World Diabetes Day: நீரிழிவு நோய்க்கு எதிரான உணவுகளை தவிர்ப்பதும், மருந்துகளை எடுத்துக் கொள்வதும் ஒருபுறம் இருந்தாலும் நீரிழிவு நோய் வந்துவிட்டதா என்பதை தெரிந்துக் கொள்வதும் அவசியம்.... அதற்கான அறிகுறிகள் இவை...
சர்க்கரை நோய் இருப்பது தெரிந்த உடனே அதை குணப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும், வாழ்க்கை முறை மாற்றங்களையும் மேற்கொண்டால் அதைக் கட்டுப்படுத்தலாம். நீரிழிவு நோய் வந்துவிட்டதா என்பதை தெரிந்துக் கொள்வதற்கான அறிகுறிகள் இவை...
மேலும் படிக்க | நீரிழிவு நோயை விரட்ட ‘இந்த’ பழத்தின் விதைகளே போதும்! பயன்படுத்தும் முறை!
சமீபகாலமாக சர்க்கரை நோய் தொடர்பான பல ஆய்வுகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒரு கணக்கெடுப்பின்படி, உலகின் நீரிழிவு தலைநகராக இந்தியா கருதப்படுகிறது. உண்மையில், பெரும்பாலான நேரங்களில், நீரிழிவு நோயாளிகளுக்கு அவர்களின் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது தெரியாது. ஆனால் அதை மிகவும் தாமதமாக தெரிந்துக் கொண்டால் கட்டுப்படுத்துவது சிரமமாகிறது. எனவே, உலக நீரிழிவு தினத்தில், நீரிழிவு நோயின் சில ஆரம்ப அறிகுறிகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
சர்க்கரை நோய் அடிப்படையில் இரண்டு வகைப்படும். வகை 1 நீரிழிவு ஒரு தன்னுடல் தாக்க நோய். இதன் விளைவாக, இந்த வகை நீரிழிவு நோய் மிக இளம் வயதிலேயே கண்டறியப்படுகிறது. ஆனால், டைப் 2 நீரிழிவு நோய் வயதுக்கு ஏற்ப ஏற்படுகிறது. இந்த வகை நீரிழிவு நோயில், உங்கள் உடல், இன்சுலின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்வதை நிறுத்துகிறது, இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. எனவே, இதுபோன்ற சில பொதுவான அறிகுறிகள் தோன்றினால், தாமதிக்காமல் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
சாப்பிட்ட பிறகு அல்லது கோடைக்காலத்தி தாகம் ஏற்படுவது இயல்பானது. இருப்பினும், வழக்கத்தை விட அடிக்கடி தண்ணீர் குடிக்கத் தோன்றுவது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
இரவில் சிறுநீர் அதிகமாக போவது
உங்கள் உணவிலோ, தினசரி வழக்கத்திலோ எந்த மாறுதலும் இல்லாமல், உடல் எடை அசாதாரண விகிதத்தில் குறைந்தால் அது நீரிழிவின் அறிகுறியாக இருக்கலாம்
பொதுவாக, நீண்ட நேரம் ஒரே நிலையில் இருந்தால், முதலில் கை, கால்கள் கனமாகி செயலிழந்துவிடும். வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி கை கால்கள் மரத்துப் போனால் சற்று கவனமாக இருக்கவும்
முன்பு போலவே வேலை செய்தாலும், அதிகம் சோர்வடைந்தாலும், பலவீனமாக உணர்ந்தாலும் அது கவனிக்க வேண்டிய அறிகுறி ஆகும்.
உயர் இரத்த சர்க்கரையின் அறிகுறிகளில் ஒன்று சருமத்தின் அதிகப்படியான வறட்சி ஆகும். வறட்சியுடன், அரிப்பு, லேசான சொறி போன்றவையும் காணப்படும்.
அன்றாட வாழ்க்கையில், ஏற்படும் சிறிய கீறல்களும், காயங்களும் ஆற, கூடுதல் நேரம் எடுக்கும் போது கவனமாக இருப்பது நல்லது.
உங்களைச் சுற்றியுள்ளவர்கள் இந்த பொதுவான அறிகுறிகளில் சிலவற்றைக் கண்டால், நீங்கள் விரைவில் சிகிச்சை பெற வேண்டும். எந்த நோயையும், ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால், முழுமையாகக் குணப்படுத்தாவிட்டாலும் கட்டுப்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்