புதுடெல்லி: மகிழ்ச்சியான செய்தி என்றாலே ஸ்வீட் எடு; கொண்டாடு என்பது நமது வாழ்க்கையின் தாரக மந்திரமாகிவிட்டது. அதாவது இனிப்பு சுவை என்பது மகிழ்ச்சியுடனும் கொண்டாட்டத்துடனும் இணைத்து பார்க்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உண்மையில் இனிப்புச்சுவை என்பது உடலுக்கு தேவையானதுதான் என்றாலும், அதிகப்படியான எதுவுமே ஆபத்தானது தானே. மகிழ்ச்சியை விரும்பும் மனம் என்பதுபோல, மகிழ்ச்சிக்கு நிகராக கூறப்படும் இனிப்புகளை விரும்புவதும் மனிதர்களுக்கு இயல்பானதாகிவிட்டது.


ஆனால் அதிக இனிப்பு உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். உங்கள் உடல் எதை விரும்புகிறது என்பதை அறிவது மிகவும் முக்கியமானது, மன அழுத்தத்திற்கு ஆளான பலர் அதிகமாக சாப்பிடுகிறார்கள்.



ஏனென்றால் உணவே, ஆறுதல் தருவதாக கருதுகிறார்கள், குறிப்பாக இனிப்பு நுகர்வு அதிகமாவதற்கு காரணமும் மனச்சோர்வாக இருக்கலாம். அதனால்தான் மக்கள் அழுத்தம் அல்லது மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் போது அல்லது மனநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் போது, ​​குக்கீகள், பிஸ்கட்கள், சாக்லேட்டுகள் போன்ற நொறுக்குத்தீனிகளை அதிகம் உட்கொள்கின்றனர்.


விருது பெற்ற ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் லோவ்னீத் பாத்ரா இனிப்பு மீதான மோகம் அல்லது பசி பற்றி விளக்குகிறார். இனிப்புக்கான பசி பொதுவானது, இதை  எளிய விஷயங்களால் தெளிவுபடுத்தலாம் என்று சொல்கிறார்.


மேலும் படிக்க | இனிப்பு சுவையின் அடிப்படை அம்சங்கள் என்ன தெரியுமா?


குறைந்த புரத உட்கொள்ளல்: கார்போஹைட்ரேட்டுகள் விரைவாக இரத்த ஓட்டத்தில் நுழைகின்றன, இது விரைவாக இரத்த சர்க்கரையை அதிகரிக்கிறது, இது இன்சுலின் அளவை அதிகரிக்கிறது.


உங்கள் உணவில் நார்ச்சத்து, புரதம் மற்றும் கொழுப்புகள் இல்லாமல், எளிய கார்போஹைட்ரேட்டுகள் மட்டுமே உங்களை முழுமையாகவோ திருப்தியடையவோ விடாது, விரைவில் பசியெடுக்கும்.    



மோசமான தூக்கம்: நமது உடலின் உள் கடிகாரம், கிரெலின் மற்றும் லெப்டின் (hormones ghrelin and leptin) என்ற ஹார்மோன்களை நிர்வகிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது, இது உணவு உட்கொள்ளலை ஊக்குவிக்கவும், அடக்கவும் உதவும் ஹார்மோன்கள் ஆகும்.


தூக்கம் குறைவதும், அதிக தூக்கமும் மூளையின் செயல்பாட்டைக் குறைக்கலாம், இதன் விளைவாக தூக்கத்தில் சிக்கல் ஏற்பட்ட அடுத்த நாள் இனிப்பு உட்பட நொறுக்குத் தீனிகளின் மீதான ஆசையும் பசியும் அதிகரிக்கின்றன.  


மேலும் படிக்க | இந்த எளிய பழக்கங்களின் மூலம் உடல் எடையை குறைக்கலாம்!


மன அழுத்தம்: மன அழுத்தம், ஒருவருடைய கார்டிசோல் அளவைப் பாதிக்கிறது, இது ஹார்மோனை உயர்த்தும் போது உங்கள் குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை மாற்றும்.


இனிப்பு சாப்பிடும்போது செரோடோனின் (serotonin) சுரப்பு அதிகரிக்கிறது, இது மனநிலை மற்றும் பசியை ஒழுங்குபடுத்தும் ஒரு நரம்பியக்கடத்தி ஆகும்.


கனிம குறைபாடுகள்: கால்சியம், துத்தநாகம், குரோமியம் மற்றும் மெக்னீசியம் ஏற்றத்தாழ்வுகள் இனிப்பு சாப்பிடும் விருப்பத்தை அதிகரிக்கும். 


 



இனிப்பு மீதான விருப்பத்தை கட்டுப்படுத்துவது எப்படி?
உங்கள் உணவில் அதிக புரதங்கள் அல்லது கொழுப்புகளைச் சேர்க்கவும். வெறும் கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை தவிர்க்கவும்.


போதுமான தூக்கம் அவசியமானது. அதிலும், உறக்கம் சிறந்த தரம் வாய்ந்ததாக, அதாவது ஆழ்ந்த உறக்கமாக இருக்க வேண்டும்.


மேலும் படிக்க | தமனிகளை அடைக்கும் இந்த 5 உணவுகளுக்கு NO சொல்வது சிறந்தது


பல்வேறு மூலங்களிலிருந்து செரோடோனினை சேர்த்துக் கொள்ளுங்கள். செரோடோனின் அளவை அதிகரிக்க பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற ட்ரை ப்ரூட்கள், சூடான பால், செர்ரிகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.உடற்பயிற்சியை அதிகரிக்கவும்.


பேரிட்சை, வால்நட்ஸ், பூசணி விதைகள், வாழைப்பழம் போன்ற மெக்னீசியம் நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். குரோமியம் சப்ளிமெண்ட்டை முயற்சிக்கவும். இந்த தாதுக்கள் நமது நவீன உணவில் பெரும்பாலும் இருப்பதில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | உங்கள் சிறுநீரகம் சுத்தமாக உள்ளதா: தெரிந்துகொண்டு சுத்தப்படுத்துவது எப்படி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR