என்ன? இந்தப் பழம் குப்புன்னு வெயிட் ஏத்திடுமா? ஆனா ஆரோக்கியத்துக்கு நல்லதாச்சே?
Dates vs Weight Loss And Gain: பேரிச்சம்பழத்தை ஒரு நாளில் எவ்வளவு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்பதைத் தெரிந்துக் கொண்டால், உடல் எடையையும் பராமரிக்கலாம், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்...
உடல் எடையை குறைப்பதற்காக இன்று பலரும் பிரம்ம பிரயத்தனம் செய்துக் கொண்டிருக்கும் காலம் இது. ஆனால், நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில உணவுகளும் பழங்களும், உடல் எடையை சட்டென்று அதிகரிக்கும் தன்மையைக் கொண்டவை. அதில் ஒன்று தான் பேரிச்சம்பழம். பேரிச்சம்பழத்தை ஒரு நாளில் எவ்வளவு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்பதைத் தெரிந்துக் கொண்டால், உடல் எடையையும் பராமரிக்கலாம், ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். ஒரு நாளில் எவ்வளவு பேரிட்சை சாப்பிடுவது நன்மை பயக்கும் என்பதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்.
பேரீச்சம்பழம் சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பதுடன், அதிக ஊட்டச் சத்துக்கள் நிறைந்தது. பேரீச்சம்பழத்தை உட்கொள்பவர்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது. புரதம், கார்போஹைட்ரேட், ஆரோக்கியமான கொழுப்பு, ஃபோலேட், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் பேரிச்சம்பழத்தில் கணிசமான அளவில் உள்ளன. தாமிரம், துத்தநாகம், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் குறைபாடு உள்ளவர்கள் பேரீச்சம்பழம் சாப்பிடுவதும் மிகவும் நன்மை பயக்கும்.
மேலும் படிக்க | Diabetes: சர்க்கரை நோயை குணப்படுத்த முடியும்
ஆனால் உடல் எடையை பேரீச்சம்பழம் அதிகரிக்கும் என்பது பலருக்குத் தெரியாது. இந்த நேரத்தில் பேரிச்சம்பழம் சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும். உடற்பயிற்சி செய்வதற்கு 30-60 நிமிடங்களுக்கு முன் பேரீச்சம்பழம் சாப்பிடுவதும், இரவில் சாப்பிடுவதும் உடல் எடையை அதிகரிக்கும். ஆனால், காலையில் பேரீச்சம்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காது. ஏனெனில் அதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது நீண்ட நேரம் பசியை அடக்கிவிடும்.
ஒரு நாளைக்கு எவ்வளவு பேரிச்சம்பழம் சாப்பிடலாம்?
ஒரு பேரிச்சம்பழத்தில் சுமார் 20 கலோரிகள் உள்ளன, எனவே, உங்களுக்கு எத்தனை கலோரி ஒரு நாளைக்குத் தேவை என்பதை பொருத்து, நீங்கள் இந்த அற்புத சக்தி கொண்ட பேரிட்சையை உண்ணலாம். வயிற்றுப் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு பேரிச்சம்பழம் உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும்.
மேலும் படிக்க | Brain Foods: இந்த ‘5’ உணவுகள் குழந்தையின் மூளை கணிணி போல் இயங்க உதவும்
பேரிச்சம்பழத்தை சாப்பிட்டால் உங்கள் செரிமான அமைப்பு மேம்படும். எனவே, உடல் எடை அதிகரித்துவிடும் என்பதால், இதை தவிர்த்துவிடாமல், தினசி ஒன்றோ அல்லது இரண்டோ பேரிச்சம்பழம் சாப்பிடுங்கள்.
பாலுடன் கூட்டு சேரும் பேரிச்சம்பழம் என்ன செய்யும்?
இரவில் பேரீச்சம்பழம் சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும். பால் மற்றும் பேரிச்சம்பழம் சேர்த்து சாப்பிடுவது உடல் எடையை வேகமாக அதிகரித்துவிடும். எனவே, உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் மட்டுமே பேரீச்சம்பழத்தை பாலில் போட்டு கொதிக்க வைத்து பின் சாப்பிட வேண்டும். மற்றவர்கள், காலையில் ஒன்று அல்லது இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டால் போதும்.
மேலும் படிக்க | நீரிழிவு நோய் வந்துவிட்டதா? எப்படி தெரிந்து கொள்வது? அறிகுறிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ