்ப்பு மருந்தான ரெம்டெசிவிரின் விலையை ஒரு ஊசிக்கு ரூ .2,000 வரை குறைத்தது.
தற்போது, இந்தியாவில் ஏழு நிறுவனங்கள் சேர்ந்து 38.80 லட்சம் ரெம்டெசிவிர் டோஸ்களை உற்பத்தி செய்கின்றன. மேலும் ஏழு தளங்களில் 6 நிறுவனங்கள் மூலம் 10 லட்சம் டோஸ் கூடுதலாக உற்பத்தி செய்ய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.